‘ஆசாராத் தனம் அக்ஷய்யம்’ – இதற்கு நிரம்பப் பணம் கொழுத்திருப்பது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளாமல் இன்னொரு விதத்தில் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். வரவு ஜாஸ்தியாகிவிட்டால் மாத்திரம் ஸுபிக்ஷமாகிவிடுமா? நிறையப் பணம் இருப்பதாலேயே நிறையத் தப்பு வழிகளில் போய்க் கஷ்டப்படுவதாக ஆவதையும் பார்க்கிறோமே! இரண்டு கையாலும் ஸம்பாதனை செய்தாலும் அதைவிட ஜாஸ்தி செலவுகளில் மாட்டிக் கொண்டு, கடன், கஸ்தி, ஓவர் டிராஃப்ட் என்று அவஸ்தைப்படுபவர்களைப் பார்க்கிறோமே! குடி, ரேஸ் என்று உடம்பும் கெட்டு குடும்ப வாழ்க்கையும் கெட்டுப் போகிறதும் பணக்காரர்களில்தான் அதிகம் பார்க்கிறோம். அதனால் நமக்கு வேண்டும் ஸுபிக்ஷம் வரவு ஜாஸ்தியாவதால் கிடைக்காது; செலவு குறைந்து வரவுக்கு அடங்கியிருப்பதுதான் ஸுபிக்ஷம். “ஆன முதலுக்கதிகம் செலவானால்” எத்தனை வரும்படி இருந்தாலும் “மானமழிந்து மதிகெட்டு” என்று எல்லா அனர்த்தமும் ஏற்படத்தான் செய்யும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
‘Aacharath dhanam akshayyam’ – ‘Abundant wealth’ need not be interpreted as having a lot of money. Can one be considered wealthy just because his income is very high? We see rich people going in the wrong path! We see people earning very well but caught in debts, overdrafts, etc.! Some of the rich spoil their health and ruin their life because of habits like drinking and horse racing. So prosperity does not mean just abundant income. Prosperity is controlling the expenses so that they remain within the income. If one were to spend more than what he earns, no amount of income will suffice; he will only lead a life of shame, with an intellect that is indiscriminate in thinking. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
I think very less people will understand HIS words. Need to read between sentences.