168. Maha Periyava’s Skanda Puranam-He Who Is The Ultimate Fulfillment Of All Ways (Part 2)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter Sri Periyava explains how does Lord Parameswara and Ambal are detachment personified. Goes onto explain the state of Subramanya Swami as well in this context.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Bharathi Shankar for the translation.

சகல மார்க்க நிறைவான சரவணபவன் (Part 2)

ஞானமும் யோகமும் முடிகிற இடத்தில் ஒர் ஆட்டம், அசைவு இல்லை. லோகமே இல்லை. உணர்ச்சிகளே இல்லை. இதெல்லாம் பட்டுப்போன இடம் அது. இப்படிப் பட்டுப்போன நிலையில் ஈசுவரனை ‘ஸ்தாணு’ என்று சொல்வது வழக்கம்; ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். சுசீந்திரத்தில் ‘ஸ்தாணுமாலயன்’ என்று கேட்டிருப்பீர்கள். மூம்மூர்த்தியும் சேர்ந்த ஸ்வரூபம். அதில் ‘ஸ்தாணு’ என்பது பரம வைராக்கியமான பரமேச்வரன்தான். உணர்ச்சியில்லாவிட்டால், ‘மரத்து’ப் போகிறது என்கிறோமல்லவா? அப்படிக் காய்ந்து மரமாக இருக்கிறவர் ஸ்தாணு. பக்தி அநுக்கிரகத்துக்காக கருணையில் நனைந்திருந்தபோது “ஆர்த்ர”ராக (ஆதிரையனாக) இருப்பவரே இப்படி ஞானத்தில் ‘பட்ட கட்டை’யாயிருப்பார். அதே மாதிரிதான் அம்பாளும், கருணாமயமான அவரும் பரம விரக்தியாக இருக்கிற ஒர் அவஸ்தை (நிலை) உண்டு. அவள் எப்போதும் ஈசுவரனையே பற்றிப் படர்ந்திருப்பவள். அவர் மரமாக இருந்தால், இவள் கொடியாகச் சுற்றிக் கொண்டிருப்பாள். ஸ்ரீசைலத்தில் அவர் அர்ஜுன (மருத) மரமாக இருக்கிறார்; இவள் மல்லிகைக் கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்; அதனால்தான் அவருக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயர். அது நல்ல பசுமையோடு இருக்கப்பட்ட மரம். பட்ட மரமாக அவர் இருக்கும்போது அம்பாள் என்ன செய்கிறாள்?

பரமேசுவரன் பச்சைப் பசேலென்று கப்பும் கிளையுமாக ஒரு மரம் மாதிரி இருந்தால், அம்பாள் ஒரு பசுங்கொடியாக அவரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவர் பட்ட மரமாக, காய்ந்த கட்டையாக இருக்கும்போது, அவள் என்ன செய்கிறாள்? அப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால், பச்சைக் கொடியாக இல்லை. இலையே இல்லாமல் நார் மாதிரியான கொடியாக, அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அபர்ணா, அபர்ணா என்று அவளுக்கு ஒரு பெயர். ‘பர்ணம்’ என்றால் இலையே இல்லாத கொடியாக இருக்கும்போது அம்பாள் அபர்ணாவாகிறாள். பர்வத ராஜ குமரியாகப் பிறந்து ஈஸ்வரனைப் பதியாக அடைவதற்காக அம்பாள் தபஸ் பண்ணினபோது இலையைக் கூடச் சாப்பிடாமல், கடும் நியமத்தோடு இருந்ததாலேயே இந்தப் பெயர் உண்டாயிற்று என்று ஒர் அர்த்தம் சொல்வதுண்டு. எனக்கென்னவோ ‘ஸ்தாணு’ வாக ஈசுவரன் இருக்கும்போதும், அவனை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிற அம்பாள் கொடிதான் ‘அபர்ணா’ என்று தோன்றுகிறது.

ஈசுவரனும் அம்பாளும் இருந்தால் ஸோமாஸ்கந்தமாக அங்கே ஸுப்ரம்மண்யரும் இருக்க வேண்டும் அல்லவா? ஈசுவரன் ‘ஸ்தாணு’வாகவும், அம்பாள் ‘அபர்ணா’வாகவும் இருக்கும்போது முருகன் எப்படியிருக்கிறார்? ‘விசாக’ ராக இருக்கிறார் என்று சொல்லலாம். ‘சாகை’ என்றால் கிளை என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் இன்ன வேத சாகை என்றே பெயர் சொல்வார்கள். ‘வி’ என்பது பல அர்த்தங்களில் வரும். சில சமயங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ‘வி’ சேர்ப்பதுண்டு. உதாரணமாக, ஜயம் – விஜயம். ஆனால் ‘வி’க்கு எதிர்மறை (Negative) பொருளும் உண்டு. ‘தவா’ என்றால் புருஷனை உடையவள்: ‘விதவா’ என்றால் புருஷன் இல்லாதவள். இந்த ரீதியில் ‘வி-சாக’ என்றால் ‘கிளை இல்லாத’ என்று அர்த்தம். அப்பா பட்ட கட்டையாகவும், அம்மா இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது, குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அது பரம வைராக்கிய ஸ்வரூபம்.

சுப்ரம்மண்யர் பரம வைராக்கியமாக, ஞானியாக, ஆண்டியாக, தண்டாயுதபாணியாக இருக்கிறார். அவரே வல்லீ தேவசேனா சமேதராகக் கல்யாண சுப்ரம்மண்யராகவும் இருக்கிறார். இம்மை மறுமை இரண்டுக்கும் உதவுபவராகவும், வழிகாட்டுபவராகவும், அவர் இருப்பதையே இந்த இரண்டு கோலங்களும் காட்டுகின்றன.

__________________________________________________________________________

He Who Is The Ultimate Fulfillment Of All Ways (Part 2)

There is not an iota of movement at the place where Gnyana and Yoga come to a standstill. No world at all. No feelings either. It’s a place where all these things have parched and dwindled into nothingness. It is customary to call Eswaran in such a parched state as “Sthaanu”; it means “Patta Kattai” (dried trunk). You might have heard about “Sthaanumaalayan” in Suseendhram. It’s a combined form of Mummoorthy (Brahma, Vishnu, and Shiva). In it, “Sthanu” refers to Lord Parameswara who is known for His “Parama Vairagyam” (utmost detachment). When there is no feeling, don’t we say “it’s numb?” “Sthanu” is one who is in such a state of dried wood. The same God who is an “Arthrar” or “Adhirayan” when He was drenched by the ocean of Mercy to bless His devotees with grace for their Bhakthi, stands as a “Patta Maram” (dried and hardened wood) in the state of Gnyanam. In the same way, there is an Ultimate state where Ambal and the all merciful Lord remain in utmost detachment. She is the one who always clings on to Eswaran, winding around Him. If He stands as a tree, She winds around Him as a creeper. In Srisailam, He stands as an Arjuna tree; she is winding around Him as a Jasmine creeper; due to which He has derived the name Mallikarjunar. That is a tree which is afresh and green. What does Ambal do when He happens to be a dried wood?

If Parameswaran remains as a live green tree with fresh leaves and branches, Ambal winds around Him as a lively green Creeper. But what does She do when He stands as a dead tree, hardened as a dried wood? She still remains wound around Him. But not as a live green creeper. She winds around Him like a wire like creeper, without any leaves. There is a name for Her as Aparna. “Parnam” means leaf. Therefore when She remains as a leafless creeper, She becomes Aparna. It is customary to attribute another meaning to this name that when Ambal was born as Parvatha Rajakumari (princess) and undertook a Thapas (Meditation and Life in Austerity) in order to attain Eswaran as Her husband, She followed such a strict regimen and led an austere life without consuming even a leaf and thereby got this name. But as far as I’m concerned, it only seems proper that She is the creeper Aparna who ceaselessly winds around the Eswaran even when He stands as a “Sthaanu” without giving Him up.

If Eswaran and Ambal stay at a place, then there ought to be Subramanya present there too as Somaaskandar, is it not?  When Eswaran remains as “Sthaanu” and Ambal as “Aparna”, then how does Subramanya stand there? We can say that He stands as “Visaagar”.  “Saagai” means “branch”. There are many branches in Vedas. Each branch is referred to as “this particular Veda Saagai” with a specific name. “Vi” (in Sanskrit) comes with a lot of meanings. At some places, “Vi” is used to elevate and speak highly of a thing. The phrase “Jayam-Vijayam” can be cited as an example. But there is an opposite and negative meaning to “Vi” too. “Thava” means a woman  who has a husband. “Vithava” means one who has lost her husband. This way, “Vi-saaga” would stand to mean “without branch”. When the father remains as a dead and dried wood and the mother as a leafless creeper, The child Murugan too stands as a “branchless offspring”. That is the Ultimate form of Detachment or Renunciation” (Parama Vairagya Swaroopam).

Subramanya stands as the most detached, all knowing, penniless, and Dhandayuthapani (holding a Dhandam, meaning a long stick). The same person stands as a Kalyana Subramanya with His consorts Valli and Dhevasena too. These two forms depict the truth that He stands as the Guide and Aide, helping us in both the earthly as well as the Heavenly worlds.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: