Periyava Golden Quotes-745

நம்முடைய முன்னோர்கள் எப்படி ஆரோக்யமாகவும், தேஜஸோடும், புத்திப் பிரகாசத்துடனும், மந்திர சக்தியுடனும், ஆத்ம சாந்தியுடனும் எல்லாரும் கொண்டாடும் படியாக இருந்திருக்கிறார்கள்; இப்போதுள்ள நாமோ எத்தனை வியாதி வக்கையோடு, ஒரு பவிஷுமில்லாமல், புத்தி மங்கி, மந்திர சக்தி என்கிறவரை போகாமல் ஸாதாரண புருஷ சக்திகூட இல்லாமல் எப்போதும் அசாந்தியோடு இருந்து வருகிறோம் என்பதைப் பார்த்து, அவர்கள் பின்பற்றி வந்த சாஸ்த்ராசரணைகள் கஷ்டமாயிருக்கிறதென்று நாம் விட்டு விட்டதுதான் நமக்கு அதைவிட எவ்வளவோ பெரிய நித்ய கஷ்டத்தைத் தந்திருக்கிறதென்று புரிந்து கொண்டு, அவற்றை இப்போதிலிருந்தாவது அநுஸரிக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் சிரமமாயிருந்தாலும் பழக்கிக்கொண்டு ஆசாரமாக வாழ ஆரம்பித்து விட்டால், கொஞ்ச நாளிலேயே நம் சாஸ்திரங்கள் க்ஷேமத்துக்கும் ஸெளக்யத்துக்கும் ஏற்பட்டனவேயன்றிக் கஷ்டம் உண்டு பண்ணுவதற்கல்லவென்று தெரிய ஆரம்பித்துவிடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Our elders have led their lives endowed with good health, a tejas about them, bright intellect, power of mantras, and peace of mind; a life celebrated by one and all. On the contrary, we are now living with many diseases and a dull intellect; leave alone the mantra shakti, we do not even have the purusha shakti; we are all the time without peace of mind. Seeing all this we should understand that we have come to this state only because we have discarded the sastras and aacharams that the elders followed, since we thought they were difficult to follow. Disrespecting the sastras has brought more difficulties on us. Understanding this, we should start practicing them at least from now. Even if we find it a little difficult in the beginning, if we start practicing them, we will realize that our sastras were put forth for our welfare alone; not to create difficulties for us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara, Janakiraman, Nagapattinam

Leave a Reply to Janakiraman. NagapattinamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading