Periyava Golden Quotes-710


‘ஸென்டிமென்ட’ லாக [உணர்ச்சிப் பூர்வமாக] மனஸை உறுத்துகிற விஷயங்களையும் ஆசாரங்களில் சொல்லியிருக்கிறது. இன்னொருத்தர் மேலே நம் கால் பட்டுவிட்டால், புஸ்தகத்தை மிதித்து விட்டால் நமக்கே என்னமோ குற்றம் பண்ணினாற்போலத் தோன்றுகிறது. பெரியவர்களாக இருக்கிறவர்கள் வருகிறபோது நாம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ, அவர்களுக்கு எதிரே காலை நீட்டிக் கொண்டிருந்தாலோ, நமக்காகவே உள்ளே ஏதோ அபசாரம் பண்ணிவிட்டது போலத் தோன்றுகிறது. நல்ல லக்ஷ்மீகரமாக ஒரு ஸுமங்கலி நாம் காரியத்தை ஆரம்பிக்கும்போது வந்தாலோ, வெளியே கிளம்பும்போது எதிர்ப்பட்டாலோ ஒரு மனநிறைவு உண்டாகிறது. இதெல்லாமே சாஸ்திரமாகவும் வந்து விடுகின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The rules of Aacharam also speak about emotionally disturbing issues. If our foot accidentally touches someone or if we unknowingly step on a book, we feel guilty. If we are sitting or lying down when elders enter or if we stretch our legs in front of them, we feel we are doing something wrong. If a Sumangali comes in front of us while we are about to start a job or while we are about to go out, we feel good. All these have come about as rules in Sastras. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman, Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: