Do ‘Sevai’ daily…


Jaya Jaya Sankara Hara Hara Sankara – I have heard this incident in Sri Ganesa Sarma mama upanyasam. The importance of doing Veda Rakshana kainkaryam especially for the young children (and their parents) who have dedicated their life for this noble cause has been highlighted here.

Many Jaya Jaya Sankara to Smt. Prabha Aravind for the translation and Shri Rama for the share. Rama Rama

தினமும்   சேவை   பண்ணு!

பெரியவா  சரணம்.

ஒரு  நாள்   பெரியவா,    வேத பாடசாலை   ஒன்றுக்குச்   சென்றார்.

எந்த   வேத பாடசாலைக்குச்   சென்றாலும்   அங்குள்ள    சமையல்  அறையை    அவர்   தவறாமல்   பார்ப்பதுண்டு.

அங்கு   சமைக்கிறவர்கள்    ஆசையாக, சிரத்தையுடன்  சமையல்   செய்கிறார்களா   என்று  கவனிப்பார்.

அவர்   போன அன்று    ஒருவர்   வேர்க்க, விறு விறுக்க   குழந்தைகள்   சாப்பிடுவதற்காக    சேவை   பண்ணிக்   கொண்டிருந்தார்.   திடீர்   சேவை  வராத காலம்   அது.    மிகவும்   பாடுபட  வேண்டும்.

அதைப்    பார்த்த  பெரியவாளுக்கு    மிகவும்   மகிழ்ச்சியாக   இருந்தது.   “அடிக்கடி    பண்ணுவயோ”   என்றார்.   “முடிந்த வரை   பண்ணுவேன்… பாவம்!   குழந்தைகள்   வீட்டை  விட்டு   இங்கு  வேதம்    படிக்க   வந்திருக்கிறார்களே!  வாய்க்கு   ருசியாக   இருக்கட்டுமே   என்று  தான்   பண்ணுகிறேன்!”  என்றார்  சமையல்காரர்.

“ரொம்ப    சந்தோஷமா   இருக்கு!    தினமும்   சேவை   பண்ணு! ”   என்று  சொல்லி  விட்டு   பெரியவா   வெளியே வந்து விட்டார்.  ” என்னடா   இது…  இவ்வளவு   கஷ்டமான   பலகாரத்தை   தினம்   பண்ணச்    சொல்கிறாரே! ”  என்று    அவரோ   தவித்தார்.

மறுபடியும்    ஸ்வாமிகள்   அவரைக்  கூப்பிடச்   சொல்லி, ”  நான்   தினமும் சேவை  பண்ணுன்னதும்   பயந்துட்டியோ?”  என்றார்.   அவர்  முகம் பயத்தைக்   காட்டி  விட்டது.  “முடிஞ்ச வரைக்கும்   பண்றேனே”  என்று   வாய் பேசியது.

உடனே   பெரியவா,  “பாவம்!   பயந்துட்டே   போல   இருக்கு.   நான்  சொன்ன   சேவை   இது   இல்லை.   தினமும்   குழந்தைகளுக்குப்   பார்த்து பார்த்து     சமைத்துப்   போடறே   இல்லையா?   அதைத்   தான்   பண்ணச் சொன்னேன்..  அது  தானே   பெரிய சேவை!”  என்று புன்முறுவலுடன் கூறினார்  பெரியவா.

இதைக்   கேட்ட  அவர்   மிக்க  சந்தோஷத்துடன்   சாஷ்டாங்க  நமஸ்காரம்   செய்தார்.

வேதம்   படிக்கும்    குழந்தைகளுக்குச்   சமைத்துச்    சாதம்   போடுவது   போலக் கைங்கரியம்    வேறு   இல்லை  என்பதை    பெரியவா   நமக்கு   உணர்த்துகிறார்….

________________________________________________________________________________

Do ‘Sevai’ daily….

One day Periyavaa visited a Veda Padasaalai. Periyavaa always visits the kitchen of all Veda Padasaalai He goes to.

He observes if the cook there, performs the cooking with affection and with utmost attention.

The day which Periyavaa visited the Padasaalai, the cook was painstakingly preparing “Sevai” (Rice Noodles) for the children. Instant Sevai was not available those days and so it took a lot of efforts to make the Sevai.

Looking at this, Periyavaa felt incredibly happy. “Do you do this frequently?” asked Periyavaa. The cook replied “I try to do as much as I can. Poor kids – They are staying away from their home to learn the Vedas. So, I want to ensure that they get good tasty food.”

“I am very happy! Do ‘Sevai’ daily!” said Periyavaa and came out of the kitchen. The cook was worried thinking “This is a difficult food to cook which takes a lot of effort. Periyavaa is asking me to do this daily!”

MahaSwami called the cook again and asked, “Were you scared when I asked you to perform ‘Sevai’ daily?” The cook’s face showed his fear and he said, “I will try do as much as I can”.

Periyavaa replied with a smile “Poor man! Looks like you got scared. This (Rice Noodles) is not the ‘Sevai’ which I meant. Everyday, you care about what you cook for these children and take great efforts to make them happy right? That’s what I meant! That’s the biggest ‘Sevai’ (Service)!”

On hearing this, the cook was overjoyed, and he prostrated in front of Maha Periyavaa.

Through this incident, Periyavaa indicates there is no greater service than cooking and serving for the children learning Vedas.



Categories: Devotee Experiences

Tags:

1 reply

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: