Sri Periyava Mahimai Newsletter – Aug. 8 2011

Jaya Jaya Sankara Hara Hara Sankara – While the rationalists and arm chair critics can say or write their own definitions and views on how a matam or matadhipadhi should function the reality is startlingly different. For devotees who have read quite a bit of Periyava incidents the first incident should be a bit of shock. It goes to show how much one should be careful before passing on remarks on others or institutions without knowing the actual facts. In the second lesson we see a small lesson learnt from Sri Pradhosha Mama.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation.

Happy Pongal and Gho Matha Pongal all devotees. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (8-8-2011)

மடாதிபத்யம் சுலபமானதல்ல

முன்பு ஆதிசங்கரராகவும், இப்போது நமெக்கெல்லாம் பெரும்பாக்யம் நல்க ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் திருஉருக்கொண்டு சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மைக்கு ஒப்ப ஒரு உதாரண பிரம்மஞானியாகவும் அருள்பாலிப்பது சாட்சாத் பரமேஸ்வரரேயாகும். இப்பேற்பட்ட தெய்வம் ஒரு மேன்மையான மடத்தின் பொறுப்பேற்றபோது மகானுக்கு பால்முகம் மாறாத சிறிய பருவம். மேலும் தன்னை வழி நடத்த குருமார்கள் இல்லாத சுழ்நிலை. இதற்கெல்லாம் மேலாக ஸ்ரீ மடத்தின் நிதி நிலைமையோ மிகவும் மோசமானதாக இருந்தது.

பொதுவாக சந்நியாசியாக இருப்பதென்பது மிகக் கடினமானது என்பதை நாம் உணர்கிறோம். ஆனால் அதே சந்நியாசி ஒரு மடாதிபதியாக செயல்படும்போது சுத்த சந்நியாச நிலையிலிருந்து சில விதிவிலக்குகள் அவருக்கு இருக்கக்கூடும் என்பதாலும் மடாதிபதி என்ற சலுகை அவருக்கு சந்நியாச நிலையிலிருந்து சில சிரமங்களைத் தவிர்த்து சுலபமாக  செய்திருக்கும்  என்றும்  நாம் நினைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் விஷயத்தில் அது அப்படி இல்லை என்பதை ஸ்ரீ பெரியவாளின் திருவாக்கினாலேயே பெரிய மகான் என குறிப்பிட்டவரும், ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்து பல அனுபவங்களை பெற்றவருமான பிரம்மஸ்ரீ முசிறி தீட்சிதர் அவர்கள் மூலம் இதற்கான சில சம்பவங்கள் எடுத்துக்காட்டாகக் கேட்கப்பட்டன.

தேனம்பாக்கத்தில் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவாளின் பிக்ஷை நேரம். பக்தர்கள் வெளியே காத்து நின்றனர். உள்ளே ஸ்ரீ பெரியவா யாருடனேயோ பேசிக் கொண்டிருப்பது தெளிவாக வெளியே கேட்கிறது.

வாழைப்பழம் இல்லியோ?” ஸ்ரீ பெரியவாளின் மென்மையானக் குரலில் ஒரு குழந்தையின் கெஞ்சுதலான பாவம் தொனிக்கிறது.

இல்லைபட்டென்று ஒரு அசிரத்தையாக எதிரேயிருந்தவரிடமிருந்து பதிலாய் விழுகிறது.

ஏன் வரலையா?” ஸ்ரீ பெரியவாளின் எதிர்பார்ப்பு ஏக்கத்தோடு கேள்வியாய் எழுகிறது.

இல்லை வரலேஒரு அலட்சியாமான பதில்.

பூவன் பழம் கூட இல்லையா?” பூ உலகிற்கெல்லாம் படியளக்கும் பெருமான் திரும்பவும் கேட்பது தெரிகிறது.

அதுவும் இல்லைகவலையே கொள்ளதவராக எதிரே இருப்பவர் தாட்சணயமில்லாமல் பதில் அளிப்பது வெளியே நின்ற பக்தர்களை பதற வைக்கிறது.

ஆனால் ஒரு பக்தருக்கோ பரவசம் மேலிடுகிறது!

சுவாமி! பூவம் பழம் ஒன்றென்ன? ஒரு தார் வாழைப்பழமே உள்ளதுஎன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் தெய்வத்திற்கு சமர்ப்பிக்க வாழைத் தாருடன் வந்து நின்ற பக்தருக்கு ஏக சந்தோஷம்.

பெரியவாளுக்கு சேருங்கோஎன்று அந்த பக்தர் தாபத்துடன் கேட்டுக் கொண்டபடி ஸ்ரீ பெரியவா இதை ஏற்றுக் கொண்டது ஒருபுறம் நிகழ்ந்திருந்தாலும் பிரம்மஸ்ரீ முசிறி தீட்சதர் அவர்களின் பார்வைக்கு இது வேறு ஒருவிதமாக பட்டுள்ளது.

சாட்சாத் ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவாளுக்கு இது வேண்டும், இது வேண்டாமென்ற நிலை தான் எனினும், அப்பேற்பட்ட ஞானி எதை எங்கு கேட்டாலும் எப்படியும் கிடைக்கும் என்றபோதிலும், உண்மையில் அங்கே தனக்காக ஒரு பக்தர் வாழைப்பழத்தாரை சமர்ப்பிக்க வரப்போகிறார் என்றெல்லாம் கூட இச்சம்பவத்தை எடுத்துக்கொள்வது ஒருபுறமிருந்தாலும், இதற்கெல்லாம் மேலாக அன்றைய பிட்சையின்பொழுது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் சந்நியாசிக்கு அல்பம் ஒரு வாழைப்பழத்தைப் பெறுவதில் கூட சிரமமிருந்திருக்கிறது என்பதே அந்த சமயத்தின் நிதர்சனமாக பிரம்மஸ்ரீ தீட்சதருக்கு மனதில் எழுந்திருந்த எண்ணமாகும்.

இப்படி மடாதிபதி என்பவருக்கு ஒரு ராஜவைப்போல் கேட்டதெல்லாம் கிடைக்கும், அப்படி இல்லாவிட்டாலும் கேட்டவுடன் அவைகளை உடனே கொண்டுவந்து சமர்ப்பிப்பார்கள் என்றெல்லாம் நாம் நினைத்து அந்த மடாதிபதியின் பதவியை சுலபமானதாகக் கருதக்கூடாதென்று தீட்சிதர் தன் அனுபவத்தால் உணர்த்துகிறார்.

இதேபோல் ஆடுதுறையில் ஸ்ரீ மஹாபெரியவாளின் கேம்ப்பின்போதும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பிரம்மஸ்ரீ தீட்சிதர் மூலம் தெரியவருகின்றது. பிட்சை பண்ணும் சமயம் அன்று விரத தினமாதலால் வடபருப்பு பிட்சையில் (கோசுமல்லி) சேர்க்கப்பட்டது.

எலுமிச்சம்பழம்  பிழியலையோ?” என்று ருசிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட திருநாவுக்குடையவர் கேட்கிறார். அந்தக் கேள்வியில்வடபருப்புபண்ணும் பக்குவம் எலுமிச்சைப்பழம் பிழிந்தால்தான் பூர்ணமடையும் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் கேட்கப்பட்டதென்றும், தன் நாவின் ருசிக்காகக் கேட்கப்படவில்லை என்பதும், இதே பிட்சையின் பக்குவத்தில்தான் மடத்திற்கு போஜனம் செய்ய வருவர்களுக்கும், பக்தர்களுக்கும் பரிமாறப்படும் என்பதால் அவர்களின் நாவின் ருசிக்காக முற்றும் துறந்த தெய்வம் அவர்கள் சார்பாக கேட்டதுபோல்தான் மகானைப் பூர்ணமாக அறிந்தவர்கள் உணர்வார்கள்.

பக்தர்களின் போஜனம் சிரத்தையான பக்குவத்தில் செய்யப்படவில்லையோ என்று ஆதங்கப்பட்டு எலும்மிச்சம்பழம் பிழியவில்லையா என்ற ஸ்ரீ பெரியவாளின் கேள்விக்கு அன்றும்.

இல்லைஎன்பதே பதிலாக வந்தது.

ஏன் வரலையா?” என்றார் ஸ்ரீபெரியவா.

வரலைபதில்.

ஆடுதுறை சந்தையிலே கெடைக்குமேபொறுப்பை உணர்த்தும் கேள்வி.

ஆடுதுறை சந்தையிலே ரொம்பக் கூட்டம். போய் யாருக்கும் வாங்க முடியலேஎன்று பொறுப்பைத் தட்டிக்கழிப்பது போல் பதில்.

ஸ்ரீ மடத்தின் தலைமை என்பதால் கேட்பதெல்லாம் தயாராய் இருக்கும், அது எத்தனை சிரமமென்றாலும் பெற்று அந்த நிமிடமே தரப்படும் என்றெல்லாம் வெளியே உள்ளவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையல்ல என்பதற்கு இன்னொரு சம்பவத்தையும் தீட்சிதர் எடுத்துரைக்கிறார்.

போஜன விஷயங்களில் கேட்கப்பட்ட அல்ப சமாசாரங்கள் கிடைக்காமல் போனதென்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஒரு சமயம் இரவில் பல் உபாதை தாங்காமல் மகான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது உபாதையை தணித்துக் கொள்ள கிராம்பு கிடைக்குமா? இருந்தால் உக்கிராண அறையில் போய் இரண்டு கிராம்பு எடுத்துவர கைங்கர்யம் செய்பவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

உக்கிரணத்திற்கு சென்றவரிடம் அங்கிருந்தவர்கிராம்பு இல்லைஎனச் சொல்லிவிட்டார்.

நான் எனக்காக கேட்கவில்லை. ஸ்ரீபெரியவாளுக்குத்தான் கேட்கிறேன்என்று அந்த அன்பர் முறையிட்டார்.. ஸ்ரீ பெரியவாளுக்கு என்று கேட்பதால் எங்கிருந்தாவது உடனே வரவழைத்து கொடுக்க வாய்ப்புண்டு என்றே அவர் அப்படிக் கூறியிருக்க வேண்டும்.

ஆனால்இல்லைன்னு சொல்றேனே! இருந்தா வைச்சுண்டு கொடுக்கமாட்டேன்னா சொல்றேன்?” ஒரு சாமான்யனுக்கு கிடைக்கும் பதில் தான் மடாதிபதியின் சார்பாக கேட்டபோதும் கிடைத்துள்ளது.

இதைப் போய் காருண்யமூர்த்தியிடம் அந்த அன்பர் தயங்கியபடி சொல்ல அந்த ஸ்ரீமடம் ராஜரிஷி அதற்காக உக்கிராணத்தில் இருந்தவரை நொந்துக் கொள்ளவில்லை.

எதுத்தாப்பலே இருக்கிற வீடுகளிலே போய் நான் கேக்கறேனு போய் கேளு கொடுப்பாஎளிமை தோய்ந்த வேண்டுதலில் அந்த அன்பர் உருகிப்போனார். பின் எதிர்வீட்டிலிருந்த வைத்தியர் வீட்டுமாமி இதைக் கேட்டதும் பதை பதைத்து கிராம்பை கொண்டுவந்து சேர்த்தார்.

பதிமூன்றுவயது பாலகனாக மனமுவந்து ஸ்ரீமடத்திற்கு இந்த மகானை ஈந்த ஸ்ரீ மகாலட்சுமி தாயார் இப்படி தன் பிள்ளை ஒரு வாழைப்பழத்திற்கும், எலுமிச்சம்பழத்திற்கும், கிராம்பிற்கும் தவிப்பதை அறிந்தால் அந்தத் தாயுள்ளம் எப்படி வேதனைப்படும்என்று முசிறி தீட்சிதர் மிகவும் உருக்கமாக தன் கண்ணில் நீர் மல்க இந்த சம்பவங்களைக் கூறினார்.   

இச்சம்பவங்களால் தனக்கேற்பட்ட பாதிப்பினால் எப்போது பூவாழைப்பழத்தை பார்க்கும்போதும் தீட்சிதர் மனது படபடக்கும். அவைகளை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு அப்படியே நைவேத்யம் செய்வதன் மூலம் அந்த உள்ளம் கொஞ்சம் ஆறுதல் பெறும்.

சந்நியாசம், பீடாதிபத்யம் என்பதிலெல்லாம் எத்தனை தியாகங்கள் அடங்கியுள்ளன என்பதை தீட்சிதர் அனுபவித்துக் கூறுகிறார். அன்று ஸ்ரீ ராமசரித்திரத்தில் அவர் செய்த தியாகங்களுக்கு இணையாக இன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவாளின் சரித்திரத்தில் பல உதாரணங்களை நாம் பார்க்கமுடிகிறதென்று தீட்சிதர் சிலாகித்து விளக்குகிறார். விரதங்களையும், நியமங்களையும் கடுமையாகக் கடைப்பிடித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவா என்ற ஞான தெய்வத்தை ஒரு பீடாதிபதியாக நாமெல்லாம் தரிசிப்பது நாம் செய்த பெரும்பாக்யமே என்கிறார்.

இப்பேற்பட்ட தெய்வம் தன்னை சரணடைந்தோர் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் நல்கி சர்வ மங்களங்களையும் சகல ஐஸ்வர்யங்களையும் ஈந்து காக்கும் என்பதில் ஐயமில்லை.

64ம் நாயன்மாரெனும் அற்புத பிரதோஷ சிவன்நாயன்மார் (தொடர்ச்சி)

பிரம்மஸ்ரீ மாமா சாட்சாத் ஈஸ்வரரான ஸ்ரீபெரியவாளைப் பூர்ணமாக அறிந்திட்ட ஆனந்தத்தில் அந்த ஈஸ்வர தரிசனத்தை பிரதோஷம்தோறும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா எங்கு சென்றாலும் தன் உத்யோக குடும்ப சூழ்நிலைகளைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாத பக்குவத்தோடு விடாமல் தரிசிக்கும் தீவிர பக்தராகத் திகழ்ந்தவர்.

அப்படி அவர் எழும்பூரில் உத்யோகம் பார்த்த சமயம். வடக்கே எங்கே போகிறார் எனச் சொல்லாமல் எங்கேயோ ஸ்ரீ பெரியவாள் போய்க் கொண்டிருக்க, இவரும் சென்னை எழும்பூரிலிருந்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சென்று தரிசிப்பார். இப்படி இவர் போகும்போது ஸ்ரீபெரியவாளுக்கு சமர்ப்பிப்பதற்காக சில பக்தர்கள் இவரிடம் திரவியங்கள் கொடுத்தனுப்பவதுண்டு. பூரா சக்கரை, பொரி, பழங்கள், என அன்பாக அவர்கள் சேர்க்கச் சொல்பவனவற்றை சுமந்து செல்வதில் பிரதோஷம் மாமாவிற்கு அலாதி சந்தோஷம். அங்கே ஸ்ரீ பெரியவாளிடம் அவைகளை அவரவர்கள் பெயரைச் சொல்லி சமர்ப்பித்து மகிழ்வார்.

இப்படி ஒருமுறை ஒரு வைணவ பக்தர் பிரம்மஸ்ரீ மாமா புறப்படும்பொழுது ஒரு சிறிய பொட்டலத்துடன் வந்து அதை ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்பிக்க வேண்டினார். அதில் அப்படி ஒன்றும் விலை உயர்ந்த வஸ்து இல்லை. தூதுவளை என்ற தழைகள் அடங்கிய சிறு பொட்டலம் அது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு உயர்ந்தவைகளை அர்ப்பணிக்க வேண்டும் என்ற மாமனம் கொண்டவரான பிரம்மஸ்ரீ மாமா அந்த பக்தர் இப்படி ஒரு இலைகளை பொட்டலமாகக் கட்டி சமர்ப்பிக்கச் சொல்கிறாரே என்று எண்ணியபடி தரிசனத்திற்கு புறப்பட்டார்.

அங்கே சென்றவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா முன்னினையில் அவரவர்கள் தந்தவைகளை பெயர்கள் சொல்லியபடி எடுத்துத் தட்டில் வைத்தார்.

ஸ்ரீ பெரியவா அத்தனை வஸ்துக்களையும் பார்வையிட்டவராய்எல்லா வஸ்துக்களும் வந்திருக்கு. ஆனால் தூதுவளையைக் காணோமேஎன்றபோது பிரம்மஸ்ரீ மாமா பதறினார். ஓடோடிச் சென்று தன் பையில் விடுப்பட்டிருந்த அந்தப் பொட்டலத்தை எடுத்து ஸ்ரீ பெரியவாளிடம் வந்து நின்றார். வைணவ அன்பர் கொடுத்ததாக சொல்லி சமர்ப்பித்தார்.

ஓரு புன்னைகையோடு அந்த தூதுவளை இலைகளைப் பார்த்த ஸ்ரீ பெரியவா அந்த சொற்ப தழைகளில் இரண்டு பாகமாக்கி அதில் பெரிய பாகத்தை தனக்குக் கைங்கர்யம் செய்பவருக்காக கொடுத்தாராம். அந்த கைங்கர்யம் செய்பவருக்கு தீராத இருமல் இருந்ததாம். அதற்காகவே வைணவ அன்பரின் மனதில் ஸ்ரீ பெரியவாளுக்கு இவ்விலைகளை கொடுத்தனுப்பத் தோன்றியுள்ளதோ என்னவோ என்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் தயாள குணத்தை பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா சிலாகித்து ஆனந்திப்பதுண்டு.

ஒரு துளி தெய்வாம்ருதம்

லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்கு தெரிகிறதே? என்று கேட்டால் கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர் என்பதாக அத்வைத நூல்களில் சொல்லியிருக்கிறது.

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

_____________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (8-8-2011)

“Leading the Srimatam is not easy”

Shri Mahaperiyava, who is the avatar of Shri Adi Shankara, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us. When Periyava took charge of Srimatam, He was only thirteen years old and He did not have any Guru to guide Him. Also the Srimatam was not doing financially well during that time.

Generally, we know that, the life of a sanyasi is hard. But we might also be inclined to think that, when the same sanyasi is the head of a Srimatam, the hard and fast rules a sanyasi has to follow might be relaxed and the sanyasi might enjoy additional benefits.

But this was not the case with Periyava. This was made known to us by Periyava Himself, through someone who had been praised as a Mahan. He is none other than Brahmashree Musiri Deekshitar.

Periyava was camping at Thenambakkam during those days. It was time for Bikshavandanam and the devotees were waiting for Periyava. They were able to hear Periyava talking to somebody inside.

“Are there any bananas”? Periyava asks in a soft voice.

“No”, came the negligent reply.

“Why? Has it not come yet?” Periyava asked with a longing tone.

“No. It has not.” Came the reply in a careless way.

“Not even Poovam pazham (specific variety of banana)”, Periyava asked again.

“No, we do not have that also”, came the reply. All the devotees were shocked to hear the responses.

But one devotee was excited. “Swami, why one poovam pazham, here is an entire bunch of them”, the devotee said. He came forward and said, “Please give this to Periyava”. Even though Periyava received it from the devotee, Brahmashree Musiri Deekshitar, sees this entire incident in a totally different light.

Even though Periyava does not have any wants for Himself, even though He can bring anything that is needed, even though Periyava knew that the devotee will be bringing that poovam pazham, according to Musiri Deekshitar, the truth is at that time, even Periyava had difficulty in getting a poovam pazham.

Musiri Deekshitar realized that, even the head of Srimatam do not get everything that they ask for. We should not think that their life is easy.

There is one more incident similar incident that happened when Periyava was camping at Aduthurai. We come to know about this incident also from Brahmashree Deekshitar. It was Bikshavandanam time and vada paruppu (Kosumalli) was included.

“Was lemon not squeezed?” asked Periyava, who is above all the sense of taste. But it is already known that Periyava did not ask this for His own taste, but to show that Kosumalli will not be complete without this and also for the satisfaction of all the devotees who will be served this dish.

For the question raised by Periyava for the benefit of the devotees who will come for bhojanam at Srimatam, the response was a similar no.

“Why were there no lemons?” Periyava asked.

“No”, came the reply.

“It should be available in Aduthurai market?” Periyava continued.

“The Aduthurai market is very crowded, nobody was able to go and buy from there”, came the reply in a tone lacking interest.

Deekshitar also narrates one more incident to explain that, in reality, being the head of Srimatam does not mean, that everything asked for will be immediately arranged.

The previous incidents were small and related only in the way food is prepared, but once Periyava was suffering from a severe toothache. He asked the kainkaryam devotee to get Him some cloves. The devotee went to the Srimatam store house and asked for Cloves. When he was told that there were no cloves, he said that Periyava is asking for it and not him. He assumed that if we mention about Periyava, they will somehow arrange for getting cloves. But contrary to his assumption, he was again told the same answer.

He came back to Periyava and hesitantly said that cloves were not available. Periyava did not grudge on the store house keeper. He asked to check with the houses nearby. The lady at the doctor’s house right across the Srimatam immediately got some cloves for Periyava.

Deekshitar tells all this incident with tears in His eyes, and also thinks how will Shri Mahalakshmi, who gave away her son at the tender of thirteen, feel when she hears about her son yearning for bananas, lemon and cloves.

After these incidents, whenever Deekshitar sees poovam pazham, he immediately offers them to Periyava. In that way, He feels at peace.

Deekshitar through these incidents explains the difficulties faces by Sanyasi and Peetadhipadhis. It is equivalent to the difficulties experienced by Lord Rama during His exile. We are lucky to have Periyava’s darshan, who lived a life by following all the vrathas and scriptures religiously.

There is no doubt that, by surrendering ourselves to Him, we will be blessed with happiness and peace.

64th wonderful Pradosha Nayanmar

Brahmashree mama, who realized Periyava as Eswaran, made sure to have His darshan on all Pradosham day, in spite of his work and family related obligations.

When Mama was working at Chennai Egmore, Periyava used to travel to different destinations in North India. Once in 15 days, Pradosham Mama will also travel to those places for Periyava’s darshan. During those times, many devotees will give various offerings to Periyava through Pradosham Mama. Mama will be happy to carry all those offerings and then will offer each item to Periyava along with the details of who had sent them.

Once a Vaishnava devotee had given a small packet to Pradosham Mama to be given as offering to Periyava. It had some thoothuvelai leaves (medicinal herb) and not anything expensive. On reaching Periyava’s camp, Mama told each of the devotee’s name and kept the offerings that they had given.

Periyava looked at all the items kept before Him and then asked “Where are the thoothuvelai leaves?”

Pradosham Mama immediately hurried to his bag and retrieved the small packet and then told the name of the Vaishnava devotee and kept it along with the other items. Periyava looked at the leaves with a smile, took one leaf, broke it into two pieces and gave the big piece to one of the kainkaryam devotee. The devotee had cough for several days and Pradosham Mama felt that Periyava might have appeared in the Vaishnava devotee’s mind and would have got the thoothuvelai leaves.

A drop of God’s Nectar:

In Adwaitha philosophy, it is said that the entire world is an illusion (Maya). We can all see the world, then how can that be? Even we can see a mirage (kanal neer), but it doesn’t mean that it is real. In a similar way, Adwaitha says that even this world is like a mirage.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. Thoodhuvalai keerai helps in indriya nigraha (sense control)

  2. Very much divine instances making us to keep praying at all times for seeking SRI Mahaperiavaa’s blessings… Koti Koti namaskarams to SRI.Kanchi maha periavaa

  3. Periyava is a Sarva gnani. We are lucky to have lived when HE walked on this earth.
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA.

  4. HARA hARA sankara jaya jaya sankara. Janakiraman. Nagapattinam

  5. just by discussing his greatness,
    Hope we are justifying our present day living.
    what else can be done
    go with wind s the order of the day

  6. Very Touching incidences. Also one more reminder Thooduvalai keerai can be used for remedy for cough. Jaya Jaya Shankara. Hara Hara Shankara.

Leave a Reply

%d bloggers like this: