Periyava Golden Quotes-728

ஆசாரமாயிருப்பதால் வேறென்ன பிரயோஜனம் ஏற்படுமோ ஏற்படாதோ செலவிலே சிக்கனம் உண்டாவது நிச்சயம். காஃபி அநாசாரம்; கிளப் [ஹோட்டல்] அநாசாரம்; ஸினிமாவும் கூத்தும் சாஸ்திர ஸம்மதமானதில்லை; குடிக்கக் கூடாது; சூதாடக் கூடாது (ரேஸ், சீட்டு எல்லாம் சூதுதான்); என்ன ‘மொஸெய்க்’ போட்டாலும் சாணி போட்டு மெழுகக்கூடிய ஸாதாத் தரைக்கு ஸமதையாகாது; ஆசார அநுஷ்டானங்களுக்கு ஹானியாக இருப்பதால் வெளியூர்களுக்குப் போய் வருவதை ‘மினிமைஸ்’ பண்ணிக் கொள்ள வேண்டும் – என்றெல்லாம் சாஸ்திரோக்தமாக வாழ்கிறபோது, இந்த இனங்களில் ஏற்படுகிற அத்தனை செலவும் மிச்சம். ஆசாரமாயிருக்கிற ஒருவனுக்கு இந்த அநாசாரங்களில் ஆசை வந்து இவனே ஒரு க்ளப்புக்கோ ஸினிமாவுக்கோ போனால்கூட, பஞ்சகச்சமும் குடுமியுமாய் இவன் வருவதைப் பார்த்து அங்கேயிருக்கிறவர்களே இவனைக் கேலி செய்து திரும்பிப் போகும்படிப் பண்ணி விடுவார்கள். ட்ரெஸ் ஒன்றை எடுத்துக் கொண்டால் இப்போது இங்கிலீஷ் மோஸ்தர்களுக்காக, அப்புறம் லான்டிரிக்காக எத்தனை செலவு? ஏதோ ஒரு வேஷ்டி, துண்டு என்று வைத்துக் கொண்டு விட்டால் எத்தனை மிச்சம்? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Following Aacharams is bound to reduce expenses irrespective of other benefits that accrue. A person who follows aacharam should not consume coffee; should not eat in hotels; should not watch movies; should not gamble or go for horse racing; should live in a house where the floor is cleaned with the application of cow dung; (this is any day better than even a mosaic flooring); should minimize out of town activities, etc. So all expenses that one would incur in the above mentioned activities are avoided. If a person following strict aacharam developed interest in any of the above activities and went to that particular place, the people there will see him coming in a panchkaccham and kudumi (Shikai). They will tease him and send him back. These days, we spend a lot on western dresses and laundry expenses. Won’t expenses be much lesser if people wore just a veshti and an upper cloth? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: