151. Maha Periyava’s Skanda Puranam-The Lightning of Grace (Gems from Deivathin Kural)



Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava continues to explain why the name ‘Swamy’ denotes only Lord Subramanya, details out the relationship between Lord Subramanya and Thirupathi Balaji, how the spiritual electricity splits itself into positive and negative energy to finally merge and produce a graceful lightning as Lord Subramanya. Another glorious chapter to read and share.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Hemalatha Sukumaran for the translation. Rama Rama

அருள் மின்னல்

‘ஸ்வாமி’ என்ற பெயர் ஸுப்ரம்மண்யத்துக்கே உரியது என்பதற்கு ஆதரவாக இன்னொரு விஷயமும் தோன்றுகிறது.

திருப்பதியை சுப்ரம்மணியரோடு சம்பந்தப்படுத்திப் பேசுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வேங்கடரமண ஸ்வாமியே சுப்ரம்மணியர்தான் என்று நினைக்கிறவர்கள் உண்டு. வேங்கடரமண ஸ்வாமி சகல தெய்வங்களாகவும் இருக்கிற பரமாத்மாவாக இருக்கிறார். அவரே பெருமாள், அவரே பரமேஷ்வரன் – அதனால்தான், அங்கே பில்வ அர்ச்சனை நடக்கிறது. அவரே அம்பாள் – இன்றைக்கும் சுக்ரவாரத்தில்தான் அவருக்கு அபிஷேகம்! புடவையைத்தான் உடுத்துகிறார்கள். எல்லாத் தெய்வமும் அவரே. அவரை சுப்ரம்மணியமாகச் சொல்பவர்கள் கூறும் காரணம் – அவர் மலைமேல் இருக்கிறதுதான். மலைமேல் பொதுவாக சுப்ரம்மணியர்தான் கோயில் கொள்கிற வழக்கம் இருக்கிறது என்கிறார்கள். ‘வேங்கட ரமணா’ என்று சொல்வதில்லை! ஹிந்திக்காரர்கள் அவரை என்னவென்று சொல்கிறார்கள்? ‘பாலாஜி’ ‘பாலாஜி’ என்றே சொல்வார்கள். பாலன், குமரன் என்றால் சிவசக்திகளின் செல்லக் குழந்தையான சுப்பிரமணிய ஸ்வாமியைத்தான் குறிப்பிடும். ‘குமாரதாரை’ என்றே திருப்பதியில் ஒரு தீர்த்தம் இருக்கிறது. இதோடு சேர்ந்து திருப்பதியிலுள்ள திருக்குளத்தின்பேர் ‘ஸ்வாமி புஷ்கரிணி’ என்றிருப்பதைப் பார்த்தால், “ஸ்வாமி”யே ‘குமாரன்’ தான் என்பதற்கு இன்னொரு சான்று கிடைக்கிற மாதிரி இருக்கிறது. திருப்பதி திருக்குளத்துக்கு “ஸ்வாமி புஷ்கரிணி” என்றே பெயர்.

சகல லோகத்தையும் – ஜீவர்களையும் ஜடத்தையும் – தன் சகல சொத்தாக (ஸ்வம்) க் கொண்டிருக்கிறவர்தான் ‘ஸ்வாமி’. அந்தப் பெயர் ஏன் சுப்ரம்மணியருக்கு விசேஷமாக வந்தது? அத்தனை பெருமை அவருக்கு ஏன் என்று பார்ப்போம்.

மேகத்தில் மின்னல் பளிச்சிடுகிறது. க்ஷணகாலம்தான் – அதற்குள் அது மகாஜோதியை, மகாசக்தியைக் கொட்டி விடுகிறது. எத்தனையோ ‘பவர் ஹவுஸ்’களில் ‘ஜெனரேட்’ செய்ய முடியாத அளவுக்கு மின்சாரத்தைப் பாய்ச்சி விடுகிறது. இத்தனை சக்தி இப்போதுதான் மின்னலாகத் தோன்றினாலும், இதற்குமுன் அது இல்லாமல் இல்லை. இல்லாதது எப்படித் தோன்ற முடியும்? ஸயன்ட்டிஸ்ட்கள் மின்சாரம் எப்போதும் எங்கேயும் நிறைந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், சாதாரணமாக அது தெரிவதில்லை. பின் எப்போது தெரிகிறது? நீராவி மேகமாக மாறித் திரிகிறபோது, ஒன்றாக இருக்கிற மின்சாரம் சில பகுதிகளில் வல அம்சமாகவும் (பாசிடிவ்), சிலவற்றில் இட அம்சமாகவும் (நெகடிவ்) பிரிந்து நிற்கிறது. பிற்பாடு மழைச் சமயத்தில் மேகங்களில் ஒருவிதமான நெரிசல், குமுறல் உண்டாகிறபோது, வல அம்ச (Positively charged) பகுதிகளும் இட அம்சப் பகுதிகளும் (negatively charged) நெருங்குகிறபோது, இந்த அம்சங்கள் ஒன்றையொன்று சரேலென்று ஆகர்ஷித்துக் கொள்கின்றன. இப்படி அவை தாவிக் கலக்கும்போதுதான், எங்கும் நிறைந்திருக்கிற மின்சாரம், நமக்குத் தெரிகிற மாதிரி, இத்தனை சக்தியுடன் மின்னலாக வெளிப்பட்டுத் தெரிகிறது. எங்கும் ஒன்றாக உள்ளபோது இருப்பதே தெரியாமல் இருந்த மின்சாரம் இரண்டாகப் பிரிந்து, பிறகு மறுபடி ஒன்றாகச் சேருகிற போது பெரிதாக ஜொலிக்கிறது; ஒலிக்கிறது இடியாக; மின்சக்தியை வாரிக் கொட்டுகிறது.

இது ஜடசக்தியான மின்சாரம். இந்த ஜடசக்திக்கு ஆதாரம் இதைப் பிறப்பித்த சித்சக்தி – ஞானசக்தி, அறிவுச் சக்தி. தன் சக்தியை அறிந்து கொள்ளாமலேயே எங்கேயும் பரம்பொருளாக அது முதலில் இருக்கிறது. அப்புறம் ‘பாஸிடிவ்’, ‘நெகடிவ்’ ஆகப் பிரிகிறது. அதைத்தான் சிவன், சக்தி என்கிறோம். தமிழில் ‘வலது’, ‘இடது’ என்று மின்சாரத்துக்குச் சொல்கிறோமே இதுதான் ரொம்பப் பொருத்தம். ஏனென்றால், ஈசுவரன் வலப்பக்கமும், அம்பாள் இடப்பக்கமும் இருப்பதுதான் அர்த்தநாரீசுவரக் கோலம். (அம்பாளுக்குப் பதில் இதே இடத்தில் – அதாவது இடப்புறத்தில் விஷ்ணு இருந்துவிட்டால் அதுவே சங்கர நாராயணர்). இரண்டாகப் பிரிந்தால் போதாது. மேகங்கள் உண்டானால் போதாது. மின்னலாக வாழ்விக்கிற சக்தி ஏற்பட வேண்டும். ஒன்றாக இருந்த பிரம்மம் தன்னை அறிந்து, சிவசக்திகளாகப் பிரிந்து, பிரபஞ்சத்தை உண்டுபண்ணி விட்டால் போதாது. பிரபஞ்சத்துக்கு எந்நாளும் அநுக்கிரகம் பண்ணிக்கொண்டிருப்பதாக ஒரு மின்னல் சக்தி பிறக்க வேண்டும். இதற்காகத்தான் இரண்டாக பிரிந்த வல அம்ச சிவனும், இட அம்ச சக்தியும் மறுபடி ஒன்றாகச் சேர்ந்து, மின்னல்போல சக்தி வேலாயுதத்தை பிடித்திருக்கிற சுப்ரம்மண்ய ஜோதியை ஆவிர்பவிக்கச் செய்தார்கள். பிரமத் தன்மையானது லோகாநுக்கிரகத்துக்கெனவே ஒரு மூர்த்தியாகிறபோது, ‘ஸுப்ரமண்யம்’ ஆகச் சிறப்புப் பெறுகிறது. “ஸு” என்றால் நல்லது. சிரேஷ்டமானது என்று அர்த்தம். வெறும் பிரம்மம், அநுக்கிரக ஸுப்ரமண்யமாவதால் “ஸ்வாமி” என்ற ‘டைட்டில்’ கிடைக்கும்படியான பெருமையைப் பெறுகிறது.

இந்த ஜோதி உண்டாவதற்கே மூலமான சித்சக்தி பிரிந்து, சேர்ந்தது. பிரிந்தது, அப்புறம் பெரிய ஆகர்ஷண வேகத்தோடு சேருவதற்குத்தான். சேர்ந்தது, இப்படி லோகங்களுக்கெல்லாம் கிருபை செய்கிற மகாசக்திமானாக ஒரு ஜோதிக் குமாரன் உண்டாவதற்குத்தான்.

மேகத்தில் நாம் பார்க்கிற மின்னல் ஜோதி வெளி இருட்டை மாத்திரம் வெகு சிறிது காலத்துக்கு நீக்குகிறது. சுப்ரம்மண்யமோ, அருள் ஒளி – அருட்பெரும்ஜோதி. அது வெளியிருட்டு, உள்ளிருட்டு இரண்டையும் சாசுவதமாக நீக்குவது. மின்சாரம் ஒருத்தரை இழுத்துக் கொண்டால் எவராலும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாது. ‘எலெக்ட்ரோக்யூட்’டானால் மரணம்தான். இந்த அருள் மின்சாரம் இழுத்துக் கொண்டாலும் எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், இது அந்த ஜோதி ரூபமாகவே நம்மையும் ஆக்கி, அமரமாகச் செய்துவிடும். அருணகிரிநாதர் “கந்தர் அநுபூதி”யில் இந்தப் பெரிய அநுபவத்தையே சொல்கிறார். ஒன்று இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாய்ச் சேர்ந்தபின், பலவாக நினைக்கிற நம்மையும் இழுத்துக் கடைசியில் அந்த ஒன்றாகவே ஆக்குகிறது.
__________________________________________________________________________________

The Lightning of Grace

I have a thought in support of the perception that the name ‘Swami’ refers only to Lord Subramanya.

You may be aware that Thirupathi gets mentioned in connection with Subramanya. Some people believe that Venkatramana Swamy is Subramanya himself. Venkatraman Swami is Paramathma who is the abode of all the deities. He is Perumal. He himself is Parameshwara, which is why he is worshipped with bilva leaves. He himself is Ambal.  The abhishekam is performed on Fridays (auspicious for Ambal) and the deity is decked in a saree!  This practice continues till date. He is all the Gods personified in one. Those who consider Him as Subramanya give out the reason that his abode is on a hill. They say that usually temples of only Subramanya are found on hill top. Also the North Indians address him as “Balaji’ and not as Venkataramana. ‘Balan’ and ‘Kumaran’ are the names attributed to the darling child of Shiva and Shakthi. There is a water body in Tirupathi by name Kumaradhara. Also there is pond by the name Swami Pushkarini. Looks like this could be another proof that Swami is Kumara. The divine pond of Thirupathi is called ‘Swami Pushkarini’.

Swamy means the one who possess (swam) the entire universe with its living and non living things. Let us analyse why the name Swami is attributed to Subramanya and why such greatness is attached to him.

Lightning flashes in the cloud just for a fraction of a second. But there is a dazzling display of light and outpour of great power. The striking lightning generates such an amount of electricity which many power houses put together are incapable of. It is a fact that such a power seen as lightning existed always. It cannot appear from nowhere. Scientists say that electricity is omnipresent but not always visible. When water vapor forms clouds and permeates, the electricity gets positioned separately as positive and negative. During rainy days when there is a compression and agitation of clouds, the positively charged ones and negatively charged ones get closer resulting in a strong and sudden pull.

When such a quick merger takes place the already existing electricity is visible to our eyes as a powerful lightning. The current was not visible when the state was single.  But after it got divided into two and subsequently when fusion took place it emitted a dazzling light. It thundered and showered charged with electric current.

This is an inanimate electricity. The base for this is the Chith Shakthi that is Gyana Shakthi or the Power of wisdom. Initially unaware of its strength it just permeates the world. Then it gets divided into positive and negative. That is what is called as Siva and Sakthi. In Tamizh we call the division of energy as right and left which is actually more appropriate. In the form of Arthanareeshwara we find Eswara in the right side and Ambal in the left (the form in which Vishnu is in the left is called Sankara Narayana).  It is not enough if it gets separated into two; It is not enough if clouds form.  A life supporter such as a lightning should be created. It is not enough if the single Brahmam having the knowledge of Self, gets divided into two as Shiva and Sakthi and creates the universe. A powerful lightning should be produced to permanently grace the people. That is why the two separated entities – Siva of right (positive) charge and Sakthi of left (negative) charge once again fuse together to bring out the Light as Subramanya holding the weapon Vel, as powerful as a thunderbolt. When ‘Brahmam’ takes a structural form as a deity for the welfare of the world it gets glorified as ‘Subramanyam’. ‘Su’ means good and also great. The plain Brahmam when becomes bestower Subramanyam it’s greatness is acknowledged and accorded with the title ‘Swamy.’

Chith Shakthi which is the source for the creation of the beacon light got divided and subsequently was fused together.  The division was aimed to have a fusion attracted by a powerful magnetic force. Fusion took place to favour the world with a powerful scintillating son.

The lightning flash that we see illuminates the sky just for a short while. Subramaniam is illuminant of Grace. It is a Dazzling light of grace. It permanently removes the darkness which is inside and outside.

If one is struck by electric current he has no means of escape.  Electrocution causes sure death. If this Grace of divine electric current passes through us, one cannot repel it. But this would make us blend with the light and become immortal. Saint Arunagirinathar narrates this great experience in his ‘Kandhar Anubuthi’ – One divided into two gets reunited and pulls us – who perceive ourselves as varied, and makes us merge with the eternal One.



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: