159. Maha Periyava’s Skanda Puranam-Lord Subramanya’s Incarnation in North India (Part 3)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – A lot of us think what is the point of doing rituals when we should instead be focusing on gaining knowledge and attaining wisdom. Similarly a few focus only on doing Karmas (the one prescribed in Vedas) thereby ignoring attainment of wisdom. What is the answer to all this? Sri Periyava explains it with utmost clarity through the story of Kumarila Bhatta, the incarnation of Lord Subramanya.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri.R. Sridhar for the translation. Rama Rama

 

முருகனின் வடநாட்டு அவதாரம் (Part 3)

‘வேதம் விதித்துள்ள கர்மாக்களை நாம் செய்தால், அதுவே நிறைவு; ஸ்வாமியிடம் பக்திவேண்டாம்; அவரோடு ஒன்றாகப் போய் விடுகிற ஞானம் வேண்டாம்’ என்பது கர்ம மீமாம்ஸை. இவர்கள் ஒப்புக் கொண்ட அதே வேதங்களில் உள்ள உபநிஷத்தில்தானே கர்மம் எல்லாம் நின்றுபோன ஜீவபிரம்ம அபேத ஞானத்தைச் சொல்லியிருக்கிறது என்றால்; இவர்கள் வேதத்தை ‘விதி’ என்றும் ‘அர்த்த வாதம்’ என்றும் இரண்டாகப் பிரித்தார்கள். விதி என்பது ‘நீ இன்னின்ன கர்மாக்களை இப்படியி்ப்படிச் செய்’ என்று சொல்லி, அந்தக் கர்மாக்களில் பிரயோகமாகிற மந்திரங்களைத் தரும் பகுதி. அதாவது காரியத்தைச் சொல்கிற பாகம். ஜீவபிரம்ம அபேத வாசகங்களில் காரியம் இல்லை, வெறுமே இருந்து கொண்டிருக்கிற நிலையை அது சொல்கிறது. ‘இருப்பது எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு, லோகத்துக்குப் பிரயோஜனம் தருவது கர்மம்தான். இந்த விதிகளைக் கொண்ட வேத பாகம்தான் நமக்குப் பிரமாணம்’ என்று மீமாம்ஸகர்கள் சொன்னார்கள். விதியாக இல்லாத உபநிஷத்தை ‘அர்த்தவாதம் என்பார்கள். ஒரு விதியை அநுஷ்டிப்பதால் உண்டாகும் பலனை உயர்த்திச் சொல்லி, அதனால் விதிகளில் ஜனங்கள் ஊக்குவதற்காக ‘கதைப்பது’தான் அர்த்தவாதம்.

பேப்பரில் தாதுபுஷ்டி லேகியம் விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. அதிலே சிங்கத்தோடு ஒரு ஸாண்டோ (பயில்வான்) குஸ்தி செய்கிற மாதிரி படம் போட்டிருந்தது. அந்தப் படம், அதைப் பார்த்து நம் ரஸிப்பதற்காகவா போட்டிருக்கிறது? இல்லை. இந்த லேகியத்தைச் சாப்பிட்டால் நீங்களும் அப்படி பலசாலிகளாக ஆவீர்கள்’ என்று நமக்கு ஆசை காட்டுவதற்கு ‘அர்த்தவாதமாக’வே போட்டிருக்கிறது. இப்படியேதான் ‘சகல கர்மங்களையும் அநுஷ்டிக்கிறவன் ரொம்பவும் உயர்ந்துவிடுவான் என்று ஜீவனை ஸ்தோத்திரம் பண்ணுவதற்காகவே உபநிஷத்துக்களில் ‘சகலமாகவும் ஆன பிரம்மம் ஒன்று இருக்கிறது; இந்த ஜீவன் அந்த பிரம்மமே ஆகிவிடுவான். அப்போது இவனுக்குக் கர்மாவே நின்றுபோய் ஞான மயமாகுகிறான்’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறது. இந்தக் ‘கதை’ எல்லாம் ஜீவனை நிறையக் கர்மா பண்ண வைக்கிற உத்தேசத்தில் ஏற்பட்டவைதான்” என்று கர்ம மீமாம்ஸகர்கள் சொல்வார்கள். லேகியம் சாப்பிட்டு ஒருநாளும் சிங்கத்தோடு சண்டைக்குப் போக முடியாது என்பதுபோல, அந்த பிரம்ம நிலையும் ஏதோ அசாத்தியத்தைச் சொல்லும் கதை என்றே கருதினார்கள்.

