மூன்று தலைமுறைகளுக்குப் பொதுவான மூதாதையில்லாவிட்டால்தான் உறவுக்காரர்களுக்குள் கல்யாணம் பண்ணலாம் என்று சாஸ்திரத்திலிருக்கிறது. ஆரோக்யத்தின்படி consanguinous marriage (ரத்த பந்துக்களுக்குள் விவாஹம்) பற்றிச் சொல்கிறவர்களும் சாஸ்திரம் சொல்வது ஸரியே என்கிறார்கள். ஆனாலும் நம் தக்ஷிண தேசத்தில் நீண்ட காலமாகவே பரம வைதிகக் குடும்பங்களில் கூட அத்தான்-அம்மங்காள், அம்மாஞ்சி-அத்தங்காள் என்று அத்தை, மாமா ஸந்ததிகளுக்கிடையே, – அதாவது இரண்டாவது மூதாதையான தாத்தாவே பொதுவாயிருக்கிற உறவு முறையில் – சாஸ்திரத்துக்கு முரணாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டுதான் வருகிறார்கள். இன்னம் ஒரு படி மேலே போய் மாமா-மருமாளே பண்ணிக் கொள்வதையும் சில இடங்களில் பார்க்கிறோம். ‘இதென்ன அநியாயம்?’ என்று வடக்கத்திக்காரர்கள் கேட்கிறார்கள். வடக்கே குளிர்காலத்தில் குளிர் மிகவும் அதிகமாயிருப்பதாலும், அநேக துருக்கர் ஆட்சியின் இன்ஃப்ளுயென்ஸ் எத்தனையோ நூற்றாண்டுகளாக அதிகமாக இருந்திருப்பதாலும் நம்மை விட அவர்கள்தான் ரொம்ப ஆசார ஹீனமாக, பூஜாரிகூட சட்டை போட்டுக் கொண்டும், ஸாதுக்கள்கூட ஹுக்கா குடித்துக் கொண்டும் இருந்தாலும், இந்தக் கல்யாணக் கொள்வினை-கொடுப்பனையில் அவர்கள்தான் நம்மை விட சாஸ்திரோக்தமாக இருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
The sastras say that a boy and girl, related to each other can marry only if they do not have a common relative in the previous three generations. This is accepted even by medical experts who advise that consanguineous marriages should be avoided. But in the southern states, even in very traditional vedic families, marriage between a mama’s son and athai’s (aunt) daughter or athai’s son and mama’s daughter is very common. In such cases, the grandfather, who belongs only to the second generation before them, is the common relative. This is against the sastras. Even worse is the case of the mama marrying his niece – his sister’s daughter. People from the North do not approve of these practices. In many aspects North Indians do not strictly follow the sastras. Winter is very severe there. Also, the region had been under the influence of muslim rule for long. So we see even temple priests wearing a shirt or Sadhus often smoking a hookah etc. But in respect of marriages between relatives, they strictly follow the sastras. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply