Periyava Golden Quotes-712


Jaya Jaya Sankara Hara Hara Sankara – The definition of Aacharam cannot be explained better than this! Rama Rama

மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்திரம், காயத்தால் காரியம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மந்திரம் அல்லது பகவந் நாமம் இல்லாமல் காரியத்தைப் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. மநுஷ்யன் செய்கிற காரியத்தில் அநேகம் எல்லா ஜீவ ஜந்துக்களுந்தான் செய்கின்றன. ஒரு கிருமியிலிருந்து ஆரம்பித்து எந்த ஜீவராசியும் சாப்பிடத்தான் செய்கிறது. அப்படியே மநுஷ்யனும் செய்தால் மநுஷ்ய ஜன்மா எடுத்து என்ன பிரயோஜனம்? அதனால்தான் இவன் பிராணாஹுதி செய்து, கோவிந்த நாமாவைச் சொன்னபடிச் சாப்பிடவேண்டுமென்று சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. மீன்கூடத்தான் ஸதாவும் ஜலத்திலேயே முழுகியிருக்கிறது. அதனால் அது ஸ்நானம் பண்ணி மடியாயிருக்கிறதாகி விடுமா? மந்திரவத்தாகக் குளித்தால்தான் அது ஸ்நானமாகும். அல்லது கோவிந்தா, கோவிந்தா என்றோ, இஷ்ட தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கொண்டோ ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே காரியமாக மட்டுமில்லாமல் மனஸும் வாக்கும் ஈச்வரனிடம் செலுத்தப்பட்டுச் செய்யப்படுவதுதான் ஆசாரம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Mano, Vak, Kayam (mind, speech and body) are brought together in the Aacharams prescribed. The mind is immersed in Bhagawad smaranam, the speech is chanting of the mantras or Bhagawan Namas and work is done with the body. There is no use of doing a task without mantras or Bhagawan Namaa. We see that many things done by man are also done by other living things. Beginning with a microbe, all living things consume their food. If man too were to do exactly what they did, what is the purpose of being born a human? The sastras say he should offer the food to God and eat it chanting the ‘Govinda’ Nama. A fish is all the time inside water. Can we consider that it has had a bath and has become pure? A bath is said to have been taken only when it is done with the chanting of the mantras. One can also chant the name of Govinda or one’s Ishta Devata Nama while having a bath. When every chore is done with the mind and speech concentrated on Eswara, it is called Aacharam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. அந்த காலத்து ஆசாரம் இந்த கால பெரியோர்களால் கடைபிடிக்க முடியவில்லை. சாஸ்திரம் பேசமுடியவில்லை. மீறினால் பெரியவர்கள் குடும்பத்தாரால் நிராகரிக்கப்படுவர். விமோசனம் என்ன? குடும்பத்தை விட்டு ஒரு விதவையோ பெண்டாட்டி இழந்தவரோ எப்படி தனித்து வாழ்வது?

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: