Periyava Golden Quotes-725

பொதுவாக ஆசாரங்கள் வெளிச் சுத்தம், ஆரோக்யம், ஸமூஹத்தின் ஸெளஜன்யம், குடும்ப வாழ்வின் ஒழுங்கு எல்லாவற்றையுங்கூடத் தருவதாக – அதாவது இம்மையிலும் ஸௌக்யம் தருவதாகவேதான் உள்ளன. அதனால் தான், சாஸ்த்ராய ச ஸுகாய ச என்பது. ஆசார வாழ்க்கை நடத்துவது சாஸ்த்ரத்துக்கு சாஸ்த்ரமும்; ஸெளக்யத்துக்கு ஸெளக்யமும்’ என்று அர்த்தம். இம்மை நலன்கள் எல்லாம் ஆசாரமாயிருப்பவர்களுக்குக் கிட்டும் என்பதற்கு சாஸ்திர வாக்யமே இருக்கிறது:

ஆசாராத் லபதே ஹ்யாயு: ஆசாராத் ஈப்ஸிதாம் ப்ரஜா:|

ஆசாராத் தனம் அக்ஷய்யம் ஆசாரோ ஹந்த்-யலக்ஷணம் ||

-‘ஆசாரத்தினால் தீர்க்காயுஸ் லபிக்கிறது; ஆசாரத்தினால் நமக்கு எப்படி இஷ்டமோ அப்படிப்பட்ட ஸந்ததி உண்டாகிறது; ஆசாரமாயிருப்பதால் குறையாத செல்வச் செழிப்பு ஏற்படுகிறது; ஆசாரம் குரூபத்தையும் போக்குகிறது’. இப்படி ‘மெடீரியல் பெனிஃபிட்’களைக்கூட ஆசாரத்துக்குப் பலனாகச் சொல்லியிருக்கிறது. சரீர லாவண்யங்கூட ஆசாரத்தால் உண்டாகிறதாம். ஆசார அநுஷ்டானங்களை அப்யஸிப்பவர்களின் தேஹத்திலேயே ஒரு காந்தியும் தேஜஸும் ‘ஆசாரக்களை’ என்று ஏற்பட்டு விடுவதால், காது, மூக்கு எப்படியிருந்தாலும் அந்த ரூபத்தைப் பார்த்தவுடன் மதிப்பும், பிரியமும் உண்டாகி விடுவதையே இப்படிச் சொல்லியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Overall, aacharams, when followed, ensure external purity, good health, good relations within community, and discipline in family life, etc. thereby assuring wellness of the people in this life. There is a saying ‘Sastraya cha sukhaya cha’ (शास्त्राय च सुखाय च) meaning ‘living a life adhering to the rules of aacharam helps us live in accordance with sastras and also happily’. There is a saying in the sastras that the person will be bestowed with all good things if he follows sastras.

‘Aacharath labhate hyayuh I aacharath ipsithaam prajaah I

aacharath dhanam akshayyam I aacharo hanthyalakshanamII

(आचारात् लभते ह्यायुः । आचारात् ईप्सिताम् प्रजाः ।।                       आचारात् धनं अक्षय्यम् । आचारो हन्त्यलक्षणम्।।)

Adhering to Aacharams grants the following: ‘a long life, desired progeny, abundant prosperity, and enhanced beauty’. Following the aacharams bestows material benefits on the person. It also says that one gets more beautiful by following aacharams. Those who diligently practice the prescribed aacharams develop a glow and a tejas about them. So even if they have very ordinary features, a look at them makes people give respect and love. That is what is mentioned above – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: