Jaya Jaya Sankara Hara Hara Sankara – Does Bhagawan run into Conundrums? In this Sri Periyava who is the Supreme Lord himself tells us the way it happens and how Bhagawan resolves it.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for an enthralling drawing. Look at the faces of Lord Krishna and our Bhagawathpadhal…Enna deiveekam…. Rama Rama
கீதா வாக்ய பரிபாலனம்: பிரச்னையும் தீர்வும்
கீதா வாக்யத்தில் ஒரு சின்ன இடறல் இந்தப் புதுச் சூழ்நிலையில் ஏற்பட்டது. அவதாரம் பண்ணி தர்மத்தை நிலைநாட்ட வேண்டியதுதான். அதில் ஸந்தேஹம் இல்லை, இடறல் இல்லை. பின்னே எதில் என்றால்,
பரித்ராணாய ஸாதூநாம், விநாசாய ச துஷ்க்ருதாம்
என்றாரே, அதிலேதான் (இடறல்) . “ஸத்துக்களுடைய ரக்ஷணைக்காகவும், அஸத்துக்களுடைய அழிவுக்காகவும், அவதாரம் எடுக்கிறேன்” என்று கீதையில் சொன்னார். சங்கராவதார ஸமயத்தில், முதலில் சொன்ன ஸாது ரக்ஷணையைப் பற்றி ச்ரமமிருக்கவில்லை. மற்ற பூர்வ அவதாரங்களின்போது இருந்த அளவு (ச்ரமம்) கூட (இப்போது) இருக்கவில்லை. ஏனென்றால், முன்னெல்லாம் பொதுவாக ஜனங்கள் எல்லாருமே ஸத்துக்களாகத்தான் இருந்தார்கள். எனவே அத்தனை பேரை ‘பரித்ராணம்’ என்பதாகக் கட்டி காப்பது என்றால் ச்ரமமான கார்யமாகத்தான் இருந்திருக்கும். எதையும் ஸாதிக்க வல்லவனான ஈச்வரனின் அவதாரமானதால் அவனால் இதைச் செய்யமுடிந்தது. இப்போது கலியிலே அவதரிக்கும்படியான இந்த ஸந்தர்பம் வந்த போது ஸத்துக்கள் பூர்வயுகங்களைவிட ரொம்பக் குறைவாகவே இருந்தார்கள். அதனால் இப்போது ஏற்பட வேண்டிய அவதாரத்திற்கு ஸாதுரக்ஷணை — “பரித்ராணாய ஸாதூநாம்” என்ற பாதி — முன்னளவுகூட ச்ரமமில்லாமல் ஸுலப ஸாத்யமான காரியமாகவே இருந்தது.
ஆனால் இன்னொரு பாதி, “விநாசாய ச துஷ்க்ருதாம்” என்று தப்புப் பண்ணுபவர்களை அழிப்பதைச் சொன்னாரே, அதிலேதான் பரமாத்மாவுக்கே க்ருஷ்ணாவதாரத்தில் சொன்ன வாக்குப்படிப் பண்ணுவதென்பது ‘ப்ராப்ள’மாகி விட்டது! அந்த அவதாரத்திலேயும் அதற்கு முன்னேயும் தப்புப் பண்ணுபவர்கள் அஸுரர்கள், ராக்ஷஸர்கள், சில துஷ்ட ராஜாக்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பாகச் சில கோஷ்டிகளாக இருந்தனர். பொதுவான ஜன ஸமூஹத்திலிருந்து பிரித்து அவர்களை ‘ஐஸொலேட்’ பண்ண முடிந்தது. அப்படிப் பண்ணி அந்தப் பூர்வ அவதாரங்கள் தப்புப் பண்ணியவர்களை ஸம்ஹாரம் செய்தன. “விநாசாய ச துஷ்க்ருதாம்” என்று சொன்னபடிச் செய்ய முடிந்தது.
ஆனால் இப்போது ஆசார்யாள் காலத்தில் எப்படியிருந்தது? அஸுரர், ராக்ஷஸர் என்று எவரும் வெளிப்படத் தெரியவில்லை. கம்ஸன், ஜராஸந்தன், காலநேமி போல அஸுரர் மாதிரியே நன்றாகத் தெரிந்தவர்களும் இப்போது இல்லை. துர்யோதனன் பரிவாரம் போல மநுஷர் மாதிரியே நன்றாக இருந்துகொண்டு, ஆனால் அஸுரத்தனமாக இருந்தவர்கள் க்ருஷ்ணர் காலத்தைவிட ரொம்ப நிறையப் பரவிவிட்டார்கள். அதோடுகூட, துர்யோதனப் பட்டாளம் வெளிப்படவே கொடூரமாக நடந்து கொண்டதுபோல இல்லாமல், வெளியிலே பார்த்தால் நல்லது மாதிரி இருந்து கொண்டே, நல்லதைச் சொல்லிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கிற மாதிரி தோன்றிக்கொண்டே, ஏராளமான பேர் அதர்மமாகப் பண்ணுவதென்பதும் இந்த யுகத்துக்கே ஸ்பெஷலாகச் சேர்ந்தது! மொத்தத்தில் ‘துஷ்க்ருத்’கள் என்று கீதையில் சொல்லியிருக்கும் ‘கெட்டது செய்கிறவர்’களை ஜனஸமூஹத்திலிருந்து பிரித்து நாசம் செய்து விட்டு ஸாதுவான ஜன ஸமூஹத்தை ரக்ஷிப்பது என்பதற்கு இந்த யுகத்தில் இடமில்லாமல் அபூர்வமான சில ஸத்துக்களைத் தவிர ஜனஸமூஹம் முழுவதுமே அதர்ம ப்ரவாஹத்தில் முழுகித் தப்புப் பண்ணிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் “விநாசாய ச துஷ்க்ருதாம்” என்று செய்வதனால் அத்தனை பேரையும் ஹதம் பண்ணி விடுவது என்றுதான் ஆகும்! இப்படியொரு “யுனிவர்ஸல் ஹாலோகாஸ்ட்” (ஸர்வ ஜீவ ஸர்வ நாசம்) செய்வதா தர்ம ஸம்ஸ்தாபனம்? பின்னாடி எப்போதோ வரவேண்டிய ப்ரளயத்தை உண்டு பண்ணுவதா அவதார லக்ஷ்யம்? மநுஷர்களோடு ஈச்வரனும் அன்பிலே பழகுவது, அப்படியே தர்மத்துக்கு வழிகாட்டி அழைத்துப் போவது என்று எதுவுமில்லாமல் ஸர்வ நாசம் செய்வதென்றால் அப்போது தர்மமும் ஸம்ஸ்தாபனமாகாமல் நசித்துப் போக வேண்டியதுதான். இப்படி ஒரு அவதாரம் பண்ணவே முடியாது. அவதார ‘பர்ப’ ஸுக்கே அது விரோதம்.
இதைத்தான் பரமாத்மாவுக்கு ‘ப்ராப்ளம்’ என்று சொன்னது. அஸுரன் என்று வெளியில் யாருமில்லாமல் ஸர்வ ஜனங்களுக்குள்ளேயும் புகுந்து கொண்டிருக்கும் போது எப்படி ஸம்ஹரிப்பது? விச்வாமித்ரருக்கு யாகம் செய்யணுமென்று தர்மமான எண்ணம் இருந்தது. அஸுரர் என்று வெளியிலே இருந்த சிலர் இடைஞ்சல் பண்ணினார்கள். ராமர் போய் அவர்களை வதைத்து — துஷ்க்ருத்களை விநாசம் செய்து — யஜ்ஞ ரக்ஷணமும் ஸாது பரித்ராணமும் பண்ணினார். கலியில் விச்வாமித்ரர் இருந்தால் அவருடைய மூளைக்குள்ளேயே அஸுரன் போய், முதலுக்கே அவருக்கு யாகம் செய்யத் தோன்றியிருக்காது! இப்படி தர்ம கார்யங்கள் அரூபமான துஷ்ட சக்திகளால் நின்று போய்விடுகிற ஸமயத்தில் ஒரு அவதாரத்தைக் கொண்டு துஷ்ட சிக்ஷணம், சிஷ்ட ரக்ஷணம், தர்மோத்தரணம் ஆகியவற்றைச் செய்வதென்றால் எப்படி?
நம்மாலானால் இதற்கு ஸொல்யூஷன் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும். பரமாத்மாவானதால் ஸுலபமாகக் கண்டுபிடித்துவிட்டார்! “கலிகால அவதாரங்களில் துஷ்ட ஜனங்களை ஸம்ஹரிப்பதில்லை. ஜனங்களுக்குள்ளே புகுந்துகொண்டிருக்கும் துஷ்டத்தனத்தையே ஸம்ஹரிக்கவேண்டும். இப்படிப் பண்ணி ஜனங்களை நல்லவர்களாக்கிவிடவேண்டும். ‘விநாசாய ச துஷ்க்ருதாம்’ – ‘கெட்டகார்யம் செய்பவர்களுடைய அழிவின் பொருட்டு’ என்பதற்கு ஒரு அமென்ட்மென்ட் போட்டுவிட்டால் போதும். ‘துஷ்க்ருதாம்’ (கெட்டகார்யம் செய்பவர்களுடைய) என்பதை ‘துஷ்க்ருத்யானாம்’ (கெட்டகார்யங்களுடைய) என்று ‘அமென்ட்’ செய்துவிட்டால் போதும்” என்று (பரமாத்மா) ஸொல்யூஷன் கண்டுபிடித்துவிட்டார்!
லோகம் பூரா நடக்கும் கோடி கோடி தப்புக் கார்யங்களை எப்படி அழிப்பது, அது மட்டும் முடியுமா என்றால்: அந்தக் கார்யங்களை அழிக்க வேண்டாம். அவை விளைவுதான். இந்த விளைவுக்குக் காரணமுண்டு. வித்து உண்டு. வித்தை ஊன்றினால்தானே விளைச்சல் வரும்? காரியத்துக்கு வித்து எண்ணம். கெட்ட எண்ணம் முதலில் தோன்றி, அதன் நிறைவேற்றத்திற்காகவே அப்புறம் கெட்ட கார்யம் தோன்றுகிறது. ஆனபடியால் ஜனங்களுடைய கெட்ட எண்ணம் போகும்படியாக, அதாவது அவர்களுடைய அறிவு திருந்தும்படியாகப் பண்ணிவிட்டால் போதும். அவதார நோக்கமான தர்ம ஸமஸ்தாபனம் நடந்துவிடும்.
‘அறிவு திருந்தும்படி எப்படிப் பண்ணுவது? வேறே எப்படி? எல்லாருக்கும் தெரிந்ததுதான்: நல்லதை நல்ல படியாக எடுத்துச் சொல்வதால்தான். ஞானோபதேசத்தினால்தான். வாயுபதேசம் மட்டும் போதாது. வாழ்க்கை உதாரணத்தோடு அது கலந்து வந்தால்தான் பலன் தரும், அதனால் ஞானியாக அவதாரம் செய்யணும். ஞானி என்றால் ஸந்நியாஸியாக அவதாரம் செய்யணும்’ என்றிப்படி பகவான் தீர்மானம் பண்ணிவிட்டார்.
________________________________________________________________________________
Nurturing the words of Gita: Problem and Solution
In the new situation, a small hitch arose in the words spelt out in the Gita. No doubt the situation demanded taking the incarnation and reestablish Dharma. No hitch also. Then where was the hitch? Did He not say,
Parithraanaya Sadhoonaam, Vinaasaayacha Dushkrithaam
The hitch was in that only. He had mentioned in the Gita that He takes incarnation to provide shelter and protect the good and to eliminate the evil. In Shankara Avathara, there was not much difficulty about the first mentioned, protecting the good. The difficulty (now) was not even as much as it was during the prior incarnations. Because, in those earlier days, all the people were generally good and to shelter and protect all of them as ‘Parithranaam’, would have been indeed difficult. Since it was an incarnation of the omnipotent Lord himself, it was possible for Him to do that. When this situation arose necessitating an incarnation in Kaliyuga, good people were much less than in the previous yugas. Therefore, protecting the good, the first half, was easier and possible than it was during the previous incarnations.
But the other half, that He has talked about, ‘Vinaasaayacha Dushkrithaam – eliminating the evil’, became a ‘problem’ for the Supreme Lord himself, to implement the words, He had earlier said. In that incarnation and in earlier ones, the wrong doers used to be a few particular ones, like the rakshasas, a few evil kings, their associates. etc. Generally, it was possible to identify them from the public and ‘isolate’ them. Doing it that way, the previous incarnations could eliminate the wrong doers. It could happen as stated, ‘Vinaasaayacha Dushkrithaam’.
However, what was the situation during the days of Acharya? Asuras and Rakshasas were not obviously visible. Now, there were also not people like Kamsa, Jarasandha, Kalanemi, etc. who could be identified in the likes of asuras. Lot more people than in the days of Krishna, who lived as humans but displayed the qualities of asuras, like Duryodhana and his associates, had spread out. In addition, the specialty for this yuga was that there were lots of people, who, instead of being openly behaving bad like Duryodhana and his associates, outwardly behaved like good ones, talking and posing good but were actually doing evil. In totality, instead of the possibility of isolating the ‘Dushkrit’, the wrong doers mentioned in the Gita and eliminating them from the general public and protecting the good, the entire community, except for a few rare good ones, was drowned in the evil deluge and indulging in wrong doing. In such a situation, ‘Vinaasaayacha Dushkrithaam’ would mean eliminating everyone. Does reestablishing Dharma mean to undertake such a Universal holocaust? Is the objective of incarnation, triggering the dissolution, which is supposed to be brought about much later? If it has to be universal destruction, without the supreme incarnate being in the midst of people, loving them and hand holding them in the path towards Dharma, then Dharma also would get eliminated without getting reestablished. Such an incarnation cannot be done at all. It will be entirely in contradiction to the very purpose of incarnation.
This is what I mentioned as problem to the Supreme Lord himself. How to eliminate, if there was nobody outwardly as asura, but camouflaged in all the people? Sage Vishwamitra had the good intention of undertaking a holy sacrifice (yaga). A few asuras, who were outside, created trouble. Lord Rama went there and killed – ‘Dushkrithaas were Vinaasam’ and protected the ceremony and also provided shelter to the good people. If Vishwamitra had been in Kaliyuga, an asura would have entered his mind itself and he would not have even thought of performing a sacrificial rite, in the first place. In such a situation where dharmic activities are stopped by the formless evil powers, how is it possible to teach the evil, protect the gentle and revive righteousness, with the help of an incarnation?
Had it been us, it would not have been possible for us to find a solution to this. He being the Supreme Lord, found a way, very easily. Since it is the time of Kali, evil people may not be killed but the evil thoughts that have entered the minds of the people, need to be erased. This way, people can be reformed. It would suffice to add an amendment to ‘Vinaasaayacha Dushkrithaam’- ‘for the destruction of the people indulging in wrongful activities’. The supreme Lord found the solution that it would be enough if Dushkrithaam (of the people indulging in wrongful activities), is amended as ‘Dushkrityaanaam’ (of wrongful activities).
If it is asked how to destroy all the wrongful activities that take place in crores and crores all over the world and whether such a thing was possible, those activities need not be destroyed. These are actually, consequences. This consequence has a cause, a seed. Is it not that only if seeds are sown, harvest of the crops is possible? The seed for the action is the thought. The evil thought takes place first and to implement, the evil activity takes place. Therefore, it would be enough, if the evil thoughts of the people are removed, that is, if their minds are reformed. The objective of the incarnation, reestablishing Dharma, would be fulfilled.
How to reform the mind? How else? It is known to everybody. Only by putting across, properly, the good things. Only by preaching the superior knowledge. Mere oral preaching will not do. It has to be combined with a living example. Therefore, incarnation has to take place as a person of superior knowledge (Gynani). Bhagawan, therefore, decided to take His incarnation as a Gynani, that is a Sannyasi.
_____________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Excellent!! Jaya jaya Sankara Hara Hara Sankara!!
Very nice Drawings apt to the concept! Superb Sowmya!