Jaya Jaya Sankara Hara Hara Sankara – Fantastic incidents from Sri Pradhosha Mama Gruham’s newsletter. Especially the Pandurangan incident in Pandaripuram.
Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (12-7-2011)
அருள்கட்டளையும் காரணமும் (நன்றி:- தரிசன அனுபவங்கள்)
எல்லையில்லாப் பெரும் கருணையினால் உலகோரைக் காத்து ரட்சிக்க ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் எனும் திரு அவதாரம் கொண்டு எழுந்தருளும் சாட்சாத் சர்வேஸ்வரர் பிரம்மரிஷி சுகமுனிவரின் நேர்த்தியோடு நம்மிடையே ஒரு தூய துறவியின் இலக்கணங்களையும் எடுத்துக்காட்டியருளுகின்றனர்.
குருவினுக்கெல்லாம் பெரிதாம் பெரும்குருவாய் திகழ்ந்திட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா எப்படி சுப்ரமணியன் என்பவருக்கு அவர்தம் குருவின் அந்திமக்கால ஆசிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது அந்த பெரியவா பக்தரே விளக்குகிறார்.
வேளாண்துறையில் செயல்முறை விளக்குனராக தன் இருபத்திநான்காம் வயதில் சுப்ரமணியன் என்ற அன்பர் பொறுப்பேற்றவுடன் அந்த வார விடுமுறையிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசிக்க பேராவல் எழுந்தது. அது விரைவான செய்தி பரிமாற்றத்துக்கு வசதிகள் இல்லாத காலம். இரயில்வே தான் முக்கியமான போக்குவரத்து சாதனம்.
ஸ்ரீபெரியவா எங்கே முகாமிட்டுள்ளார்கள் என்று கேட்டபடியே திருவாரூர் –மயிலாடுதுறை மார்க்கமாக பிரயாணம் மேற்கொண்டவருக்கு பெரும் அலுப்பு மேலிட்டது. பின் முடிகொண்டான் என்ற கிராமத்தில் ஸ்ரீ பெரியவா அருளுவதாகத் தெரிந்ததில் அந்த சனிக்கிழமை இரவு ஏழரை மணிக்குப் போய்ச் சேர்ந்தார்.
இத்தனை தேடி அலைந்து வந்தபோதும் “சாமிகளா, அவங்க நேத்திக்கே பூந்தோட்டம் போயிட்டாங்களே” என்ற செய்தி கேட்டதும் இவருக்கு இன்னும் அயர்ச்சி மேலிட்டது.
உடனே பூந்தோட்டம் கிளம்ப முற்பட்டார்.
“குழந்தே அது மோசமான ரோடு கொலை, கொள்ளை எல்லாம் நடக்கும். இங்கேயே தங்கிட்டு காலையிலே போகலாம்” என்று யாரோ எச்சரித்தனர். சுப்ரமணியன் தயங்கவில்லை. அந்த கிராமத்து சைக்கிள் கடைக்காரர் இவர்மேல் இரக்கப்பட்டு ஒரு பையனைத் துணைக்கு அனுப்பினார்.
அந்த இரவில் இத்தனை சிரமப்பட்டு அங்கு போய்ச் சேர்ந்தபோது “பெரியவாளுக்கு கடுமையான காய்ச்சல். காலையில்தான் தரிசனம்” என்று யாரோ தகவல் சொல்ல பக்தருக்கு இதென்னடா சோதனை என்று அலுப்பு மேலிட்டது. மதுரையை அடுத்துள்ள மேலூரிலிருந்து காலையிலேயே புறப்பட்டு தவியாய்த் தவித்து பூந்தோட்டம் வந்தவருக்கு இப்படி ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டதில் கவலையும் சோர்வுமாகக் கலந்து வாட்டியது.
இவர்களின் குடும்பமே பரம்பரையாகப் பெரியவாளின் பக்தர்கள். அப்படியிருந்துமா எனக்கு இந்த கதி என்று ஏமாற்றம் தந்த ஆத்திரமும் களைப்புமாக இந்த இளைஞன் இங்கே தவித்து நிற்பது அங்கே உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மகானுக்குத் தெரியாமல் போகுமா? நேரம், காலம், இடம், பொருள் என எங்கும் எப்போதும் நிறைந்த பிரம்மவஸ்துவான சர்வவியாபிக்கு இந்த பக்தர் தன்னைத் தரிசிக்க அத்தனை தூரம் தவியாய்த் தவித்து வந்த சிரத்தையும், அதனால் உண்டாகியிருக்கும் களைப்பும் தெரியாமலா போய்விடும்?
ஏக்கத்துடன் நின்ற பக்தரைப் பார்த்து உள்ளேயிருந்து மடத்து சிப்பந்தி ஒருவர் வந்தார்.
“தரிசனத்துக்காக இப்போ யாராவது வந்திருக்காளா? பெரியவா கேட்டுண்டு வரச் சொன்னா” என்று தேனான வார்த்தைகளால் அத்தனை அலுப்பையும் போக்கும் மருந்தாக அமைந்த கேள்வியை கேட்டார்.
“நான் தான்” ஆவலோடு இளைஞன் துடிதுடித்தான்.
“தரிசனத்துக்கு உள்ளே வர உத்தரவு ஆறது” என்று ஆறுதல் தந்தார். சுப்ரமணியன் ஓடோடி விரைந்தார்.
ஸ்ரீபெரியவா ஒரு ஓரமாகப் படுத்துக்கொண்டிருந்தார். குத்துவிளக்கு வெளிச்சத்தில் அந்த தெய்வத்திற்கும் காய்ச்சல் தந்திட்ட வாட்டம் வெளிப்பட்டது.
“துரைசாமி அய்யர் பையன், பாணாம்பட்டிலிருந்து வந்திருக்கான்” என்று ஒரு சிப்பந்தி இவரை அறிமுகப்படுத்தினார்.
சுப்ரமணியன் அந்தத் தகவல் சரியில்லாததால் குறுக்கிட்டு தான் மேலூரிலிருந்து வருவதாக திருத்திக் கூறலாம் என முற்படுகையிலேயே ஸ்ரீ பெரியவா ஆச்சர்யமாக முந்திக் கொண்டார்.
“இவன் மேலூரிலிருந்து வருகிறானா- கேள்” என்றார். சுப்ரமணியனுக்கு ஸ்ரீபெரியவா எல்லாம் அறிந்திட்ட தெய்வம் என்ற உண்மை இதன்மூலம் ஊர்ஜிதிடப்பட்டிருக்க வேண்டும்.
“ஆமாம்” என்றார் இவர்.
“ நீ உடனே திரும்பிப் போகலாம்” ஸ்ரீ பெரியவா இப்படி ஒர் எதிர்பாராத
உத்தரவிட்டதால் இவர் கலங்கி நின்றார். யாரோ இவரைத் தடி கொண்டு தாக்குவதுபோல உணர்ந்தார்.
“நாளைக்கு…….. பூஜையைப் பார்த்துட்டுப் போகலாம்னு” என்ற தன் ஆவலைத் தயங்கியபடி எடுத்துரைத்தார்.
ஸ்ரீபெரியவா உடன்படவில்லை.” பூஜையை இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம். நீ போயிட்டு வா” இப்படி ஸ்ரீ பெரியவா உறுதியாக உத்தரவிட்டதில் கொஞ்சம் ஆடிப்போய்விட்டார். இந்த மாதிரியாக ஸ்ரீ பெரியவா உத்தரவிட்டு அனுப்பும் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பக்தரின் உறவினர் யாராவது உயிர்துறக்கும் நிலையில் இருப்பதுபோல் நேரும். அதற்காகவே ஸ்ரீபெரியவாளின் அருள் அந்த பக்தரை விரட்டி அனுப்பும்.
ஏதாவது அப்படிபட்டதோர் துயரம் தனக்கு நேர்ந்திருக்குமோ, அதனால்தான் இந்த இரவில் ஸ்ரீபெரியவா தன்னை இங்கே தங்கவிடாமல் போ என்கிறாரா என்ற கவலை ஒருபுறமும், இந்த கிராமத்திலிருந்து அச்சமான சாலையில் எப்படித் திரும்புவது, எங்கே போய் தங்குவது என்று எதுவும் புரியாத நிலையில் விபரம் அத்தனை அறியாத வயதிலிருந்த சுப்ரமணியன் பேதலித்து நின்றார்.
எப்படியோ தடுமாறி மயிலாடுதுறை இரயில்நிலையம் வந்து சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு நினைவு பளிச்சிட்டது. அந்த நினைவே ஸ்ரீ பெரியவாள் அருளியதென்பதை அவர் அப்போது உணரவில்லை.
மயிலாடுதுறை அருகில் குத்தாலம் என்ற ஊரின் பக்கம்தான் கூடலூர் எனும் கிராமம் இருந்தது. அங்கேதான் இவருக்கு பிரம்மோபதேசம் செய்வித்த பிரம்மஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்திரிகள் இருக்கிறார் என்பது இவருடைய நினைவுக்கு அப்போது எட்டியது…… அவர் இவருடைய குரு. மஹாபெரியவாளிடம் பாராட்டுக்கள் பெற்றவர். ஆசார சீலர். பெரியவாளிடம் அளவிட முடியாத பக்தி கொண்டிருந்தவர்.
மயிலாடுதுறை இரயில் நிலையத்தில் இரவு தங்கிவிட்டு, தன் குருவைக் காலையில் கூடலூர் போய் பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. குருவை இதற்கென்று பிரத்யேகமாக வந்தா பார்க்கப்போகிறோம். இப்படி ஒரு சந்தர்ப்பதையாவது இந்த பயணம் கொடுத்ததே என்ற சிறு ஆறுதலுடன் அந்த இரவு இரயில் நிலையத்தில் கழித்தார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பூர்ண அருளாசியைப் பெற்றவரான இவருடைய குருவை காலையில் கூடலூர் சென்று சுப்ரமணியன் சந்தித்தார். இப்படி இவர் பார்க்க வந்ததில் குருவிற்கு மிக்க மகிழ்ச்சி. உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்த குருவிற்கு தன் சிஷ்யன் பார்க்க வந்திருப்பதில் மிகவும் ஆறுதலும் சந்தோஷமுமாய் இருந்தது.
இவர் தங்கியிருந்த சிறு நேரம் அவர் தெம்புடன் பேசிக் கொண்டிருந்தார். அன்றிரவே மேலூருக்கு இவர் திரும்பினார்.
பத்து நாட்கள் கழிந்திருக்கும். இவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. இவருடைய குருவான பிரம்மஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்திரிகள் ஆபத்சந்யாசம் ஏற்றுக் கொண்டு இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற சேதி வந்திருந்தது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அன்று இவரை வந்தனம் செய்யக் கூடவிடாமல், அடுத்தநாள் பூஜையைப் பார்த்துவிட்டுப் போவதாக சொன்னபோதும் அதை ஏற்காமல் தன்னை உடனே கிளம்பிப்போக வேண்டுமென்று கட்டளையிட்டதன் நோக்கம் என்னவென்று இவருக்கு புரியலாயிற்று.
இப்படி ஒரு கடுமையான உத்தரவிட்டு அதோடு நில்லாமல் எங்கே செல்வதென்று தவித்த போது கூடலூரிலுள்ள தன் குருவை ஞாபகப்படுத்தி அவரைப் போய் அவரது அந்திமக் காலத்தில் சந்தித்து ஆறுதலைக் கொடுக்கத்தான் இப்படியெல்லாம் திருக்கட்டளை புரிந்துள்ளார் என்பது விளங்கிவிட்டது.
அப்படியில்லையென்றால் தன் குருவான மகானை இவர் பார்த்திருக்கவே முடியாதல்லவா.
ஈஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் வாக்கிற்கும் கட்டளைக்கும் ஒரு நியாயமான காரணமிருக்குமென்றும், அப்படிப்பட்ட அருள்கட்டளைகள் நன்மை பயற்பதாவே அமையும் என்றும் திரு. சுப்ரமணியன் இந்த சம்பவத்தின் மூலம் அனைவரையும் அறிய வைக்கிறார்.
கூடவே வரும் தெய்வம்
இவருடைய இன்னொரு இனிய அனுபவம் இது!
1983 பிப்ரவரி மாதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை மஹாகாவ் எனும் இடத்திற்குப் போய் இவர் தரிசித்தார். கூடவே இவருடைய ஆசையை வெளிப்படுத்தினார். மஹாகாவ் அருகில் பண்டரிபுரம் பாண்டுரங்கனைத் தரிசித்து செல்ல வேண்டுமென்ற ஆவல்.
“பண்டரிபுரம் போய்ப் பாண்டுரங்கனைத் தரிசித்துவிட்டு ஊருக்கு போகணும்னு ஆசை. நாளை வரையில் லீவு. பெரியவா அனுக்ரஹம் பண்ண்ணும்”.
ஸ்ரீ பெரியவா பிரசாதம் கொடுத்தபோதே பாண்டுரங்கனை இவர் தரிசிக்க வைக்கும் முழுப்பொறுப்பையும் ஸ்ரீபெரியவா ஏற்றுக்கொண்டாகிவிட்டது. இப்படித்தான் ஒரு நம்பிக்கையோடு இவர் பண்டரிபுரம் சென்றார்.
அங்கோ பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
அன்றையதினம் மிக விசேஷ நாள். அதிக பட்ச ஏகாதசி திதி. பெரிய க்யூ. வரிசை கிலோ மீட்டர் கணக்கில் நீண்டிருந்தது. இன்றைக்கு பாண்டுரங்கனின் தரிசனத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதாக அவருக்கு உறுதியாய்த் தெரிந்துவிட்டது.
அத்தனை நீள க்யூவில் தனக்குத் தரிசன பாக்யம் கிடைத்து ஊருக்குத் திரும்புவது சாத்யமேயில்லை என்பதைப் புரிந்து காலாகாலத்தில் ஊருக்குப் போக இரயிலை பிடிக்கலாமென்று முடிவு செய்தாயிற்று.
வந்தது வந்தாயிற்று கோயிலையாவது ஒரு வலம் வந்து அந்த சின்ன திருப்தியோடு சென்று விடலாமென்று எண்ணியபடி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார்.
சுற்றிவந்தபோது அதிக ஜனநடமாட்டம் இல்லாத ஒரு கோபுரவாசல் அருகே நின்றார். கதவு மூடியிருந்தது. அங்கே நின்றுவிட்டார். “பாண்டுரங்கா உன்னைத் தரிசிக்க முடியாமல் செல்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் புறப்பட்டால் தான் இரயிலை பிடித்து ஊர் போய் சேரமுடியும். மறுபடி எப்போது இஷ்டப்படுகிறாயோ அப்போது கூப்பிடு…… நின்று நிதானமாக தரிசனம் செய்துக் கொள்கிறேன்” என்று பிரார்த்தித்துக் கொண்டார்.
ஆனால் மஹாகாவில் அருளிக் கொண்டிருந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருச்செவி இதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். தான் அருளாசி வழங்கி அனுப்பிய பக்தர் பாண்டுரங்கனை தரிசிக்காமல் போக விடலாமா என மகானின் காருண்யம் அதற்கு வழி செய்ய அருளத் தொடங்கியது.
கோபுரவாசல் அருகில் ஒரு சின்ன வாசல். ஒருவர் மட்டுமே நுழையலாம். அந்த கதவு எதிர்ப்பாராதவிதமாகத் திறந்தது. கோவில் பண்டா போன்ற ஒருவர் வெளிப்பட்டார். அவர் கோயில் சம்பந்தப்பட்டவர். தன் வேலையை பார்த்துக் கொண்டு போய்விடுவார் என்று தான் சுப்ரமணியன் நினைத்தார்.
ஆனால் அவரோ வலியவந்து இவரிடம் பேசினார்.
“விட்டோபாவை தரிசனம் செய்யணுமா? கூடவே வா” என்று சொல்லிவிட்டு அவர் நடக்க இவர் பின் தொடர்ந்தார். சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ அவர் பின்னால் சென்றார். பேரதிசயமாக பாண்டுரங்கன் சன்னதி முன்பு இவரை நிறுத்தியபோது இவருக்கு மெய்சிலிர்த்தது. மெய்மறந்து தரிசித்துக் கொண்டிருந்தபோது அந்த பண்டா மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
“ருக்குமாயி – பாண்டுரங்கன்” ஆகா என்ன தரிசனம்! என்ன பாக்யம்! கண்களில் ஆனந்தப் பெருக்கோடு இவர் வெளியே வந்தார்.
இன்றுவரை இவருக்குப் புரியாத புதிர் ஒன்றுயாதெனில். அன்று தான் ஏங்கி நின்றபோது அந்த சின்னவாசலைத் திறந்து தன்னுடன் வா என்று கட்டளையிட்டுத் தரிசிக்க அழைத்துச் சென்றது கோயில் பண்டாவா? இல்லை கலவை பெரியவாளா என்பதே!
“கூடவே வா” என்று நம்கூடவே இருந்து அருளும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே அந்த பண்டரிநாதன் எனும்போது இதற்கான விடையை அவர் தேடவில்லை. இப்பேற்பட்ட தெய்வம் நம்க்கெல்லாம் அருள் துணை வரும்போது நம் இன்னல்கள் யாவும் அகன்று மன நிம்மதியோடு சகல சௌபாக்யங்களோடு கூடிய மங்கள வாழ்வும் நம்மைத் தொடர்ந்து வரும் என்பது உண்மையல்லவா!
-கருணை தொடர்ந்து பெருகும்
ஒரு துளி தெய்வாம்ருதம்
மனிதப்பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்தும் போது மட்டுமே உண்டாகிறது. நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேகசிரமம் வந்தாலும், பணச் செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆன்ந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வீண்தான்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
______________________________________________________________________________
Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (12-07-2011)
“Reason behind the divine order (Darisana Anubavangal)”
Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.
Sri Mahaperiyava is considered to be the Paramaguru or Guru of Gurus. In this incident, Subramanian explains how Periyava was able to get the final blessings of his guru.
When he was 24 years old, Subramanian joined the Agriculture department. At that time, he wanted to have darshan of Periyava. It was a time when communication and transportation had not been advanced like it is now.
He was very tired travelling towards Thiruvarur – Mayiladuthurai, enquiring about Periyava’s camp. He found out that Periyava was camping at Mudikondan and reached there around 7:30 pm on a Saturday.
On reaching Mudikondan, he find out that Periyava had left for Poonthottam. He felt more tired, but decided to continue his journey. He was warned that night has fallen and the route is dangerous to travel with lots of thieves on the way. He still decided to go. The cycle store owner of that village arranged for a boy to go along with him.
After reaching Poonthottam late night, he found out that Periyava was having high fever, and they can have darshan only in the morning. After starting from Madurai in the morning and travelling all the way to multiple places and reaching here late night, Subramanian was feeling very dejected that he could not have Periyava’s darshan.
Subramanian’s entire family was devoted to Periyava. Does Periyava, who is omnipresent, not know the pain Subramanian had taken to travel and come for His darshan?
A Srimatam employee came running towards the tired Subramanian and asked, “Periyava is asking if there is anyone waiting for His darshan?”
“Yes. I am” Subramanian replied eagerly.
“You have the permission to go inside for darshan”. Subramanian rushed inside.
Periyava was lying at one side. The tiredness due to fever was seen in His’ face.
The Srimatam employee introduced Subramanian, “He is Duraiswamy Iyer’s son and he is coming from Banampet”.
Before Subramanian started to correct that he was coming from Melur, Periyava asked, “Can you ask him if he is coming from Melur?” confirming that Periyava indeed knew where the devotee had come from.
Subramanian nodded his head and said yes.
“You can go back now”. Subramanian was shocked to hear Periyava say that.
“I was thinking of attending the Pooja tomorrow and then leave”. Subramanian hesitantly told Periyava.
Periyava was firm on what He had said. “You can attend the Pooja some other time. You leave now.” Subramanian was shocked on hearing this. Usually in other incidents, were Periyava had asked the person to leave immediately, there usually will be some deaths in the devotee’s family.
Subramanian was confused completely. He was worried that someone in his family might not be well. He was also sad that Periyava had asked him to go back the same day after a long day of travel. Now he had to take the same route and travel in the night.
Somehow, he had managed to reach the railway station at Mayiladuthurai. Once reaching the station, something flashed in his mind. At that time, he did not realize that, it was Periyava who had made that thought appear on his mind.
The village Koodalur, was close to Kuthalam, which in turn was very near Mayiladuthurai. Subramanian’s Guru Brahmashree Ramakrishna Shastrigal, who had also performed Subramanian’s Brahmopadesam, lived there. His Guru also had lot of devotion towards Periyava. Brahmashree Ramakrishna Shastrigal also had been praised by Periyava multiple times.
Subramanian decided to stay the night at the railway station and visit his Guru at Koodalur next morning. Since he might not be making a special trip to come and meet him, Subramanian decided to use this trip to meet him.
Subramanian’s Guru, who had the complete blessings of Periyava was very happy to see his student the next morning. The student’s arrival made him happy and gave him a comfort feeling as he was bed ridden with a serious illness. Even though he was not feeling well, when Subramanian was around, he was talking well. The same night, Subramanian returned to Melur.
After ten days, Subramanian got a letter informing him that his Guru Brahmashree Ramakrishna Shastrigal had passed away. Now Subramanian realized why Periyava had asked him to leave immediately. Periyava did not stop there. He also made sure to remind Subramanian about his Guru when he was waiting at the railway station. If Periyava had not instructed on that day, Subramanian would not have met his Guru.
Through this incident, Subramanian has let everyone know that there is a good reason for Periyava’s instructions and orders. We will be definitely benefitted by following them.
The God who walks along with us
This is another of those nice incident.
During February of 1983, Subramanian went to Mahagaon for Periyava’s darshan. He informed Periyava of his desire to have darshan of Lord Pandurangan at Pandaripuram.
“I want to have darshan of Pandurangan at Pandaripuram. I have leave until tomorrow. Need Periyava’s blessings”. Subramanian assumed that everything will be alright when Periyava gave prasadam to him.
He was disappointed on reaching Pandaripuram. It was a special Ekadasi day and the darshan queue extended for miles. He decided that it was impossible to have darshan that day. Instead of spending the day there, he decided to back to the railway station and start his journey back home.
Since he had travelled so far, he decided to at least circumambulate the temple praharam once. He saw a door there and stood before there and prayed to Pandurangan, “I am able to have your darshan, since I have to go in an hour to catch my train. Whenever you decide, please call me for your darshan”. Does the Mahan at Mahagaon not know a devotee’s wish? As he prepared to move from that place, the small door opened and a temple priest walked towards him and asked, “Do you want to have darshan of Pandurangan?”
The priest took him through a maze of doors and in some time they were standing before Pandurangan. As Subramanian was mesmerized by Rukmai-Pandurangan, the priest who had got him here had disappeared.
Was it Periyava or Pandurangan, who had sent the priest through that small door? That still remains a puzzle for Subramanian. But he also realized that Periyava and Pandurangan are no different. They are the same. It is very important for us to surrender ourselves to Periyava and seek His blessings.
A drop of God’s Nectar:
The purpose of this life is love everyone. There is no happiness like loving others. Only when we love is our hearts filled with happiness. When we love, we do mind the difficult times, the physical pain or money spent. The depth of love and the happiness drowns all these things. A life without love is waste.
Grace will continues to grow.
(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)
Categories: Devotee Experiences
Jaya Jaya Sankara Hara Hara Sankara, Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman Nagapattinam