Periyava Golden Quotes-734ஸம்பாத்யம் முதலான இதர நோக்கங்கள் தெரிந்தோ தெரியாமலோ இல்லாமல், சாஸ்திரத்துக்காகவே சாஸ்திரம், ஆசாரத்துக்காகவே ஆசாரம், வைதிகத்துக்காகவே வைதிகம் என்று எல்லாரும் ஆகவேண்டும். நான் சாஸ்திரப் பிரகாரம் நடக்கிறேனென்றால் இது காரணார்த்தம். இல்லாவிட்டால் எனக்கு பிழைப்பு நடக்காது. உபாத்யாயம் பண்ணுகிறவர்களும் இதே மாதிரிதான். இதையெல்லாம் genuine என்று சொல்ல முடியாது. இப்படி வேறு காரணங்களுக்காக என்றில்லாமல் எல்லாரும் ஆத்ம சுத்தி ஒன்றுக்காகவே சாஸ்த்ரோக்தமாயிருந்தால்தான் அது நிஜமானதாக இருக்கும். பூர்வத்தில் நமக்கு லோகம் முழுவதிலுமே எல்லாத் துறைகளிலும் பெருமை வாங்கித் தந்த அதன் நிஜ சக்தி அப்போதுதான் இன்றைக்கும் பேசும்! நம்முடைய தேசத்தின் ஜன ஸமூஹம் முழுக்கவுமே வைதிக ஸமூஹம் என்று ஆகவேண்டும். அதில் குறிப்பாக வேத ரக்ஷணத்துக்கென்றே ஏற்பட்ட ஜாதியில் அத்தனை பேரும் வைதிகர்களாக வேண்டும். இப்படி எல்லாருக்கும் ஸதாசாரமும் அநுஷ்டானமும் வேத சாஸ்திரப்படி யார் யாருக்கு எவையோ அவை இருந்துவிட்டால் உசத்தி-தாழ்த்தியும் கோப-தாபமும் ஓடியே போய்விடும். இப்போது emotional integration [உணர்ச்சி பூர்வ ஒருமைப்பாடு] என்று பேச்சில் பிரமாதமாகச் சொல்லிக் கொண்டே, எலெக்ஷனுக்கு நிறுத்தி வைப்பதானாலும், காலேஜ் அட்மிஷனானாலும், உத்யோகமானாலும் எதிலுமே ஜாதியையேதான் பார்த்து, இன்டெக்ரேஷனுக்கு நேர்மாறாகப் பண்ணி வருகிறார்கள். நான் சொல்கிறேன்: இந்த ‘இமோஷனல்’, ‘கிமோஷனல்’ என்பதெல்லாமே ஏதோ இமோஷனல் ஜோடனையாகத் தான் நிற்குமே தவிர ஸ்திரமாக நின்று பலன் தராது. உணர்ச்சியால் ‘இன்டெக்ரேஷன்’ என்பது நடக்காத காரியம். ஸதாசாரத்தால்தான் ‘இன்டெக்ரேஷன்’ ஏற்பட வேண்டும். எல்லாரும் ஸதாசாரம் என்ற தர்ம நெறிக்குள் கட்டுப்பட்டு வரும்போதுதான் தன்னால் கட்டுக் கோப்பான ஒரு ஸமூஹமாக இறுகுவார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Rather than acquiring knowledge only for the sake of livelihood, one should follow sastras for the sake of following sastras, aacharams for the sake of following aacharams and vaidikam for the sake of following vaidikam. If I am following the sastras strictly, it is for a reason. If I don’t do it, my work will not go on. Same is the case with those who do upadhyayam. So these cannot be said to be genuine. It would be genuine only if every person followed the sastras for mental purity alone rather than for other reasons. It’s true power, which earlier got us name and fame all over the world, will resonate even today! The whole society has to become a ‘Vaidika Society’. Especially in that caste which is there only for the protection of Vedas, everyone should become Vaidikas. Thus if everyone follows Sadacharam and anushtanam as prescribed by Vedas and Sastras, the feeling of high-low or emotions of anger and disappointment will fade away. These days, people speak in a flowery language on ‘emotional integration’. But whether it is about candidates for elections or college admissions or employment, it is the caste that is given importance. So what is practiced is against integration. What I have to say is this: This ‘emotional integration’ etc. will only be an emotional decoration; it will not result in any permanent good. ‘Integration’ based on emotions will never happen. Integration will only happen by ‘sadacharam’. If everyone is bound by the dharma of sadacharam, they will unite into an integrated society. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: