31. Sri Sankara Charitham by Maha Periyava – Circumstances that necessitated the advent of Avathara

Jaya Jaya Sankara Hara Hara Sankara –  A very small chapter where Sri Periyava summarizes what has been discussed in length in the previous chapters; the reason why Bhagawath Padhal Avataram was required.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for the pleasing sketch &  audio. Rama Rama

அவதாரம் தோன்ற அவசியச் சூழ்நிலை

மொத்தத்தில் — இத்தனை நாழி நீட்டி முழக்கிச் சொன்னதற்கெல்லாம் ஸாரமாக — அப்போது தேச நிலைமை எப்படியிருந்ததென்றால், பூர்ணமான வைதிக மதம் மிகவும் க்ஷீணித்துப் போயிருந்தது; வைதிகம் என்று சொல்லிக் கொண்டே அப்படியில்லாத மதங்களும், வைதிகத்தைவிடத் தாங்கள்தான் நிஜமாகப் பரமாத்மாவின் ஆஜ்ஞையை அநுஸரித்து உண்டானவை என்று சொல்லிக் கொண்ட தாந்த்ரிக மதங்களும், வேதம்-பரமாத்மா என்ற இரண்டையுமே அடியோடு தள்ளிவிட்ட அவைதிக மதங்களுமாக மொத்தம் எழுபத்திரண்டு தடபுடலாகக் கிளம்பியிருந்தன.

மநுஷ்யராகப் பிறந்த எவரும் ஸரிசெய்ய முடியாத துர்பாக்யமான நிலைமை நம்முடைய புராதனமான மத நாகரிகத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இதிலேயே பெரிய பாக்யமாக ஈச்வரனேதான் அவதாரம் செய்தாகணும் என்றும் ஏற்பட்டுவிட்டது!

இங்கேதான் க்ருஷ்ண பரமாத்மா வருகிறார். அவரைத் தானே முதலில் நிறையக் குறிப்பிட்டேன்? அதற்குக் காரணமான link — பகவத்பாதாளின் அவதாரத்தில் க்ருஷ்ணரின் தொடர்பு — என்ன என்பதற்கு வருகிறோம்.
___________________________________________________________________________________

Circumstances that necessitated the advent of Avathara

In totality, to summarize what has been discussed so far going to such great elaborate lengths, is that the situation in the country then was that the Vedic religion had completely weakened; Religions which claimed to be Vedic but which were otherwise, mystical religions which claimed that they were the ones which adhered to the orders of the Supreme God more truly than the Vedic religions and those non-Vedic religions which simply discarded both Vedas and the Supreme God, in all 72 of them, had risen forth in a grand manner.

Our ancient religious culture was in such an unfortunate situation that it was not redeemable by anyone born as a human being.  It turned out to be a very privileged situation which necessitated the Eswara to incarnate himself.

Here only, Lord Krishna comes.  Did I not refer to Him a lot in the beginning?  The reason for that, the link – we are now coming to (discuss) the relationship to Lord Krishna in the incarnation of Bhagawath Padal.
__________________________________________________________________________________
Audio

 



Categories: Deivathin Kural

Tags: ,

4 replies

  1. Awesome!

  2. Wow…. Speechless. Great sowmya sister

  3. Awesome & brilliant !!!
    Maha Periyava saranam!!!

  4. Excellent sketch Sowmya!

Leave a Reply to Uma SomayajiluCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading