Take the baby to Mayiladuthurai Maayruranathan Temple….

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Never harm any one in actions or words is the lesson from this incident. The repurcussions may be severe…

Many Jaya Jaya Sankara Hara Hara Sankara to Smt. Prabha Aravind for the share and Shri. Ramanathan for the share. Rama Rama

Take the baby to Mayiladuthurai Maayruranathan Temple….

ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். “தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை.

மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார். பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார்.

பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.

அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது. குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது. பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது. “க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர்.

அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர். முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது? காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் – மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார்.

அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்ப்பூட்டுபவை…. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

__________________________________________________________________________________

Once Kanchi Periyavaa was blessing the devotees and there was a long queue of devotees waiting for His dharshan. There were a young couple who were waiting in the queue along with their baby boy. When their turn came, they placed the chubby toddler in Periyavaa’s feet and started crying. People around felt pity when they realized that there was no movement from the toddler who looked like a golden doll – Also, he appeared to be blind.

Periyavaa looked at the child intensely for sometime and said “It is still the same – Has not reduced” and after that He was silent for some time. No one around understood what Periyavaa meant. Then Periyavaa called an employee from the Matam and asked to bring milk and Nandhiyavattai flower.

Periyavaa dipped the flower in milk and rubbed it on the baby’s head, eyes, stomach and foot and closed His eyes to pray for sometime. Then He told the parents “Take the baby to Mayavaram (Mayiladuthurai) Maayruranathan temple and place him in the feet of Dakshinamoorthy – Start now immediately”. The couple also left for Mayiladuthurai immediately.

Even before they reached the temple, a huge crowd had gathered there. Everyone was talking about the motionless child. The parents who came with the child, had a dharshan of Lord Ganesha in the temple and went to Dakshinamoorthy Sannidhi. They placed the child in front of Dakshinamoorthy and started praying. An hour passed but the child didn’t show any movement and was still motionless. People around started talking among themselves and tried talking the parents out of their prayer and decreasing their faith.

At that time, suddenly, a white cat came running towards the crowd and went near the child. The mother of the child was safeguarding the child from the cat. Unexpectedly, the cat licked the forehead of the child and sniffed the child from head to toe and ran away. The toddler, who didn’t move from the time he was born, turned towards the Dakshinamoorthy sannidhi and smiled. The child also let out a childish prattle. The parents were overjoyed and chanted “Hara Hara Sankara Jaya Jaya Sankara” and lifted the child.

The child looked at them and smiled. Everyone who witnessed the incident were surprised and praised Periyavaa’s divinity. Sastra says that if someone had killed a cat in their earlier births, then due to the curse, they may either not be blessed with a child or a physically/mentally challenged child will be born to them.

How can we even describe Periyavaa’s greatness, who using the same feline race, removed the curse and changed the whole fate of the child? Kanchi Periyavaa has resolved many issues of his devotees who came running to Him for His help and blessing. He has cured deadly ailments caused by a person’s fate (Karma) including those which couldn’t be cured by renowned doctors.

Reading such scintillating incidents are mesmerizing and makes us long for His physical presence – “Could He not stayed with us for another 100 years”? Jaya Jaya Sankara Hara Hara Sankara.Categories: Devotee Experiences

Tags:

3 replies

 1. He is still with us and blessing us every day.

  Maha Periyavaa Thunai

 2. True. I agree in toto. Nothing more to add.!

 3. Maha Periyavaa Saranam
  Our Maha Periyavaa is the only living God who has blessed us with his physical presence then and sukshma presence now.
  We are all blessed to have been touched by this God in our lives in one way or the other.

  I always feel great gratitude for having had the privilege of seeing , feeling and meditating on this God.

  Maha Periyavaa Saranam

Leave a Reply

%d bloggers like this: