ஒரு ஸ்நானம், மடி, அத்யயனம், ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஸ்தோத்ரங்கள் படிப்பது, எல்லோருமாகக் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணுவது, பஜனை பண்ணுவது என்று ஆரம்பித்து விட்டால், தானே கெட்ட ஆசாரங்கள் குறைய ஆரம்பித்து விடும். நாம், ‘இங்கே போகாதே, இதைத் தின்னாதே’ என்று கண்டிப்புப் பண்ணினால்தான் அங்கேயே போவது, அதையே தின்பது என்று முரண்டிக் கொண்டு தப்பிலேயே புத்தி போகும். இப்படிக் கண்டிப்பதற்குப் பதில் வைதிகமான, தெய்வ ஸம்பந்தமான சில காரியங்களில் பழக்கிவிட்டால், அப்புறம், “நாம் அந்த இடங்களுக்குப் போனால், அந்த வஸ்துக்களைத் தின்றால், ‘நீ கூடவா இங்கே வந்திருக்கே? இப்படிச் செய்யறே?’ என்று அந்த இடத்துக்காரர்களே கேட்பார்களே!” என்ற லஜ்ஜையால் பசங்கள் தாங்களாகவே ஸரியாயிருப்பார்கள். டிஸிப்ளின் பழக்கத்தால் வரவேண்டுமேயொழிய, உபதேசத்தால் அல்ல. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
If we start these practices of bath, madi, adhyayana, learning slokas in Samskritam and Tamizh, going together to temple for darshan, doing bhajans, etc. the bad aacharams will start reducing on their own. If we restrict them saying ‘Do not go there; do not eat that’, their mind will revolt and do just that. Instead of restricting them, if we channel them into Deiva Karyam (divine path), then they will on their own go on the correct path, with the thought ‘If we go there and eat those things, people there will ask us ‘Have you too come here? Are you too doing this?” Discipline should come by practice, not by doling out advice. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply