Jaya Jaya Sankara Hara Hara Sankara – How and Why Bhagawan takes Avatars? Does he take Avatar only once per Yuga? All these have been succinctly explained by Sri Periyava here.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for another brilliant exposition & audio. Rama Rama
அவதார தத்வம்
ஆதியில் தாம் ஸூர்யனுக்கு உபதேசித்த ஸநாதன தர்மம், முதலில் பல காலம் பிள்ளை, பிள்ளை வழியாகப் போய் நன்றாக அநுஷ்டானத்திலிருந்துவிட்டு அப்புறம் பிற்காலத்தில் நலிவடைந்து விட்டதென்றும், அதைத்தான் தாம் இப்போது அர்ஜுனனுக்கு மறுபடி எடுத்துக் கூறுவதாகவும் க்ருஷ்ணர் சொன்னார். இதைச் சொல்லும் கீதை ச்லோகங்களும் பார்த்தோம். அவர் நரவேஷம் போட்டுக் கொண்டு மயக்கிய மயக்கத்தில், தாம் பகவதவதாரம் என்பதையே அர்ஜுனனுக்கு மறக்கடித்திருந்தார்! அதனால் அவர் இப்படிச் சொன்னவுடன் அவன், “இதென்ன க்ருஷ்ணா! நீ இப்போது பிறந்தவன். ஸூர்யன் என்றைக்கோ பிறந்தவன். (ஸூர்யன் அர்ஜுனன் காலத்திலும் இருந்தவனானாலும், தாம் அவனுக்கு உபதேசித்த பிறகே அந்த உபதேசத்தை அவன் எத்தனையோ யுகங்களுக்கு முன்னிருந்த இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தானென்று பகவான் சொன்னதால் அர்ஜுனன் இப்படிச் சொல்கிறான்.) அப்படியிருக்க அவனுக்கு உபதேசித்ததாகச் சொன்னால் என்ன அர்த்தம்!” என்று கேட்டான்.
அபரம் பவதோ ஜந்ம, பரம் ஜந்ம விவஸ்வத: |
கதம் ஏதத் விஜாநீயாம் த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி ||(கீதை IV.4)
இப்படி அவன் கேட்டதற்கு பகவான், “இதற்கு முந்தி எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் ஆகிவிட்டன. எனக்கு மட்டுமில்லை. உனக்கும்தான். அந்தப் பூர்வ ஜன்ம ஸமாசாரமெல்லாம் எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது” என்றார்.
பஹுநி மே வ்யதீதாநி, ஜந்மாநி தவ சார்ஜுன |
தாந்யஹம் வேத ஸர்வாணி, ந த்வம் வேத்த பரந்தப ||(கீதை IV.5)
இப்படிச் சொன்னதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. நிறுத்தியிருந்தால்கூட, அவரை மநுஷ்யர் மாதிரியே நினைத்துக் கொண்டிருந்த அர்ஜுனன் ஒன்றும் எதிர்க் கேள்வி போட்டிருக்க மாட்டான். “மநுஷ்யனாகிய தனக்கு அநேக முன் ஜன்மங்களிந்திருப்பது போலவே இந்த க்ருஷ்ணனுக்கும் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியோ இவன் அந்த ஜன்மாந்தரங்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறான்” என்றுதான் நினைத்து, அதோடு விட்டிருப்பான். அப்படியே கேள்வி கேட்டிருந்தால்கூட, “உனக்கு ஏன், எப்படிப் பூர்வ ஜன்மங்கள் உண்டாச்சு?” என்று கேட்காமல், “உனக்கு எப்படி பூர்வ ஜன்ம ஸமாசாரமெல்லாம் ஞாபகமிருக்கு?” என்றுதான் கேட்டிருப்பான். நமக்கோ அது ஒரு விஷயமே இல்லை. தான் மநுஷ்யர் என்று அவர் நம்மை ஏமாற்ற முடியாது! அதனால் ஸர்வஜ்ஞரான அந்த பகவானுக்கு எப்படி ஞாபகமிருந்தது என்ற கேள்வி நமக்கு எழும்பாது. ஆனால் நமக்கு வேறே ஒரு பெரிய கேள்வி எழும்பும். “அர்ஜுனன் மநுஷ்யனானதால் கர்மாப்படி அவனுக்கு அநேக பூர்வ ஜன்மங்கள் இருந்து, இப்போது அவன் அர்ஜுனனாகப் பிறந்திருக்கிறான். இவரோ பகவான். இவருக்கு ஏது கர்மா? அதனாலே இவருக்கு ஏது பூர்வ ஜன்மாக்கள்? இவர் ஏன், எதற்காக, எப்படிப் பல ஜன்மாக்கள் எடுக்கிறார்? இப்போது நர லீலைக்காகப் பிறந்திருக்கிற மாதிரியே முன்னாலேயும் பிறந்திருப்பாரோ?” என்ற கேள்வி எழும்பும். நாம் இப்படிக் கேட்போம் என்று அவருக்குத் தெரியும். அர்ஜுனனுக்குத் தாம் உபதேசிப்பதையெல்லாம் வ்யாஸாசார்யாள் பாரதத்தில் எழுதி வைத்து, நாம் படிக்கப் போகிறோமென்று அவருக்குத் தெரியாதா? அதற்காகத்தானே அவர் உபதேசித்ததே? அதனால், அர்ஜுனன் ஒன்றும் கேள்வி கேட்காவிட்டாலும், நாம் கேட்போமே என்று எதிர்பார்த்து இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்:
அஜோ(அ)பி ஸந்-நவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோ (அ)பி ஸந் |
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாம்-யாத்ம மாயயா || (IV.6)
“நான் கர்மாவில் மாட்டிக் கொண்டு அதற்காக ஜன்மா எடுக்க வேண்டியதில்லைதான். நான் பிறப்பற்ற வஸ்து: அஜன். ப்ருகிருதி சேஷ்டிதத்தினாலும் மனஸின் விகாரத்தினாலும் பல தினுஸான மாறுபாடுகளை அடையும் ஜீவனல்ல. நான் மாறாத ஆத்ம வஸ்து: அவ்யயாத்மா. நான் ஸகல பூதங்களுக்கும் ஈச்வரன்:- பூதாநாம் ஈச்வர :- இப்படியெல்லாம் இருந்தும் — ‘அபி ஸந்’ என்றால் ‘இப்படியெல்லாம் இருந்தும் — ப்ரபஞ்சத் தோற்றத்தின் ஆதார காரணமான ப்ரக்ருதியை என்னுடைய மாயையால் வசப்படுத்திக் கொண்டு ஸம்பவிக்கிறேன், அதாவது ஜன்மா எடுக்கிறேன்: “ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”.
ப்ரபஞ்சத்தை மாயையினால் தோற்றுவிப்பது போலவே தம்மையும் ஜன்மா எடுப்பவராகத் தோற்றுவித்துக் கொள்கிறார். ஜீவ-ஜட ப்ரபஞ்சம் அத்தனையும்கூட அவரே எடுத்துக்கொண்ட தோற்றங்கள்தான். அவரைத் தவிர எதுவுமில்லை. ஆனால் ஜீவ-ஜகத்துக்களை ப்ரக்ருதி என்பது வசப்படுத்தி ஆளும்படியாக விளையாடுகிறார். அதனால், இவற்றுக்குத் தாங்கள் அவரே என்று தெரியவில்லை. ஜீவன் ப்ரக்ருதியின் ஸத்வ-ரஜோ-தமோ குணங்களில் சிக்கிக் கொண்டு பல விதமாகக் கர்மா செய்து, அவற்றை அநுபவிக்கவே ஜன்மா ஜன்மாவாக எடுத்துக் கொண்டு போகிறான். அவரோ இப்படி ப்ரக்ருதிக்கு வசமாகாமல், ப்ரக்ருதியைத் தாம் வசப்படுத்திக் கொண்டு ஆள்பவராக இருந்து கொண்டே, ஆனாலும் நம் மாதிரி ஜன்மா எடுக்கிறார். அதுதான் அவதாரம் என்பது.
ஏன், எப்படி அவர் ஜன்மாக்கள் எடுக்கிறாரென்ற கேள்விகளில் எப்படி என்பதற்கு இங்கே பதில் சொல்லியாயிற்று. அப்புறம்தான் ஏன் இப்படி அவரும் ஜன்மா எடுக்கிறார் என்பதற்குக் காரணம் சொல்கிறார். அதுதான் ஆசார்ய சரித்ரத்துக்கு ‘லிங்க்’. ஸுப்ரஸித்தமாகவுள்ள இரண்டு ச்லோகங்களில் சொல்கிறார்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத |
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||
பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (IV. 7-8)
ஏற்கெனவே தாம் எடுத்த ஜன்மங்களைப் பற்றித் தமக்கு எல்லாம் தெரியும், அர்ஜுனனக்குத் தெரியாது என்றுதான் ஆரம்பித்தார். அதாவது பூர்வ ஜன்மங்களைப் பற்றியே சொன்னார். அப்புறம் பொதுவாகத் தாம் ஜன்மா எடுப்பது எப்படி என்று சொல்லி, பூர்வத்தில் மட்டுமில்லாமல் எக்காலத்திலுமே தாம் ஜன்மா எடுத்தது, எடுக்கப்போகிறது எல்லாம் ஏன், எதற்காக என்று சொல்கிறார்.
என்ன சொல்கிறார்?
எப்போதெப்போது தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டாலும் : “யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி”;
தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டால் என்ன ஆகும்? அதர்மத்துக்கு அபிவிருத்தி உண்டாகும். அதைச் சொல்கிறார்: “அப்யுத்தாநம் அதர்மஸ்ய.”
இப்படி தர்மம் க்ஷீணித்து, அதர்மம் மேலோங்கும் போது, எப்போதெல்லாம் இப்படி ஏற்படுகிறதோ, அப்போது — “ததா”: “அப்போது” ;
அப்போது, என்னையே பிறப்பித்துக் கொள்கிறேன்: “ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம்.”
தர்மம் க்ஷீணித்தபோது என்ன ஆகும்? ஸத்துக்களான ஜனங்கள் ரக்ஷணையில்லாமல் தவிப்பார்கள். துஷ்டர்களிடம் ஸாதுக்கள் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவார்கள். இந்த ஸத்துக்களை ரக்ஷிக்க வேண்டும், அந்த துஷ்டர்களை சிக்ஷிக்க வேண்டும் என்று பரமாத்மா நினைப்பார்: “பரித்ராணாய ஸாதூநாம், விநாசாய ச துஷ்க்ருதாம்.” ஸாதுக்களை நன்றாகக் கட்டிக் காப்பாற்ற வேண்டும், துஷ்டர்களை அழித்து ஸம்ஹாரம் பண்ண வேண்டும் என்று பகவான் நினைப்பார்.
“இது ஏதோ அப்போதைக்குப் பண்ணின கார்யமாக முடிந்துபோய் விடக்கூடாது. அப்புறமும் கொஞ்சம் நீண்ட காலத்திற்கு லோகத்தில் தர்மம் நன்றாக ஸ்தாபிதமாயிருந்து, ஸாதுக்கள் நிம்மதியாக வாழும்படியாகவும், துஷ்டர்கள் தலை ஓங்காதபடியும் செய்ய வேண்டும். சைதில்யம் அடைந்த தர்மம் லோகத்தில் எந்நாளும் நலியாமல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படிப் பண்ணுவதற்கில்லைதான். எதிரெதிர் சக்திகள் — pair of opposites என்பவை — போராடிக் கொண்டு மாறி மாறி மேலுக்கும் கீழுக்கும் போவதில்தான் லோக நாடகமே இருக்கிறது. ஆனாலும் ஸ்ருஷ்டியின் விசித்ரப் போக்கில் இது ஸம பலப் போராட்டமாக இல்லாமல் ஆஸுரமான (அஸுரத்தனமான) அதர்மதத்திற்கே ஜாஸ்தி ஆளுகை கொடுத்து விடுவதால் நாடக ரஸம் போய் விரஸமாகி விடுகிறது. இந்த மாதிரி ரொம்பவும் முற்றிப் போகும்போதுதான் அவதாரம் எடுத்து சீர்படுத்துவது. இப்படி சிஷ்ட ரக்ஷணமும் துஷ்ட சிக்ஷணமும் செய்து தர்மத்தின் ஆளுகையை ஏற்படுத்திவிட்டு நாம் திரும்பிய பிறகும் ரொம்ப சீக்ரமே அஸுரர்கள் தலைதூக்கி சிஷ்டர்களைத் தலை சாய வைக்கத்தான் பார்ப்பார்கள். அதாவது அதர்ம சக்திக்கு ரொம்ப சீக்ரமே ‘அப்யுத்தானம்’ (எழுச்சி) உண்டாகப் பார்க்கும். நமக்கு நாமே பிறப்பைக் கொடுத்துக் கொண்டு மெனக்கிட்டு அங்கே போய்ப் பண்ணினது இவ்வளவு சுருக்க (விரைவில்) வீணாகி விடாமல் செய்யணும். எந்நாளுக்குமாக தர்மத்தைப் பெர்மனென்ட் பண்ணுவதற்கில்லையானாலும், ரொம்பவும் டெம்பரரியாகப் பிசுபிசுத்து விடாமல், கொஞ்சம் நீண்ட காலத்துக்கு ஆழமாக நிலை நாட்ட வேண்டும். அதாவது, தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ண வேண்டும். மேலெழ வெறும் ‘ஸ்தாபனம்’ இல்லை, ஆழமாக ‘ஸம்-ஸ்தாபனம்’ பண்ண வேண்டும்” என்று நினைப்பார். “தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய”: தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்காக.
என்னதான் ‘நன்கு’ நிலைநாட்டினாலும், சாச்வதமாக ஸ்தாபிப்பதற்கில்லையல்லவா? அதனால் ஒரு காலகட்டம் ஆன பிற்பாடு மறுபடியும் அதர்மம் கையோங்கும்தானே?
“ஓங்கி விட்டுப் போகட்டும். எப்போதெப்போது இப்படி ஏற்பட்டாலும் அப்போது பிறக்கிறேன் என்றுதான் சொன்னேனே! மறுபடியும் சொல்கிறேன்; ஸம்பவாமி யுகே யுகே: இப்படிப்பட்ட ஒவ்வொரு ஸந்தர்பத்திலும் அவதாரம் எடுக்கிறேன்.”
‘யுகே யுகே’ என்றால் ‘ஒவ்வொரு யுகத்திலும்’ என்று ‘லிடர’லாக அர்த்தம் பண்ணிக் கொண்டு ஒரு யுகத்தில் ஒரு அவதாரம்தான் செய்வார் என்று நினைத்துவிடக்கூடாது. ‘இனி எத்தனை யுகங்கள் ஸ்ருஷ்டி நடந்தாலும், அலுக்காமல் சலிக்காமல் தர்ம ஸம்ஸ்தானத்திற்காக மறுபடி மறுபடி அவதரிப்பேன்’ என்று பகவான் சொல்வதாகவே அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். முதலில் யுக அளவைச் சொல்லாமல், “யதா யதா” (எப்போதெப்போது) என்று தானே சொன்னார்? அதை அடுத்த ச்லோகத்திலேயே மாற்றி ‘யுகத்துக்கு ஒரு தடவை’ என்று பண்ணுவாரா?
எப்போதெல்லாம் தர்மம் மிகவும் சீர்கேடுற்று, அதர்மம் வலுத்தாலும் தாம் ஸத்துக்களைக் காப்பாற்றி அஸத்துக்களை அழிப்பதற்காக அவதாரம் என்ற பெயரில் ஜன்மா எடுப்பதாக பகவான் சொன்னார்.
‘பரித்ராணாய ஸாதூநாம்’ — “ஸத்துக்களைக் காப்பாற்றுவதற்காக” — என்று சொன்னதாலேயே, எத்தனைதான் அதர்மம் கையோங்கினாலும் அப்போதும் தர்மம் அடியோடு போய்விடாமல் தர்மத்தை அநுஷ்டிக்கும் ஸத்துக்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டிருப்பார்கள் என்று ஆகிறது.
ப்ரக்ருதியின் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்ட மநுஷ்யர்கள் மாதிரி கர்மாவுக்காக ஜன்மா தமக்கு இல்லை; லோக ரக்ஷணத்துக்காகவே தாமாக ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு ஜன்மா எடுக்கிறேன் என்று சொன்னார்.
__________________________________________________________________________________
The Truth behind the Avatara
Lord Krishna told Arjuna that He was conveying him again, the same Sanathana Dharma, which He had taught the Sun God and which was initially being practiced for a long time, passed on by one son to his next, but which had got weakened subsequently. We have seen the slokas from the Gita, which convey this. He had created such an illusion taking the human form that Arjuna never realized that Krishna was the Supreme Being. That is why, after Krishna said this, Arjuna asked Him, “How is this! You are born now. Whereas Sun God was born long time before. What do you mean by saying that you had taught this to Sun God earlier?” (Arjuna asked this question because, while the Sun was present at his time also, but Krishna was saying that He had taught this to Ishvaku, who lived eons before).
Aparam Bhavatho Janma, Param Janma Vivasvatha:
Katham Etat Vijaaneeyam Thvam Aadhow Prokthavan Iti
When Arjuna asked like this, Krishna said that there have been several lives for Him before the present one and that not only for Him, but also for Arjuna. While He knew all the things about His previous births, he (Arjuna) did not know them.
He did not stop with saying like this. Even if He had stopped, Arjuna, who had assumed Krishna to be only a human being, would not have asked counter questions to Him. Arjuna would have left the matter at that, thinking that just like he had several births in the past, Krishna also has had, but was only somehow able to remember them. Even if he had asked, instead of asking why He (Krishna) had previous births but would have only asked how He was able to remember His past births. For us, this is not an issue at all. He cannot deceive us to believe that He is a human being. Therefore, the question how the all-knowing God remembered His past births, would not arise for us. But a different big question will crop up for us. Arjuna was a human and therefore must have had several births based on his karma and now born as Arjuna. Whereas He is Bhagawan and so where is the question of karma for Bhagwan and therefore, why so many births for Him? Questions will arise, as to why and for what purpose, did He take several births and whether He would have taken previous births for reasons similar to the birth taken by Him for this human pastime. He knows that we would ask such questions. Does He not know that whatever that He preached Arjuna would be written down later by Sage Vyasacharya in the Bhagawatham, which we all would read? Did He not teach (Arjuna), for this very purpose? Therefore, even though Arjuna did not ask anything, anticipating that we all would raise the question, He himself started replying.
“It is true that I do not have to get entangled in karma and take births because of that. I am a birthless thing (Ajan). I am not a being who will change in different ways due to changes caused by nature or disturbances to the mind. I am a change-less spiritual thing. Avyayathma. I am the Eswara to all the elements – Bhoothanam Eswara: Despite being so – (A)pi Sann means, In spite of being so, – I come forth, controlling the Maya, which is the root cause for the illusory world, that is, take births: Prakruthim Swaam Adhishtaya Sambhavam-Yathma Mayaya”.
Just as He creates the world with Maya, He creates Himself as taking birth. All the living and Non-living worlds are only the forms He has taken. There is nothing else other than Him. But He is enacting a play where the living and non-living are controlled by the Prakruthi (nature). That is why, these (living and non-living) are not aware that they are all Himself. The soul, getting entangled in the Sathva-Rajo-Thamo qualities, carry out various types of karma and as a result take several births to experience the same. Whereas, He, even though, not being controlled by nature but being the controller of the nature Himself, takes births like us. That is what is called Incarnation (avatara).
Of the questions, Why and How He takes births, we have answered the How here. He is giving the reason for the “Why” he is also taking births, subsequently only. That is the link to Acharya’s history. He conveys that in the two very famous slokas.
Yadha Yadha Hi Dharmasya Glanir-Bhavati Bharatha
Abhyuthaanam Adharmasya Tadhatmaanam Srujamyaham.
Parithranaaya Sadhoonam Vinasaya Cha Dushkritaam
Dharma Samsthapanaarthaya Sambhavaami Yuge Yuge.
He started with saying that He knew about all His previous births and that Arjuna did not. That is, He talked about previous births only. Afterwards, He talks about, in general, why and for what reason, He takes births, not only the previous one but also about the births taken at all times and the ones He would be taking in future, etc.
What does He say?
Whenever righteousness is damaged (adversely affected) – Yadha Yadha Hi Dharmasya Glanir-Bhavati;
What will happen, if Dharma (righteousness) is adversely affected? Adharma (Non-righteousness) will grow/prosper. That is what He says, “Abhyuthaanam Adharmasya”.
When Dharma is adversely affected and Adharma grows, “Tadha” – then;
Then I make myself born – “Athmaanam Srujamyaham”.
What will happen when Dharma is weakened? Truthful people will suffer without protection. The meek will suffer at the hands of evil people. Paramathma will resolve that He has to protect the meek and punish the evil. “Parithranaya Sadhoonam Vinasaya cha Dushkritaam”. Bhagawan will decide to provide shelter to protect the good and to eliminate the evil.
Further, it should not end up as a happening to provide only a temporary solution. But it should be to ensure that the Dharma is established for a long time. And that good people should be able to live peacefully and the evil ones do not rear their heads. It may not be possible to make the weakened Dharma to shine brightly forever in the world. The entire pastime for Him lies in the contrasting powers – Opposite pairs, struggling against each other and rising one over the other, in turns. But in the strange ways of the creation, this game does not remain equally fought and since the Adharma (evil) gets to be ruling more, the play instead of being enjoyable, becomes painful. Only when this becomes worse, things are set right by His incarnations. It is possible that after He returns, establishing the rule of Dharma, annihilating the evil, very soon, the evil forces might raise their heads again and subjugate the good. That is, evil would like to Abhyuthanam (rise forth), very soon. Bhagawan will think that the efforts in taking himself a birth, should not get adversely affected so soon. Although it may not be possible to make Dharma, permanent and not fizzle out as a temporary phenomenon, it has to be deeply established for a long time. That is to establish Dharma deeply. Not superficially establish (not sthapana, but samsthapana) but to establish deeply. “Dharma Samsthapanarthaya”, to establish and entrench Dharma.
Howsoever well established, it may not be eternally established no? Therefore, after some period of time, would not Adharma rear its head again?
“Let it (evil) rise up. I have already said that whenever such a thing happens, I will take birth. Again I am saying, “Sambhavami Yuge Yuge”: I take birth in every such situation”.
We should not understand “Yuge Yuge” literally to mean in every Yuga and think that He will take Avatar only once in a Yuga. We should understand that in however many Yugas, creation will take place, He will incarnate Himself, to establish Dharma, without tiring and whining. Did He not, without mentioning the size of Yuga, say “Yadha Yadha”, (whenever)? Would He change it to ‘once in every Yuga’, in the next sloka itself?
Whenever, Dharma is adversely affected and Adharma gets strengthened, in order to save the good and to annihilate the evil, Bhagawan said He takes birth in the name of incarnations.
When it has been said, “Parithranaya Sadhoonam” – “to save the good” – it means that howsoever much evil may have an upper hand, even in such times, Dharma will still be there and that there will be at least a few people, following or practicing Dharma.
He says that He does not have births like the humans who get entangled in the control of nature and take births due to their karma; that He takes birth for the protection of the world, by controlling the nature.
_________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
no one can explain better than this. Periva is Periva.
Awesome!!
Maha Periyava Saranam!!
Excellant