பிரம்மசர்ய காலத்திலிருந்து வடக்கேதான் கச்சம் போட்டு வேஷ்டி உடுத்துகிறார்கள். குருகுலத்தில் ஸமாவர்த்தனம் ஆனதும் — அதாவது படிப்பு பூர்த்தியானதுமே – கல்யாணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் பஞ்சகச்சமும் மேல் வேஷ்டியும் ஒருத்தனுக்கு உண்டு என்பதுதான் சாஸ்திரம். இப்போது குருகுலவாஸமென்பதே போய்விட்டதென்றாலும் எங்கேயாவது நாலு பசங்கள் பாடசாலைகளில் அத்யயனம் பண்ணுவதாவது இருக்கிறதல்லவா? தக்ஷிண தேசத்தில் இப்படிப்பட்ட பாடசாலைப் பசங்கள் கூடப் படிப்பு முடித்தபின், கல்யாணமாகும் வரையில் முன்தலைமுறைகளிலும் இப்படித்தானிருந்திருக்கிறது. மற்றப் பிராந்தியங்களிலெல்லாம் ஸகல வர்ணத்தாருமே கச்சமில்லாமல் வேஷ்டி கட்டுவதில்லை என்று வைத்துக் கொண்டிருக்க, தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் மாத்திரம் பிராம்மணன் உள்படத் ‘தட்டுச்சுற்று’ என்று ஒன்றுக் கட்டிக் கொள்வதாயிருக்கிறது. இதுவும் அசாஸ்திரீயமே; அநாசரமே. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
In the North, people follow the practice of wearing the dhoti with ‘Kaccham’, from the time they are Brahmacharis. Once the Samavartanam (समावर्तन) is over in the Gurukulam – i.e. once the studies are completed – one has to wear dhoti with panchakaccham and a cloth over the upper part of the body. This is what the sastras stipulate. The concept of Gurukulavasam is gone now. But there are patashalas where few children are doing adhyayana. In the South, even in the previous generation, students who completed their education but were yet to be married, used to wear the panchakaccham. While in all the remaining regions, people of all castes wear the panchakaccham, only in Tamizhnadu and Kerala, everyone including Brahmins just wrap their veshtis around their waist. This too does not conform to the sastras and is considered ‘Anaacharam’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply