148. Maha Periyava’s Skanda Puranam-Swamy Denotes Only Kumara Swamy-Part 2 (Gems from Deivathin Kural)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The compassionate side of our Adi Aacharyal and how the book ‘Amara Kosham’ was saved has been explained vividly by Sri Periyava. It also shows how great our Sanatana Dharma is and how god helps one if he prays sincerely though he poses as a non believer, externally.

Many Jaya Jaya Sankara to Smt. Bharathi Shankar for the translation and Smt. Sowmya for another special drawing. Rama Rama

“ஸ்வாமி” என்றால் குமாரஸ்வாமியே (Part 2)

அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக் கொண்டு அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆச்சாரியாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.

அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான். அவன் என்னதான் மகாபுத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்பது ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷணகாலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும் ஸ்ர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷாத் சரஸ்வதி தேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால் இவன் அப்படிச் செய்திருக்கவே கூடாது. ஏனென்றால் இவனுடைய ஜைனமதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை. அதை பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில் ஆராதிப்பதை ஜைன தத்வம் ஒப்புக் கொள்ளக்கூடாது. அப்படியிருந்தும் இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.

இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப்பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால் வேங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்; மாரியம்மனுக்கும் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், “வீட்டில் இப்படி அபிப்பிராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி ( feeling) க்கு மதிப்பு (respect) கொடுத்தேன்” என்று ஜம்பமாகச் சொல்லிக்கொள்வார்கள்.

இந்த ரீதியில்தான் ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத்தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமரசிம்மன், அவை நன்றாக அமைய வேண்டும் என்று, ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கி விட்டான் என்றால், அதற்குண்டான ஒரு பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து, இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்து விட்டாள்.

இப்போது இவன் திரைக்கு இந்தப்புறம் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தான் எத்தனை புத்திசாலியானாலும் ஆசாரியாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவர்த்தி மாதிரி ஆகிவிடுவோம் என்பது இவனுக்குத் தெரியும். அதனால் முன்னமேயே வாக்குத்தேவியைத் தஞ்சம் புகுந்திருந்தான். இவனுடைய உபாஸனைக்கு இன்னும் கொஞ்ச காலம் பலன் தந்துதான் ஆகவேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டிருந்தாள். எனவே, “என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரைபோட்டுக் கொண்டு, நீ அதற்குள் இரு, சங்கரர் வெளியிலிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்” என்று வாக்குத் தந்தாள் வாக்தேவி.

அந்தப்படிதான் இப்போது நடந்தது. அதை ஆச்சர்யாளும் துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்து விட்டார்.

உடனே அவர், “அம்மா, உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தையே தொலைத்து விட வேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே இப்படி அநுக்கிரகம் செய்யலாமா? அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், இத்தனை புஸ்தகங்கள் அவன் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப் பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகத்தைச் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்ய வேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா?” என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.

அவருடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. அமர சிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்து கொண்டாள்.

உடனே கடத்திலிருந்து அந்தர்த்தானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது.

அப்புறம் அமரசிம்மனால் ஆசாரியாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டான்.

ஸரஸ் – அதாவது நீர் நிலையில் – இருக்கிறவள் ஸரஸ்வதி. அறிவுதான் அந்த நீர்நிலை. அது கொஞ்சம்கூடக் கலங்காமல் தெளிந்திருந்தால்தான் அதற்குள் அவள் இருக்க முடியும். ஆனால், ஆசாரியாள் அவதரித்த காலத்தில் எப்படியிருந்தது? ஏகப்பட்ட மதங்கள் – எழுபத்திரண்டு என்று சொல்வார்கள் – விதண்டாவாதங்களைச் சொல்லிக் கொண்டு அறிவையே கலக்கினதால், ஞான ஸரஸானது ஒரே சேற்றுக் குட்டை மாதிரி ஆகிவிட்டது. அப்போது அத்வைத உபதேசத்தால், ஆசாரியாள்தான் அந்தச் சேற்றை எல்லாம் அடியோடு வாரி அப்புறப்படுத்தி, ஸரஸைத் தெளியவைத்து, ஸரஸ்வதியை நிஜமான ஸரஸ்வதியாக்கினார். இப்படி ஒரு சுலோகம் உண்டு. (‘வக்தாரம் ஆஸாத்ய’ என்று ஆரம்பிக்கும்).

இம்மாதிரி ஸரஸ்வதியை ஸரஸ்வதியாக்குவதற்கே இப்போது அவர் ஸரஸ்வதியை அப்புறப்படுத்தும்படியாயிற்று. பிறகு அவர், ஸரஸ்வதியின் அநுக்கிரகத்தைப் பெற்ற அமரசிம்மனுக்கு தாமும் அநுக்கிரகத்தைச் செய்தார். அதைச் சொன்னால் அதுவே ‘அமரகோச’த்தின் கதையும் ஆகும்.

ஆசாரியாளிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டான் அமரசிம்மன்.

அதற்கப்புறம் அவனுக்குத் தான் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அத்வைத பரமாக ஆசாரியாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்பந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன் சித்தாந்தம் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்களை மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.

எந்த மதஸ்தரானாலும் நேர்மை, சத்தியம் உள்ளவர்கள் எதிலும் இருப்பார்கள். ஜைனர்களுக்கு சத்தியம், நேர்மை மிகவும் அதிகம். அவர்கள் ஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுடன் வாதத்துக்கு வந்தபோது, தாங்களாகவே “நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் செத்துப்போவோம்” என்றார்கள். அப்புறம் கனல் வாதம், புனல் வாதம் இவற்றில் அவரிடம் தோற்றுப் போனார்கள். ஆனால், கருணை மிகுந்த சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அவர்களைக் கழுவேற்ற நினைக்கவில்லை. ஆனாலும் அவர்களாகவே பிடிவாதமாக “நாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு கழுவேறினார்கள். ஞானசம்பந்தர் சமணர்களை இரக்கமில்லாமல் தண்டித்ததாகச் சிலர் நினைப்பது தப்பு. இவர் வாதத்தில் ஜெயித்து, அதனால் பாண்டியராஜா இவர் பக்கம் சேர்ந்து, எதிராளிகளுக்கு எந்த சிட்சை தரவும் இவருக்கு அதிகாரம் தந்தும் கூட, அவர் ஜைனர்களை மன்னித்ததே அவருடைய பெருமை. அப்படியும் வாக்குக்காகப் பிராணத்தியாகம் செய்தது ஜைனர்களுடைய பெருமை.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அடிப்படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமரசிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வந்து விட்டது. எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான். சரஸ்வதியின் அநுக்கிரகம் பெற்று, எத்தனையோ காலம் பரிசிரமப்பட்டு எழுதியதையெல்லாம், இப்போது ஒரு கொள்கைக்காகத் தன் கைகளாலேயே அக்னியில் போட்டு எரித்தான்.

இதை ஆசாரியாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூட சந்தோஷப்படவில்லை. மாறாக மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார். “அடடா, என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? லோகம் என்று இருந்தால் நானா தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்துச் சர்ச்சை பண்ணுவதுதான் பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். எதிர்க்கட்சி இருந்தால்தான் நம் கட்சியில் உள்ள நல்லது பொல்லாததுகளை நாமே அலசிப் பார்த்துக் கொள்ள முடியும். நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்துவிட்டுப்போ. ஆனாலும் நீ மகா புத்திமான் என்று நான் உன்னை கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்து சொல்ல முடியுமோ அத்தனை நன்றாக செய்து புஸ்தகங்கள் எழுதியிருக்கிறாய். உண்மையில் பரம தத்வம் இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்த சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருந்தது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?” என்று ஆசார்யாள் அவனிடம்சொல்லி, அவன் கையை பிடித்து, அவன் கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகத்தைப் போடவொட்டாமல் தடுத்தார். அப்போது அவன் கையில் இருந்ததுதான் ‘அமர கோசம்’. ஆசாரியாள் தடுத்திருக்காவிட்டால் அதுவும் “ஸ்வாஹா” வாகியிருக்கும். ஆனாலும் துரதிருஷ்டவசமாக, சமய சம்பந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயே போய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆச்சாரியாளின் கருணையால் பிழைத்தது. ‘அமரம்’ என்ற பெயருக்கேற்றபடி அதை மட்டும், அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்.

________________________________________________________________________________
Swamy Denotes Only Kumara Swamy (Part 2)

Amarasimman has draped a screen before him and is sitting behind it. Acharyall sat outside and started asking questions.

Amarasimman shot out sharp answers. However great an intelligent person he may be, it was surprising for the Acharyall as to how he was giving back the replies so cleverly in no time. He thought for only a moment. At once the mystery unfolded to Acharyall who is Omniscient and an incarnation of Sakshath Parameswaran Himself.

The person who answered all His questions was not Amarasimman at all. He realised that Sakshath Saraswathi Devi Herself had spoken like Amarasimman. He had worshipped her for quite a long time. Honestly speaking, he should not have done it. His religion namely Jainism doesn’t speak of one God at all. Jainist philosophy wouldn’t approve of worshipping God in many forms and Divine images like Goddess Saraswathi.  Still to write a book on Jainism itself, he had  thought that he needed the Grace of Saraswathi and had worshipped Her. He had been hypocritical, with one kind of  belief within and a contradictory behaviour outwardly.

Even now there are people who profess to be atheists, when afflicted by some disease, would make a vow for God Venkatramana; or offer worship to Mariamman. When questioned, they would defend themselves with a false pride by saying that “there is such an opinion at home; wife has faith in this; I gave in for their sake; I tried to respect their feelings”.

In the same way, even long time back Amarasimman, while writing texts criticising Hinduism, worshipped the Hindu Goddess for Knowledge Herself to make them come out well. When a person takes up a task, be it a good one or a bad one, if he delves deep into it with full focus and dedication, then Bhagawan never fails to give the due results. Similarly, as a mark of respect for his sincere worship, Goddess Saraswathi has blessed him with Her Grace.

Now he is sitting behind the screen after capturing the powers of  Goddess Saraswathi inside a pot. He knew clearly that however intelligent he might be, while confronting Acharyall, he would just be like a candle before the Sun. So he had already sought refuge in Vakdevi (Saraswathi). As his committed worship deserved a favourable outcome for some more time, She was also feeling obliged to be controlled by him. So She had promised to help him and had said, “You perform an Avahanam (encapsulating the powers) of me in a Ghatam (pot) and tie a screen around it and sit within. Let Acharyall  ask questions from outside. I will answer them).

That’s what has happened now. But Acharyall  has found it the moment He focussed a little thought over it.

At once He pleaded to Sarawathi, “Oh Mother, is this your doing? Is it fair of you to do so? Can you bless someone who is writing texts with an intention of  doing away with the practice of worshipping you and all other Gods? If at all you had done so for the sake of the power of his worship, hasn’t it got over even after he has written this many number of books? Moreover you have showered innumerable blessings upon him while he was debating with me now, enabling him to withstand my arguments for so long! Is it fair to bestow on him more than what he deserves?, He asked.

His calculation proved to be right. Saraswathi realised that the Upasana of Amarasimman has been reciprocated fully with enough benefits without any due by Her Grace.

She disappeared from the Ghatam immediately. The screen got cut and fell off.

Thereafter  Amarasimman couldn’t compete equally with Acharyall. He accepted his defeat.

Saras — that is in a water body — She who resides in a water body is Saraswathi. Knowledge is that water body. She can reside inside it only if it is clear and doesn’t turn muddy. But what was the condition at the time of Acharyall’s Avatharam (birth)? Innumerable religions — seventy two, it is said — existed then and were confusing the intelligence of people with their meaningless arguments, due to which the Gnana (wise) Saras had become something like a muddy pond. At that time it was Acharya who cleared all the mud to the core, let it become crystal clear and made the Saraswathi, the real Saraswathi. There is a sloka like this (it begins as ‘Vakdhaaram Asaathya’).

Like this, to make Saraswathi, a Saraswathi, He was forced to remove Saraswathi now. Afterwards He too graced Amarasimman who had the grace of Saraswathi. If that is narrated, it would become the story of Amarakosham too.

Amarasimman accepted his defeat to Acharyall.

Afterwards, the idea struck him as to why the books written by him should exist in this world. He had written as much books on the philosophy of Jainism as Acharyall had written on Adwaitha. Now he thought  after having accepted that his philosophy had been defeated, it wouldn’t be right to leave his books for others.

Whatever be the religion, there would be honest and truth-adhering people in any religion. Jains have utmost Honesty and truthfulness. When they came for a debate with Gnanasambandha murthy, they declared themselves that, “If we fail, we will die by climbing on a Kazhumaram” (a pin-pointed iron post used for punishing people by bleeding them to death in olden days). Then they lost to Sambandhar in Punal Vaadham and Kanal Vaadham. The all merciful Sambandha Swamigal didn’t think of raising them on a Kazhu. But the jains themselves stubbornly climbed the Kazhu saying,”we ought to keep up our word”. The idea of some people that Sambandhar had ruthlessly punished the Jains is totally wrong. His greatness lies in the fact that he pardoned the Jains in spite of winning them in the debate, because of which the Pandiya king joined his side and authorised him every right to give any sort of punishment to them. It is the greatness of the Jains to have given up their lives for the sake of their promise even after being pardoned.

I have come to speak of this only to show that there might be a strong attachment to the basic tenets of his religion for a person belonging to any religion. Now a thought had struck Amarasimmn that his philosophies which had been proved wrong, need not exist in the world.  So he created a big bonfire and threw inside, each one of the texts he had written.  For the sake of his principle, he burnt in fire with his own hands, everything that he had written by receiving the grace of Saraswathi and created with strenuous efforts.

Acharyall came to know of this. But he didn’t feel happy even a little bit. Instead He felt only remorse. He came running to Amarasimman. “Alas! What are you doing now? If there exists a world, then it is natural to exist for different perspectives and opinions. Only if there are many opinions and speculations being done by comparing them, there will be clarity in the knowledge of people who are in different stages and states. Only if there is an opponent party, it will facilitate us to look for ourselves into the good and the bad qualities of our own party. You may be belonging  to any other religion. I honour you as the most intelligent person. You have expressed your principles as much possible as can be done with your intelligence and have created your books. In reality, even if the Ultimate philosophy is different from this, let it be; there was an aesthetic beauty and brilliance in the way you have expressed your understanding of and supporting your philosophies at your own intellectual level. Can we deprive the world of all these?” Saying thus to Amarasimman, Acharyall held his hand and prevented him from throwing in the last book that he was about to cast into the fire. The book that was held back in his hand at that time was this “Amarakosham”. If only Acharyall hadn’t stopped him, it would have gone “Swaahaa” into the fire. Yet, unfortunately all his religious books were gone forever. Only this Agarathi or Nigandu (dictionary) had survived by the mercy of our Acharyall. He had made it an Amaram (Eternal), to live up to its name.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. அருமை அருமை
    அருமையிலும் அருமை
    கரும சிரத்தையாய்
    கரு மையில் தனிலே

    பரணி கார்த்திகையில்
    தரணியிலே சுதா
    கரனை எழிலொரு தயா
    கரனை ஒரு மயிலுடனே

    தூரிகையில் தீட்டி நின்ற
    காரிகையே முப்புரம்
    எரித்த சிவன் குமாரன்
    பேரருள் பொழியட்டும்

    பேருவகையுடன்,

    சந்தர் சோமயாஜிலு

  2. Nice!

Leave a Reply

%d bloggers like this: