Periyava Golden Quotes-729


ஆஃபீஸுக்குக்கூடச் சட்டை போட்டுக் கொள்ளாமல்தான் வருவோம் என்று அத்தனை பேரும் உறுதியாய் இருந்தால் இந்தக் குடியரசு யுகத்தில் ஸர்க்கார் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஷர்ட்டிங், டெய்லர், லான்ட்ரி — எல்லாச் செலவும் மிச்சம். காந்தி நாலு முழு வேஷ்டியும், துண்டுமாகவே ‘கிங் எம்பரர்’ வரைக்கும் போகவில்லை? ஸ்வதேசி உடுப்பு வந்து, இதில் நான் ஆசைப்படுகிற மாதிரி பட்டு மோஹமும் போய்விட்டால், செலவு ரொம்ப மட்டுப்படும். தோய்க்காவிட்டால் மடியில்லை. ஸூட் தினமும் தோய்க்க முடியுமா? பார்வைக்கு அது எத்தனை சுத்தமாக இருந்தாலும் அநாசாரம்தானே? வேர்வைதானே? [அருகிலிருப்பவர் ஏதோ குறுக்கிட்டுக் கூற அதைக் கேட்டு அவரிடம் சிறிது விசாரணை செய்துவிட்டுப் பெரியவர்கள் தொடர்கிறார்கள்]. இப்போது ஏதேதோ செயற்கைத் துணி தினுஸுகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்; அதனால் கால் சராய்கூட தினமும் நாமே தோய்த்துப் போட்டு விடலாம். உடனேயே காய்ந்து விடும், பிழிந்தால் கூட அதிலே மடிப்பு விழுவதில்லை, அதனால் லான்ட்ரிக்கும் போட வேண்டியதில்லை என்று இவர் சொல்கிறார். ஆனால் இம்மாதிரி (artificial) செயற்கை வஸ்திரமே சாஸ்திர ஸம்மதமானதில்லை. பருத்தியாகவோ, பட்டாகவோதான் இருக்க வேண்டும். நானோ பட்டும் வேண்டாமென்று சொல்லி அந்தச் செலவும் இல்லாமல் பண்ணுகிறேன். இப்போது கோல்-தாரிலிருந்து பண்ணுகிற அநேக அநாசார வஸ்துக்கள்தான் – ப்ளாஸ்டிக் இதில் சேர்ந்ததுதான் – ஸர்வ வியாபகமாயிருக்கின்றன. நம் சரீரத்தின் மேலேயே இம்மாதிரி உடுப்புப் போட்டுக் கொள்வது ஆசாரத்துக்கு தோஷம்தான். [முதலில் குறுக்கிட்டவர் மீண்டும் ஏதோ கூறியதன் மீது] இவரே சொல்கிறார், இம்மாதிரி துணி வழியாகக் காற்று உள்ளே போகிறதில்லை, நம் சீதோஷ்ணத்தில் இது ஆரோக்யத்துக்கு உகந்ததில்லை என்று சில டாக்டர்கள் சொல்கிறார்கள் என்று. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

If all employees were firm that they would attend office without wearing a shirt, the government of this Republic of ours, has to agree. The expenses incurred on shirt material, tailoring and laundry, can all be avoided. Did not Gandhi meet the Emperor, wearing only his dhoti and upper cloth? If we adopt locally manufactured cloth material and at the same time shun the craze for silk – which is what I desire – our expenses will be minimized. Clothes can be considered as madi (pure) only if they are washed. Can a suit be washed daily? It may appear clean but is soiled and drenched in sweat. (A person nearby interrupts Periyava’s words. Periyava speaks to him and then continues). New synthetic cloth varieties have been discovered now; so even pants can be washed daily; they dry quickly; can be squeezed without damaging the cloth; giving it for ironing is not necessary is what this person says. But these synthetic materials are not approved by sastras. The cloth should be of cotton or silk. By asking you to avoid silk I am helping you reduce costs further. These days, things manufactured from coal tar have permeated everywhere. Using such material for our dress is against aacharam. (The person says something again). He too says these materials do not allow circulation of air and doctors are of the opinion that these materials are not suitable for our climatic conditions. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: