Periyava Golden Quotes-731

ட்ரெஸ் விஷயம் மாத்திரமில்லை. சாஸ்த்ரீயமான வேறு சில விஷயங்களிலும், ஆஃபீஸ் அநுமதிக்காதே, ‘ஆஃபீஸ் நடைமுறை இதற்கு இடம் கொடுக்காதே’ என்று சொல்கிறார்கள். ‘ஏகாதசியில் வ்ரதம் இரு என்கிறீர்களே! ஆஃபீஸில் லீவு தருவார்களா? எப்படிப் பட்டினிக் கிடந்து கொண்டே வேலை பார்ப்பது? அமாவாஸ்யைக்கு யதோக்தமான காலத்தில்தான் தர்ப்பணம் பண்ணுவது என்றால் ஆஃபீஸுக்கு லேட்டாகி விடுமே’ என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் சொல்கிறேன்: ஸகல ஜனங்களும் ஏகாதசி உபவாஸமிருப்பது, சாஸ்திர காலப்படி அமாவாஸயை தர்ப்பணம் பண்ணுவது என்று தீர்மானமாகச் செய்து காட்டினால், தன்னால் ராஜாங்கத்தில் லீவு விட்டுவிடுவார்கள். ஜனங்கள் கிளம்பினால் எல்லாம் ஸரியாய்விடும். அநாவசியத்துக்கெல்லாம் கிளம்பி, தாங்கள் சொல்கிற மாதிரி ஸர்க்காரோ கம்பெனி முதலாளிகளோ செய்யும்படிப் பண்ணவில்லையா? அந்த ரைட், இந்த ரைட், ஸ்ட்ரைக், டெமான்ஸ்ட்ரேஷன் என்று – அந்த டே, இந்த டே என்று கொடியைப் பிடித்துக் கொண்டு சுத்தப் போகிறோம், சத்தம் போடப் போகிறோம் என்றால் லீவ் விடவில்லையா? நமக்கு நிஜமாக சிரத்தையும் தைரியமுமிருந்தால் எதையும் நடத்திக் கொண்டு விடலாம். வெள்ளைக்காரன் நாளிலேயே ஸர். டி. முத்துஸ்வாமி அய்யர் மாதிரிப் பரம ஆசாரமாயிருந்து கொண்டே ஜட்ஜ் பதவி வரை வஹித்தவர்களில்லையா என்ன? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Not just in respect of dress. People feel their office schedule will not permit them to carry out certain other procedures as prescribed in the sastras. ‘You ask us to fast on Ekadashi. Will our office give us leave? How can we work while fasting? If on an Amavasya we have to do tharpanam only at the prescribed hour, we will not be late to office’, etc. are some of the questions. This is what I have to say: If all the people decide to fast on Ekadashi and do the tharpanam on Amavasya only at the prescribed hour, the government will, on its own, decide to give them leave. If people make a firm decision, things can surely be achieved. Do they not come together on unwanted issues and force the government or company management to do things in their favour? People talk of various rights, participate in strikes and demonstrations, observe various ‘days’, go round carrying flags, etc. Do they not get leave for these things? If we have the faith and the courage, we can get everything done. People like Sir T. Muthuswamy Iyer followed all the prescribed aacharams and managed all their commitments including posting as Judge, even during the Britsh rule, didn’t they? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: