கட்டாகத் தெரிகிற சாஸ்திரங்கள் வாஸ்தவத்தில் கட்டுமில்லை. நிஜ ஸ்வதந்திரமான மோக்ஷத்துக்கு வழி பண்ணுவது அதுதான். ‘தொம்பங் கூத்தாடி’ என்பார்கள். ‘ஸ்தம்பக் கூத்தாடி’என்பதுதான் அப்படித் திரிந்து வந்திருக்கிறது. ஸ்தம்பம் என்பது தூண். மாஜிக் ஷோவில் தொம்பங் கூத்தாடி வருவான். அநேகத் தூண்களில் ஒன்றில் அவனை ஏகப்பட்ட கட்டுப் போட்டுக் கட்டி வைத்திருக்கும். ஒரு திரையால் சொடக்குப் போடுகிற நாழி அவனை மறைத்துவிட்டுத் திரையை எடுப்பார்கள் அந்த க்ஷண காலத்துக்குள் அவன் எப்படியோ அத்தனை கட்டுக்களையும் அவிழ்த்துவிட்டு அந்தத் தூணிலிருந்து விடுபட்டு, அதோடு மட்டுமில்லாமல் இன்னொரு தூணில் அதே மாதிரி அவ்வளவு கட்டுக்களையும் போட்டுக் கொண்டு காணப்படுவான். அவனுக்கு அப்படி ஒரு தந்திரம் தெரியும். முதலில் கட்டினபோது கை, கால்களை ஒரு மாதிரி அகட்டி [அகற்றி] வைத்துக்கொண்டிருப்பான்; திரை போட்டவுடன் அவற்றை குறுக்கிக் கொள்வான் உடனே கட்டுத் தளர்ந்து விடும். அது கீழே விழுவதற்குள் மறுபடியும் அதே மாதிரி அகட்டிக் கொண்டு இன்னொரு தூணுக்குப் போய்விடுவான். இப்படித் தன் அங்கங்களைக் குறுக்கிக் கொள்வதாலேயே, அவற்றுக்கு மேலே போட்ட கட்டு விரிகிற மாதிரிதான் சாஸ்திரக் கட்டுக்குள்ளும். அஹங்காரத்தை மேலேயிருந்து கட்டுவது சாஸ்திரம். நாமே உள்ளுக்குள்ளிருந்து நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக நம்மைப் பக்குவப்படுத்துவதற்கே இந்தக் கட்டு. மணி முடிச்சாக ஒரு கட்டு விழுந்து அதை அவிழ்க்க முடியாமல் ஆகிறபோது என்ன செய்வார்களென்றால் அந்தக் கட்டை விட இறுக்கமாக இன்னொரு கயிற்றால் சுற்றுவார்கள். சுற்றுவார்களே தவிர இதை (இரண்டாவது கயிற்றை) முடிச்சாகப் போட மாட்டார்கள். இப்படி இறுக்குகிற போது கட்டுப்படுகிற வஸ்து முன்னைவிடக் குறுகுமாதலால், முதலில் மணி முடிச்சு விழுந்த கயிறு இப்போது அதற்குத் ‘தொளதொள’ என்று ஆகிவிடும். அதனால் முடிச்சை அவிழ்க்காமலே அந்தக் கயிற்றை அப்படியே எடுத்துப் போட்டு விடலாம். அப்புறம், முடிச்சுப் போடாமல் இப்போது இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற கயிற்றையும் விட்டுவிடலாம். அப்போது வஸ்து ஒரு கட்டுமில்லாமல் ஸ்வதந்திரமாய்விடும்! அஹங்கார மனஸ் நம்மைக் கட்டிப் போட்டுப் படுத்துகிற பாட்டில் ஸம்ஸார பந்தம் மணி முடிச்சாய் விழுந்திருக்கிறது. இப்போது, இதைவிட இறுக்கம் மாதிரித் தெரிகிற ஆசாரக் கட்டுக்களைப் போட்டுக் கொண்டால் அப்புறம் இரண்டு கட்டும் போய் நிஜமான ஆத்ம ஸ்வதந்திரத்தை அடையலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Sastras that seem to be repressive show the path to achieve true freedom, which is moksham itself. There is a word ‘thomban koothadi’. It is the modified version of the word ‘sthambha koothadi’. ‘sthambham’ means pillar. This ‘thomban koothadi’s tricks form a part of magic shows. Initially he will be seen tightly bound to a pillar with ropes. Someone will wave a cloth in front of him for a few seconds. Within that short while, the koothadi would have unbound himself from the knots and the pillar and will be seen bound the same way to another pillar. He knows the trick involved. When bound the first time, he would have done so by spreading his hands and feet. When he is covered by the cloth, he will bring his hands and feet closer, wherein the knots will become loose. Before the rope falls down he will move to another pillar and again spread his hands and feet. When the hands and feet are compressed, the knots become loose. Same is the case with the bonds of sastras too. The sastras bind our external ego. This is to help us control ourselves from within. When the knot binding an object happens to be complicated, the object is bound tighter using another rope, without putting a second knot. The object gets compressed and the first rope becomes loose; it can then be easily removed. If the second rope is also taken away, the object becomes free! We are bound by our ego and the knot of samsara has become a complicated one. If we now bind ourselves with the prescribed aacharams which appear to be restrictive, then both the bindings will go away; we will achieve true freedom of the self. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply