Tamizh language should be fostered along with devotion – Emphasized Sri Bala Periyava

Jaya Jaya Sankara – These days when the grand old Tamizh has been talked as a standalone language how important it is to grow and foster this language along with Bhakthi has been emphasized by HH Bala Periyava.

Many Jaya Jaya Sankara to Smt. Uma Gururajan for the translation and Shri.S.Venkatesh for the share. Rama Rama

பக்தியுடன் கூடிய தமிழை வளர்க்க வேண்டும்.

தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பக்தியுடன் கூடிய தமிழை வளர்க்க வேண்டும் என காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் வலியுறுத்தினார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் சென்னபுரி பக்த ஜன சமாஜம் சார்பில் ஸ்ரீஜெயேந்திரர் தமிழ்ப் பாடசாலை 5-ம் ஆண்டு விழா, திருவள்ளுவர் திருநாள், திருமுறை மற்றும் பாவை விழா ஆகிய முப்பெரும் விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.

விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திரர் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய விஜயேந்திரர், ‘‘தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் பெரியவர்கள் பல்வேறு தொண்டாற்றியுள்ளனர். தமிழை பிரியத்துடன் வளர்க்க வேண்டும். திடமான தமிழகத்தை உருவாக்க வேண்டும். தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

பக்தியுடன் கூடிய தமிழை வளர்க்க வேண்டும். வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி சேவைக்காகவும் தமிழை வளர்க்க வேண்டும்’’ என்றார்.

‘தெய்வப் புலமை திருவள்ளுவ நாயனார்’ என்ற தலைப்பில் ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் எஸ்.சங்கர சுப்பிரமணியனும், ‘தேவார திருவாசக உருக்கம்’ என்ற தலைப்பில் டாக்டர் சுதா சேஷையனும் சிறப்புரையாற்றினர். ம.வே.பசுபதி, பனசை அருணா, மகாவித்வான் வே.சிவசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘திருமுறைச் செம்மல்’ பட்டமும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.

மேலும் 40 தமிழறிஞர்களுக்கு தமிழ்ப் புலவர் சான்றிதழும், 20 தமிழ் அறிஞர்களுக்கு செந்தமிழ்ப் புலவர் சான்றிதழும் வழங்கப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக,
ஸ்ரீஜெயேந்திரர் விஜயம் என்ற நாட்டிய நாடகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நன்றி: ​ 

தி இந்து 

__________________________________________________________________________ 

Tamizh language should be fostered along with devotion – Emphasized Sri Bala Periyava.

The greatness of Tamil language should be spread throughout the world.  Sri Kanchi Kamakoti Peetadhipathi Sri Vijayendrar emphasized the importance of fostering devotion along with Tamil.

Yesterday, in Mylapore, Chennai, Sri Kanchi Kamakoti Peetam Chennapuri Bhaktha Samajam arranged for a combined celebration of three functions under one roof – the Fifth Year Anniversary celebrations of Sri Jayendrar Tamil Patashala, Tiruvalluvar Day and Tirumurai-Pavai Vizha.

​​Kanchi Kamakoti Peetadhipathis Sri Jayendrar and Sri Vijayendrar graced the function and blessed the devotees.  In his address, Sri Vijayendrar said “There are many great people who have done much service for fostering Tamil and Tamil Culture.   Tamil should be augmented with love and affection.  Tamilnadu should be strengthened.  The greatness of Tamil Language should be spread throughout the world.   Devotion along with Tamil has to be fostered.  Not only for job opportunities but also for service Tamil should be fostered.”

Two guest speakers gave special lectures.  While “Kalaimagal” Editor Kizhambur S. Sankara Subramanian spoke on the topic “Deiva Pulamai Tiruvalluva Naaynaar”, Dr. Sudha Seshaiyan gave a lecture titled “Thevara Thiruvasaga Urukkam”.

M.V. Pasupathi, Panasai Aruna, and Mahavidwan V. Sivasubramanian were honoured with cash award and the title “Tirumural Chemmal”.

Further, “Tamil Pulavar” certificates were awarded to 40 Tamil scholars and “Sendhamizh Pulavar” certificates were awarded to 20 Tamil Scholars.

Prizes were distributed to the students who won in various contests conducted earlier.

Many participated in the dance drama “Sri Jayendrar Vijayam” which was performed earlier.

Courtesy: The Hindu.



Categories: Deivathin Kural

2 replies

  1. ஸ்ரீ பலபெரியவளிடம் நன்றாக பேச கூடியவன். அவரை நான் அறிந்தவரை , அவர் பன்முக தன்மை கொண்டவர்.அபார ஞாபக சக்தி.என் மகன் இப்போ நியூசீலாந்தில் இருக்கான் என்றபோது, முன்பு ஆஸ்திரேலிய மெல்போர்னில் தானே இருந்தார்..? என்றார். நாலு வருஷம் முன் போகிறபோக்கில் பேசியது..அப்படி ஒரு ஞாபகம். எனக்கு மரம்,செடி தாவரங்களை பற்றி சொன்னவர். நம் குழந்தைகள் தற்காலத்தில் செல்லும் பாதை குறித்து ரொம்ப விசனப்படுகிறார்…அதன் விளைவே வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை மூலம் ப்ரவசனங்கள் …கிரகணி என்ற அமைப்பின் மூலம் நமது தர்மங்களை குறுந்தகடுகளாக வெளியிட்டு உள்ளார். இதில் கோலம்,பாரம்பரிய சமையல், சுலோகம், எல்லாமே உள்ளது. சுருங்க சொன்னால் மஹாபெரியவா ,புதுபெரியவா சொன்ன , செய்த, செய்ய நினைத்தவைகளை நடைமுறை படுத்தி வருகிறார்…சும்மாவா…இருவராலும் தேர்வு செய்யப்பட்டு ..இருவரிடமும் பயின்றவராயிற்றே….எல்லாம் நாம் செய்த புண்யம்…ஜெய ஜெய சங்கர..ஹர ஹர சங்கர..

Trackbacks

  1. IMPORTANT-Respect for Tamizh-Sri Matam and Our Periyavas – Sage of Kanchi

Leave a Reply

%d bloggers like this: