எல்லா ஜனங்களும் ஆசாரமாயிருப்பதென்றால் தான் ஆசாரம் நிற்குமே தவிர, யாரோ வைதிகர்கள் என்று சிலர் ஆசாரமாயிருப்பதென்றால் அவர்களைத் தனி ஜாதி என்று பிரித்து அவர்களுக்கு மாத்திரமே சாஸ்திரம் என்கிற மாதிரி ஆகிவிடும். எனவே அனைவரும் அவரவருக்கான ஆசாரப்படி நடக்கப் பிரயாஸைப்பட வேண்டும். முக்கியமாக, பிராம்மணனுக்குத்தானே நிறைய ஆசாரங்கள் வைத்திருக்கிறது? அதனால் அந்த ஜாதியில் பிறந்த எல்லாரும் ஆசாரங்களை நன்றாக அநுஷ்டிக்கப் பிரயத்தனம் செய்ய வேண்டும். தக்ஷிணை வாங்கிக் கொண்டு கர்மாக்களைப் பண்ணி வைக்கிறவர்கள்தான் வைதிகர்கள் என்று வைக்கிறபோது, தக்ஷிணையை உத்தேசித்துத்தான் வைதிகமாக இருக்கிறது என்று ஏற்படுகிறது! இப்படி ஒரு ஜீவனோபாயத்துக்காகவே அவர்கள் ஆசாரமாயிருக்க வேண்டி ஆகும்போது அதில் அநுஷ்டான சுத்தத்தையோ, சக்தியையோ, தன்னால் ஒரு ரெஸ்பெக்ட் கமான்ட் பண்ணும் [மரியாதையை ஈர்க்கும்] தேஜஸையோ எதிர்பார்ப்பதற்கில்லை. அதனால்தான் ‘வைதிகப் பிச்சு’ என்று கேலி பண்ணுகிற மாதிரி ஆகிறது. நான் அவர்களைக் குறை சொல்கிறேனென்று நினைக்கக் கூடாது – வேறே எந்தத் தொழிலுக்கும், க்ளப்பில் தட்டுத் தூக்குவதற்குக்கூட, இன்னம் ஜாஸ்தி வரும்படி கிடைக்கிற போது, இவர்களாவது க்ருஹஸ்தர்கள் தங்களுடைய செலவினங்களில் கடைசி ‘அயிட்ட’மாக மூக்கால் அழுது கொண்டு தருகிற தக்ஷிணையில் ஜீவனம் நடத்தத் துணிந்து, ஊர்ப் பரிஹாஸத்தையும் தாங்கிக் கொண்டு, யாதாயாதம் அலைந்து கொண்டு பௌரோஹித்யம் [புரோஹிதத் தொழில்] செய்து, வேதகர்மா இந்த தேசத்தை விட்டுப் போயே விடாமல் காப்பாற்றித் தருகிறார்களேயென்று அவர்களுக்கு நன்றி சொல்லவே வேண்டும். ஆனாலும் எந்தத் துறையானாலும் அது ஆத்மார்த்தமாக இல்லாமல் உதர போஷணார்த்தமாக நடத்தப்படும்போது அதனுடைய ஜீவசக்தி குன்றிப்போய் விடுகிறது. அதனால் தான் இப்போது [கர்மாக்களைப்] பண்ணி வைக்கும் சாஸ்திரிகளையே வைதிகர்கள் என்று வைக்கிறபோது, நான் முன்னே சொன்ன மாதிரி ஆசார சீலர்களுக்கு உள்ள காந்தியால் மற்றவர்கள் மதிப்பைப் பெறுவது என்பது இல்லாமல் போகிறது. நேர்மாறாக ஆகிறது. நான் எல்லா சாஸ்திரிகளையும் சொல்லவில்லை. ஸமூஹத்தின் மதிப்பைப் பெற்று நல்ல சிஷ்டர்களாகவும், தேஜஸ்விகளாகவும், சுத்தமான அநுஷ்டாதாக்களாகவும் அங்கங்கே சாஸ்திரிகள் இல்லாமல் போகவில்லை. ஆனால் மொத்தத்தில், பண்ணி வைக்கும் வாத்தியார்களும், வெறுமனே தக்ஷிணை மட்டும் வாங்கிக் கொள்பவர்களும் அல்லது திவஸம் திங்களில் போஜனத்துக்கு மாத்திரம் போகிறவர்களுமே வைதிகர்கள் என்றாகியிருக்கிற இன்றைய – துர்த்தசையில் ‘வைதிகன்’ என்றாலே ‘இன்பீரியாரிடி காம்ப்ளெக்ஸ்’ [தாழ்வுணர்ச்சி] ஏற்படுவதாகத்தானிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Aacharams will stand the test of time only if all the people follow them. If only a small group of Vaidikas (वैदिकाः) practice them, it appears as if they are a special caste and they alone need to follow the sastras. For that reason, everyone should attempt to follow the aacharams prescribed for their group. Importantly, more rules of aacharam have been prescribed for Brahmins isn’t it? So everyone from that caste should make efforts to follow aacharams meticulously. When those accepting ‘dakshina’ for assisting in the performance of a karma are alone known as Vaidikas, it appears that they follow the aacharams only for the sake of money. Since they follow the aacharams only for a living, the purity of anushtanams or the power of anushtanams or the tejas obtained by the anushtanams and the respect it commands – these cannot be expected. So they are ridiculed by others. One should not think I am finding fault with them; When all other professions – even that of a waiter in a club – fetch a higher salary, we should thank the Vaidikas for managing their lives within the income grudgingly given by Gruhastas, for putting up with the taunts of society, for doing purohitam running here and there and for safeguarding the Vedas in this nation. Whatever the field, if a job is not done wholeheartedly but only for the sake of subsistence, its life force gets diminished. Since the word Vaidikas has now come to denote only the Sastrigals who assist in the performance of karmas, these Vaidikas are not able to get the respect that people who strictly follow the aacharams get. What actually happens is just the opposite. I am not pointing a finger at all the Sastrigals. Here and there are a few Sastrigals who follow all the rules diligently, with the accompanying tejas and command the respect of the society. But by and large the word Vaidika has come to mean only those who assist in the karmas, those who come exclusively for dakshina and those who come to partake food on a Sraddha day or on some other occasion. In the present dismal times, to be known as a Vaidika, brings about an inferiority complex. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Periyava Saranam! Happy new year to you all. My first iOS app on Ramana Maharishi is on App Store for anyone interested.By Periyava’s grace, I’m planning one on Periyava also. https://itunes.apple.com/sg/app/ramana-maharishi/id1326446445?mt=8