இவர்களுக்கு ஆசார்யாள் என்ன எதிர்வாதம் செய்து உபதேசித்தார்? வேதத்தில் காரியத்தைச் சொல்கிற விதிகளைப்போலவே, இன்னின்ன காரியம் செய்யக்கூடாது என்று சொல்லும் ‘நிஷேதங்’களையும் நீங்கள் அர்த்தவாதம் என்று தள்ளிவிடாமல் ஒப்புக் கொள்கிறீர்கள். வேதம் ‘கள் குடிக்காதே’ என்கிறது. இங்கே செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆனாலும், ஒன்றைச் செய்யாததாலேயே பிரயோஜனம் இருக்கிறது – கள் குடிக்காததால் புத்தி கலங்காமல் இருக்கிறது என்பதால் இதை நீங்களும் ஏற்கிறீர்கள். சில காரியங்களைச் செய்யாததிலேயே பிரயோஜனம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அதாவது காரியத்துக்கு இல்லாமல் (வேத) சப்தப் பிரமாணத்தைப் பிரயோஜனத்துக்காகவே ஒப்புக் கொள்கிறீர்கள். சிலவற்றைச் செய்யாமலிருப்பதே பிரயோஜனம் என்று நீங்கள் சொன்னால் நானோ உபநிஷத்தில் சொன்னபடி பரம ஞான நிலையில் ஒன்றையுமே செய்யாததுதான் பரமப் பிரயோஜனம். அது வெறும் அர்த்தவாதம் அல்ல என்கிறேன். ஒரு நிலைவரைக்கும் வேத விதிப்படி லோக க்ஷேமார்த்தமாக கர்மா செய்து செய்துதான் மனஸைக் கண்டபடி திரியாமல் தர்மத்தில் கட்ட முடியும். ஆனால், கர்மாவே முடிந்த முடிவு, நிறைந்த நிறைவு என்பது சரியில்லை, கர்மா உள்ள வரை அதன் பலனை அநுபவிக்க ஜன்மா எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஜன்மா முழுக்க துக்கமே இல்லாமல் நிறைந்திருக்க எவராலாவது முடியுமா? கர்மா தரும் நிறைவும் ஆனந்தமும் தாற்காலிகம்தான். நிறைந்த நிறைவு, நித்யானந்தம் எப்போது ஏற்படுகிறது? கர்மாநுஷ்டானத்தால் சித்த சுத்தி உண்டானபின், கர்மாவை விட்டு, ஆத்ம விசாரம் பண்ணி, தியான யோகத்தில் இறங்கி அதன் முடிவில், தான் எங்குமாக நிறைந்து ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிற ஆத்மாவே என்று அநுபவிக்கிறபோதுதான் நிறைந்த நிறைவு, பூரணத்துவம், சாசுவத சௌக்கியம் உண்டாகும். இத்தனை கர்மாவும் அந்தக் காரியமற்ற நிலைக்குக் கொண்டுவிடவே ஏற்பட்டவை” என்று உபதேசித்தார்.

‘சரி, ஒரு காரியமும் இல்லாமல் ஒருத்தன் ஆத்மானந்தத்தில் இருக்கிறான் என்றால் அவனுக்கு வேண்டுமானால் அது பரமப்பிரயோஜனம். ஆனால், லோகத்துக்கு அவனால் என்ன பிரயோஜனம்? வேதம் சொல்கிறபடி அவரவரும் கர்மாவை, கடமையைச் செய்தால்தானே லோக க்ஷேமம் உண்டாகிறது.

இதற்கு ஆசாரியாள் என்ன பதில் சொன்னார்? ‘ஜனங்களுக்குப் பெரிய பிரயோஜனம் அன்பாக, ஆனந்தமாக இருப்பதுதானே? கர்மாவை விட்டுவிட்டு ஒருத்தன் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும்போது, ‘ப்ரைஷ மந்திரம்’ என்று ஒன்று சொல்கிறான். அது, என்னைக் கண்டால் ஒரு ஜீவராசிக்குக்கூட பயம் உண்டாகக்கூடாது. சகல ஜீவராசிகளிடமும் நான் அன்பாக இருக்கக் கடவேன்’ என்கிறது. கர்மா இருக்கிற வரையில் அதற்கு ஏதாவது இடையூறு வந்துதான் சேரும்; உடனே கோபம், துவேஷம் வரத்தான் செய்யும். சந்நியாசிக்கோ கர்மாவே இல்லை. அதனால் எல்லோரிடமும், எல்லாவற்றிடமும் அவனே எப்போதும் அன்பு மயமாக இருக்க முடியும். அன்பாக இருப்பதே இவனுக்கும் ‘கர்மா’வாகி விடுகிறது என்று வேடிக்கையாகச் சொல்லலாம். இவனுடைய தரிசனமே மற்றவர்களுக்கு அன்பை, ஆனந்தத்தைத் தருகிறது. இதைவிட லோகப் பிரயோஜனம் என்ன வேண்டும்? ஸ்தூலமாகக்கூட இவன் காரியம் செய்யாமலா இருக்கிறான்? காரியத்தால் தனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லாவிட்டாலும், தன் தரிசனத்தால் தத்வோபதேசத்தால் லோகத்துக்கு நன்மை செய்வதற்காக ஊர் ஊராகச் சுற்றுகிறான். தான் கொஞ்சம்கூடப் பட்டுக்கொள்ளாமலே, பட்டுக் கொள்ளாததாலேயே, லௌகிகர்களைவிட ஜாஸ்திக் காரியம் செய்கிறான். மற்றவர்கள் அழுதுகொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும், லாப நஷ்டக் கணக்கு பார்த்துக் கொண்டும் செய்வதால் பூரண சக்தியோடு காரியம் பண்ண முடியவில்லை; அதில் குறைகள் உண்டாகின்றன. இவனோ, சிரித்துக் கொண்டே செய்வதால் அசாத்தியமானதையும் அநாயாசயமாகச் செய்துவிடுகிறான். இவனுக்கு எல்லாம் தானானதால், தன்னிடமே ஒரு தோஷம் இருப்பதற்காகத் தன்னைத் தள்ளிவிடாததுபோல், பிறரிடம் இருக்கிற தோஷத்துக்காக அவர்களை துவேஷிக்காமல், அதைப் பரம பரிவோடு நிவிருத்தி பண்ணுகிறான். அவன் இருக்கிற நிறைந்த நிறைவான, பரிபூரண ஆனந்த நிலையில் ஜனங்களைச் சேர்க்கத்தான் முதல்படியாக வேத கர்மா இருக்கிறது. ஜனங்கள் சொந்த லாபத்தையே நினைத்து ஆசைவயப்பட்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று விடாமல், வேதம் லோகோபகாரமாகக் கர்மாவைக் கொடுத்திருக்கிறது. இவற்றை நிஷ்காம்யமாக (பற்றில்லாமல்) செய்து செய்து சித்தசுத்தி உண்டான பின் இவை நின்றுவிடலாம்’ என்று ஆசார்யாள் விளக்கினார்.

ஞானியின் அன்பு, ஆனந்தம், நிஷ்காம்ய கர்மம் முதலியவற்றுக்கெல்லாம் தாமே ஒரு விக்கிரகமாக ஆசார்யாள் குமாரிலப்பட்டரின் முன் நின்றார்.

ஈசுவர பக்தியில்லாமல் வறட்டுக் கர்மம் செய்வது பிசகு என்றும் விளக்கினார். ‘கர்மம் என்பது ஜடம். அது தனக்குத்தானே பலன் தந்து கொள்ள முடியாது. லோக க்ஷேமத்துக்காக ஸ்வாமிதான் வேதத்தின் மூலம் கடமைகளை விதித்து, பலன் தருகிறார். கர்மாவில் குறை ஏற்பட்டால் க்ஷமித்துக் கைதூக்கி விடவும், குறை வராமல் கர்மா செய்யும் சக்தியையும் சிரத்தையையும் பெறவும் அவரையே பிரார்த்திக்க வேண்டும். அவர் பிரீ்திக்காகச் செய்கிறோம் என்கிற பாவம் வந்தால்தான், சொந்த ஆசைக்காகக் காரியம் செய்வது போகும்.’

இப்படி ஆசாரியாள் உபதேசிக்க உபதேசிக்கக் குமாரிலபட்டருக்குக் கர்மமெல்லாம் ஈச்வரார்ப்பணம் செய்யப்பட்டு பக்தியிலும், அந்த பக்தி ஈசுவரனோடு இரண்டறக் கலந்து விடும் ஞானத்திலும் கொண்டு விடுவதற்குத்தான் என்று நன்றாகத் தெளிவாயிற்று.

ஆனந்த பாஷ்பத்துடன் ஆசார்யாளைப் பார்த்து, ‘கர்மமே பலன் தரவில்லை, ஈச்வரன்தான் பலதாதா என்று நன்றாகத் தெரிகிறது. நான் பிராயச்சித்தமாகச் செய்கிற இந்தத் துஷாக்னிப் பிரவேச கர்மாவுக்குப் பலனாக எனக்கு ஞானாமிருதத்தைத் தருவதற்கு ஈசுவரனான தாங்களே பலதாதாவாக வந்திருக்கிறீர்கள். கர்மாவினால் ஒருநாளும் கிடைக்காத ஜனன நிவிருத்தியை எனக்கு அருளிவிட்டீர்கள். அந்திம சமயத்தில் பக்தர்களுக்குக்கூடப் பகவத் ஸ்மரணை வராது என்பார்கள். ஆனால், ஸ்வாமியே தேவையில்லை என்ற எனக்கோ, தாங்களே நேரில் பிரத்தியக்ஷமாகி விட்டீர்கள். தங்கள் சித்தாந்தம் முழுவதும் எனக்குச் சம்மதம். ஆனால், இன்னும் சில க்ஷணங்களில் சரீரத்தை விட்டுவிடப்போகிற நான், மற்ற கர்ம மார்க்கக்காரர்களுக்கெல்லாம் இதை எடுத்துச் சொல்ல முடியாமல் அசக்தனாக இருக்கிறேன். ஆகையால் தாங்கள் மாஹிஷ்மதி நகரத்துக்குச் சென்று, அங்கே என்னைவிட மீமாம்ஸகராக இருக்கிற மண்டன மிச்ரருக்கு இதே உபதேசத்தை அநுக்கிரகத்துத் தங்கள் சித்தாந்தத்துக்குத் திருப்பிக் கொள்ளுங்கள். பிறகு மீமாம்ஸகர்கள் எல்லோரும் அதே வழிக்கு வந்துவிடுவார்கள்’ என்றார்.

சரீரத்தை வறுத்து எடுக்கின்ற அக்கினியின் தாபமே தெரியாமல் குமாரிலபட்டர் ஆசாரியாளின் சந்நிதான விசேஷத்தால் அமிருதத்தில் நனைந்த மாதிரி இருந்தார். இந்தக் கட்டத்தை நினைக்கிறபோது ‘மூக பஞ்சசதீ’ சுலோகம் ஒன்றும், அப்பர் ஸ்வாமிகளின் பாடல் ஒன்றும் ஞாபகம் வருகின்றன.

________________________________________________________________________________

Lord Subrahmanya’s incarnation in North India (Part 3)

 

Karma-Meemaamsa declares ‘It is enough if we perform only the rituals prescribed by the Vedas. There is no need for any Bhakthi (Path of Devotion) or Gnana (Path of Knowledge)’. But the same Vedas, which are accepted by the Karma-Meemaamsa sect, in its later portion called Upanishads, also speaks about the Non-Dual Self-Realisation where all actions ceases.

Karma-Meemaamsakas (to support their theory) bifurcated the Vedas into two parts called ‘Vidhi’ and ‘Artha-Vaada’. ‘Vidhi’ is that portion of the Vedas, Where the Mantras for performing the Rituals are available, which will guide in performing the rituals. So this part talks about the ‘Activities/Action’.

But in the Non-Dual Experience, there is no place for any action or activity. It is simply a state of being. The Meemaamsakas said ‘Whatever may be in the Vedas. ‘Karma’ alone provides welfare to us and the Universe. So this portion of the Vedas which lays down the rules for Karma, is important to us. ‘Artha-Vaada’ is that portion of the Upanishad which does not speak about Self-Realisation. It will glorify the results obtained by the ‘Karma-rituals’, though illusionary stories, and encourage people to follow the Karma.

I found one advertisement in the Newspaper, for a tonic which gives strength to the body. In that there was a picture showing a wrestler fighting with a lion. Is that picture meant for our enjoying? No. It is meant to induce to believe, as in ‘Artha-Vaada’, that if you take this tonic then you will also become as strong as that wrestler.

In the same way, the Upanishads declare, ‘A person who does all the rituals (Action) will finally attain and merge with the Non-Dual Brahman’. This is meant to encourage the person on the path.

It has added that in the final stage the ‘Action’ will cease for that person and he attains Realisation (Knowledge). The ‘Karma-Meemaamsaka’s tell that this statement is only to induce the person to do more and more rituals. They say that ‘Just like you cannot fight the lion after taking that medicine, in the same way ‘Non-Dual Realisation’ is an impossibility’.

How did Acharya Shankara counter their arguments? He said as follows:

“In the Vedas, there are instructions on what should be done. Similarly it has also laid down instructions about what should NOT be done, called ‘Nisheda’. You (Karma-Meemaamsakas) have not neglected these ‘Nishedas’ saying they are mere ‘Artha-Vaadas’ but accepted them. Vedas say do mot consume alcoholic drinks. Here there is nothing to be done. But there is a benefit in not doing a thing. Not taking alcohol ensues that your mind is not intoxicated and you all accept that fact.

You accept that there is use in doing some action. You accept the Vedic-Chanting (Primordial Sound) not for the rituals but its Use/Utility. You tell that it is useful if we do not do certain actions. But I say that as per the dictum of the Upanishads, In the Final State of Realisation, not doing any activity is most useful. That is not ‘Artha-Vaada’. To a certain extent when we perform the Vedic Rituals, for the welfare of the Mankind, it will help us to control our mind and ensure it (mind) follows the Righteous Path.

But it is not correct to say that ‘Karma’ (Vedic Ritual) is the final truth. We have to keep on taking birth repeatedly, till we exhaust all our Karma. Can anyone have a life without any sorrows? The satisfaction and happiness resulting from performing ‘Karma’ is temporary. When do we gain ‘Nithya-Ananda’ (Eternal Bliss)?

Once we gain Mental Purity by performing the Rituals sincerely, then we leave out the Karma (Action) and follow the path of Meditation which leads to the experience of ‘Self-Realisation’. All Karma (Ritual) were created to lead us to this Final destination (Self-Realization)’.

Okay. If a person is immersed in ‘Non Dual Bliss’ it may be beneficial to him alone. But what is the benefit derived by the Mankind from such a person? On the contrary, entire Mankind is benefited when each perform their respective Karma (Duty) assigned by the Vedas.

The following is the reply given by Acharya Shankara for these questions:

“The biggest benefit for the people is being immersed in Love and Happiness. When one person leaves all ‘activities’ and take up ‘Sanyasa’ (Renunciation) he utters one mantra called ‘Prisha’ where he takes a vow that ‘No living being should have any fear of me. I will always selflessly love every living being’. When we perform ‘activity’ there will always be hindrance which will result in anger and spite.

But for a renunciate there is no ‘action’. Hence he can always shower (selfless) love towards all. We can humorously add that showering love on all becomes his only activity. His mere presence radiates love and happiness in all. What more benefit is necessary to mankind? Is he not doing physical activity? Though he has nothing to gain by any ‘activity’ he roams around from place to place, giving Darshan to all and spiritual discourse, leading to the welfare of the Mankind. Since he does not attach himself to anything, he does more ‘activity’ than worldly people.

The common people perform actions many times, weeping, or in anger and always thinking about the gain or loss from such ‘action’. Because of that they are unable to perform the action with full involvement and might, resulting in deficiency in such actions. Whereas the ‘man of knowledge’ does every action with a smile and hence he is able to accomplish even the impossible tasks with utmost ease. Since he considers every living being as his own self, he does not take cognizance of others defects and treats every one with great compassion.

The Vedic rituals are the first step to mankind for reaching the Final Blissful State which the ‘Knower’ is experiencing right now. The Vedas have created all the rules and rituals which is useful to the Mankind to ensure that the man does not go after mundane things with selfish interest. All these rituals have to be performed with detachment to gain purity of mind. Once the Mind is purified all these rituals can be stopped”. This is how Acharya Shankara had explained this concept.

Acharya Shankara, who was Himself a personification of  ‘a Gnani’s innate Love, Bless and Selflessness’,  came and stood before Kumarila Bhatta.

Acharya Shankara explained that performing ritual alone without devotion to God was wrong. Karma is inanimate and cannot give any result on its own. It is God alone who has allocated duties through the Vedas and for the welfare of mankind and also delivers the results (for all actions). We have to pray to the Divine to ‘Lift us in case of any deficiency in our actions, and bless us with sincerity and strength to perform the action’. All selfish activities will vanish when we realise that we are performing the ‘action’ for the Divine alone.

Even as Acharya Shankara was discoursing like this, Kumarila Bhatta understood, that all actions should be meant to be performed as a dedication to the Divine, which will result in Devotion and subsequently to the Realisation where one will merge with the Divine.

Tears flowed from the eyes of Kumarila Bhatta. He addressed Acharya Shankara as follows: ‘I now understand that ‘Karma’ alone does not yield results. It is the Divine which dispenses all fruits-of-action. I am undergoing this ‘Slow-Burning-on-the-pyre-of-husk’ as a repentance and you, the Divine itself, have come to give the ‘Nectar of Wisdom’ as the ‘fruit-of-my-action’. You have blessed me with Liberation which the ‘Karma’ could have never given me. It is said that even devotees will not have thought of the Divine during the final moments of their life. But you have appeared before me even though I negated the Divine. I fully agree with your philosophy.  But I am not in a position to tell my other ‘Karma-Meemaamsakas’ about this aspect as I am going to shed my mortal coil very soon. So kindly proceed to the city of ‘Mahishmathi’ and meet my disciple ‘Mandana Misra’, who is a much stricter follower of the Vedic Rituals. Kindly bless him with this discourse (Which you have given to me now) and convert him to your philosophy. Then all the other ‘Karma-Meemaamsakas’ will return to that fold’.

Kumarila Bhatta was lying on scorching Fire but he did not feel the heat because of presence of Acharya Shankara. It was he was in a shower of Nectar. I remember one Shloka in the Hymn ‘Mooka-Panchashati’ and one hymn of Saint Appar, referring to similar incident.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading