28. Sri Sankara Charitham by Maha Periyava – Worshipping practices of those days


Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter Sri Periyava explains about the worshiping practices of olden days and how at-times crude they were. Not only in our Sanatana Dharma but also in religions like Buddhism how these aspects creeped in.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for another splendid sketch &  audio. Rama Rama


அக்கால வழிபாட்டு முறைகள்

பொது ஜனங்களைப் பொறுத்தமட்டில் ஆலய பூஜைதான் மதம் என்று பார்த்தோமல்லவா? அது அந்தக் காலத்தில் எப்படி இருந்ததென்றால்:

காபாலிகம், காளாமுகம், பைரவம் என்றெல்லாம் ஒரு பக்கம் க்ரூர உபாஸனைகள் புத்துயிர் பெற்றிருந்தன. சக்தி உபாஸனையில் வாமாசாரம் என்பதாக ஆபாஸமான அநுஷ்டானங்கள் தலைதூக்கின. வைஷ்ணவ தந்த்ரங்கள் சிலவற்றிலும் இப்படிப்பட்ட ஸமாசாரங்கள் சேர்ந்திருந்தன.

’(ஆபாஸமான) அநுஷ்டானம் என்று நான் உசந்த பேர் கொடுத்துச் சொல்வதிலிருந்தே, இந்த யுகத்தில் எப்படிக் கெட்டதே நல்லது மாதிரி வேஷம் போட்டுக் கொள்கிறது என்று புரிந்து கொள்ளலாம்! பலி கொடுப்பது, கள்ளு நிவேதனம், ஸ்த்ரீ-புருஷ அநுபோகம் முதலானவற்றுக்குக்கூட உசந்த தத்வ ‘லேபிள்’ ஒட்டி, ‘இது ஆத்ம ச்ரேயஸுக்கான மார்க்கம்’ என்று ப்ரசாரம் பண்ணுவதாக ஏற்பட்டிருந்தது.

மநுஷ்ய ஜாதி தோன்றின நாளாக, refinement (பக்குவமான பண்பாடு) உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று இரண்டு வகையினரும் இருந்துதான் இருப்பார்கள். Refinement போதாதவர்கள் பலி, கள்ளு, கூத்தாட்டம் என்று வழிபாடும் பண்ணியிருப்பார்கள். ‘இருப்பார்கள்’ என்ன? ‘இருந்தார்கள்’ என்றே சொல்லும்படியாக எல்லா தேச ஆதிவாஸிகள் விஷயமாகவும் பார்க்கிறோம். இன்றைக்கும் (இப்படிப்பட்டவர்கள்) இருக்கிறார்கள். யாரானாலும் நமக்கும் லோகத்துக்கும் மூலமாக ஒரு சக்தி இருக்கவேண்டுமென்று தோன்றி, அதை வழிபட வேண்டுமென்று நினைக்கும்போது, அவரவருக்குப் பிடித்த மாதிரியே அதையும் ரூபம் கொடுத்துப் பார்ப்பது, அவரவருக்குப் பிடித்தபடியே அதற்கும் நைவேத்யம் செய்வது, மற்ற உபசாரங்கள் செய்வது என்று ஏற்படுகிறது. இதிலேதான் refinement இல்லாதவர்கள் ஒருவிதமாக வழிபாடு செய்வது. இதில் வேடிக்கை என்னவென்றால், மநுஷ்ய ஜாதியிலிருப்பது போலவே தேவ ஜாதிகளிலும் refinement போதாத தேவதைகள் இருக்கின்றன. ஈச்வரன் தன்னுடைய விளையாட்டில், இந்த மாதிரியான மநுஷ்யர்கள் இதே மாதிரியான தேவதைகளிடம் பக்தி கொண்டு, இருவருக்கும் பிடித்த விதத்தில் – ஆனால் refined ஆக இருப்பவர்கள் அருவருக்கிற விதத்தில் – வழிபாடு செய்ய வைக்கிறான். அந்த லெவலில் அம்மாதிரியான வழிபாட்டைத் தப்பென்று சொல்வதற்கில்லை. ஆனாலும் உக்ர தேவதை, க்ஷூத்ர தேவதை என்றெல்லாம் சொல்லும்போது கூட அதை ‘தேவதை’ என்றுதான் சொல்கிறோமே தவிர அஸுர ஜன்மாவாகச் சொல்வதில்லை. அதனால் எத்தனை refinement குறைவாக வழிபாடு அமைந்தாலும் அஸுரத்தனம் என்று சொல்கிற அளவுக்கு அதில் ஹிம்ஸை, கேளிக்கை முதலியவை போகுமானால் அது தப்புத்தான்.

நான் சொன்ன அந்தக் காலத்தில் என்ன ஆயிற்றென்றால் refinement இல்லாத உபாஸனா முறைகளையும் refined மாதிரி வேஷம் போட்டுக் காட்டவேண்டுமென்று அவற்றை ஆத்ம ச்ரேயோ மார்க்கங்களாக வர்ணித்து சாஸ்த்ரங்கள் செய்யப்பட்டன. நாகரிகம் தெரியாதவர்கள் தங்களுக்குள் ஏதோ பண்ணிக் கொண்டு போவதாக நிற்காமல், அவற்றுக்கும் நாகரிக வேஷம் போட்டு, நாகரிகமான ஸமூஹத்தையும் அவற்றில் இழுப்பதற்கு ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன.

நமக்கு வெறுக்கத்தக்கவையாகவும், பயங்கரமாகவும், அருவருப்பாகவும் உள்ள சில ஸாதனைகளைச் சில தந்த்ர, யோக சாஸ்த்ரங்களிலும் சொல்லியிருக்கிறது. அவற்றைச் சிலர் அப்யாஸம் செய்து வாஸ்தவமாகவே ஒரு சக்தியையோ, ஸித்தியையோ பெற்றிருப்பது கூட உண்டு தான். ஆத்ம ஸம்பந்தமான சில ப்ரயோஜனங்களை கூட அவர்கள் இப்படிப் பெற்றாலும் பெறலாம். ஆனாலும் இது கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஆபத்தான மார்க்கம். க்ரூர தேவதா உபாஸனையில் கொஞ்சம் தப்பினால்கூட அந்த தேவதையே அடித்துப் போட்டு விடுவதைப் போல், இந்த விதமான யோக ஸாதனையிலும் கொஞ்சம் தப்பு வந்தால் கூட அடியோடு ஆத்ம ஹானிதான் ஏற்படும். இந்த்ரிய ஸுகத்தில் ஒரே வழுக்காகத் தடாலென்று இழுத்துவிடக் கூடிய அப்யாஸங்களைக் கொஞ்சங்கூட மனஸில் விகாரமே ஏற்படாமல் பண்ணி ஜயிப்பதென்பது ரொம்பவும் ச்ரம ஸாத்யமாகவே இருக்கும். கத்தி முனையில் நடப்பது மாதிரியான இத்தகைய ஸாதனைகள் அவச்யமேயில்லை.

கத்தி முனையில் நடப்பது என்றால் கெளரவமான ஸாதனையாகத் தோன்றுகிறது. நம்முடைய வேதாந்தமாகிய ப்ரஹ்ம வித்யா ஸாதனையையே உபநிஷதம் கத்தி முனையில் நடப்பதாகச் சொல்லியிருக்கிறது*. ஆகையினால் இப்படி கெளரவம் கொடுத்துச் சொல்லாமல் ராமக்ருஷ்ண பரம ஹம்ஸர் சொன்ன மாதிரி, ‘இந்த வழிகளாலும் ஒருவன் லக்ஷ்யத்தை அடையக்கூடலாமென்றாலும், அது முறைப்படி வாசல் வழியாக ஒரு வீட்டுக்குள் வராமல் தோட்டத்து வழியாக ஏறிக் குதித்து கக்கூஸ் வழியாக வருகிறது போல!” என்கலாம்! எவரோ சில பேருக்கு இந்த வழி அவசியப்பட்டால்கூட – கைகால் முறியாமல், அமேத்யத்தில் சறுக்கி விழாமல் முன்னேறுவதற்குரிய ச்ரம ஸாத்யமான ஸாதனையை அவர்கள் பின்பற்றிப் பயனடைய முடிந்தாலும் கூட – பிறத்தியார் முயற்சி பண்ணிப் பார்த்து ஆத்மஹானி அடைவதற்கு ஹேதுவான இவற்றை அவர்கள் எல்லோருக்கும் பஹிரங்கப்படுத்தக் கூடாது. ஆனாலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் காலத்தில், தாங்கள் மாத்திரம் ஒதுங்கி அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருந்தால் தங்களுக்கு ப்ராபல்யம், அந்தஸ்து ஒன்றும் இருக்காது என்பதால் ஆபத்தான இந்த தந்த்ரங்களையும் எல்லாருக்கும் ப்ரசாரம் செய்வதற்குப் பலபேர் கிளம்பினார்கள்.

இதில் ரொம்ப விசித்ரம் என்னவென்றால்….. ஸ்வாமி என்பவரைப் பற்றியே புத்தர் சொல்லாமல் போய் விட்டாலும் பொது ஜனங்களுக்கு தெய்வ வழிபாடு இல்லாமல் முடியாததால் பிற்பாடு அந்த மதத்தில் புத்தரையே ஸ்வாமி மாதிரி ஒரு தினுஸில் வைத்து, ஹிந்து மதத்தில் எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்குப் பெரிய பெரிய விக்ரஹங்களை வழிபாட்டிற்காக ஏற்படுத்தினார்கள் என்று பார்த்தோமல்லவா? அதுவாவது போகிறது. பரம சாந்தமாக இருக்கும் அந்த விக்ரஹங்களைப் பார்த்தால் எவருக்காயிருந்தாலும் க்ஷணகாலமாவது மனஸ் குவிந்து ஒரு அமைதி உண்டாகாமலிருக்காது. ஆனால் இதோடு நிற்காமல் இன்னெரு பக்கம் என்னவாயிற்று என்றால், அந்த மதத்தில் அவ்வளவாகப் பக்வம், யோக்யதாம்சம் பார்க்காமல் கூட்டம் கூட்டமாக பிக்ஷுஸங்கம் என்று சேர்த்தார்கள். ஸந்நியாஸிகள் ஏராளமாக இருந்தால் தானே ஒரு மதத்துக்குப் ‘ப்ரெஸ்டீஜ்’ என்பதாலும் இருக்கலாம். விளைவாக என்ன ஆயிற்றென்றால், அப்போதைக்கு ஒரு ஆகர்ஷணத்தில் பிக்ஷுவானவர்களில் பல பேருக்கு அதற்கான விவேக வைராக்யங்கள் போதாததால் பிறகு ஸந்நியாஸத்தின் கடுமையான நெறிக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. தப்பான சலனங்கள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்துக் கொள்ளும் outlet – ஆகவே மதாநுஷ்டானம் என்ற கெளரவமான பேரில் ஆபாஸமான தந்த்ரங்களை உண்டாக்க ஆரம்பித்தார்கள். அதாவது விசித்ரமாக, எந்த மதத்தில் தான் வழிபாடு என்பதே அவச்யமில்லை என்று வைத்திருந்ததோ, அதிலேயே தகாத வழிகள் உள்பட எத்தனை உண்டோ அத்தனை தினுஸிலும் வழிபாடுகள் உண்டாயிற்று! அப்புறம், அப்போது எல்லாமே சறுக்கு வழியில் போய்க் கொண்டிருந்ததால், நம்முடைய மதம் அவர்களுக்குப் பிந்தியாகப் போவதா என்பது போல், ஹிந்து மதத்திலேயும் பலர் தோன்றி இப்படிப்பட்ட விபரீத உபாஸனைகளைப் புகுத்தினார்கள்.

பக்தி வழிபாடு என்று மட்டும் பார்க்கும்போது இப்படி க்ரூரமானது, ஆபாஸமானது என்று தப்புச் சொல்ல முடியாமல் (சைவமாகப்) பாசுபதத்தில் ஒரு பிரிவு, (வைஷ்ணவமாக) பாகவத – பாஞ்சராத்ர ஸ்ம்ப்ரதாயம் ஆகியனவும் அப்போது ப்ரசாரத்தில் இருந்தன. வைதிக பாசுபதம், அவைதிக பாசுபதம் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டு வைதிகத்தில்தான் ஸெளம்யமான வழிபாடு விதிக்கப்பட்டது. ஃபிலாஸஃபியில் உயர்வாகப் போகும் காச்மீரி சைவம் என்ற நல்ல மார்க்கமும் கூட ஏதோ ஒரு லேசான ஆரம்ப ஸ்திதியில் அக்காலத்திலேயே இருந்திருக்கக் கூடுமென்றும் அபிப்ராயமுண்டு. என்றாலும் இவை எல்லாமுங்கூட வேதங்களின் பூர்ணமான, முடிவான தாத்பர்யத்தை உள்ளபடி ப்ரதிபலிக்கவில்லை. ‘அத்வைத ஞானத்துக்குப் பூர்வாங்க ஸாதனமாக சித்த ஐகாக்ரியம் (ஒருமுகப்பாடு) பெறுவதற்கே பக்தியுபாஸனை; முடிவிலே உபாஸகன், உபாஸிக்கப்படும் தெய்வம், உபாஸனை எல்லாமே ஒன்றாகப் போக வேண்டியதுதான்’ என்ற பரம தாத்பர்யத்தை இவையாவும் ஏதோ ஒரு அளவில் ஆக்ஷேபிப்பவையாகவே இருந்தன. காச்மீரி சைவம்கூட அத்வைதத்திற்குக் கிட்டே கிட்டேதான் போயிற்றே தவிர, ஸ்வச்சமான அத்வைதமாக முடியவில்லை. அதற்கு மாறுபட்டுத்தான் இருந்தது.

அநேக விதமான பக்தி ஸ்ம்ப்ரதாயங்கள் தங்களை வைதிகமானவையாகச் சொல்லிக் கொண்டாலும் வாஸ்தவத்தில் வைதிகத்தின் முடிவான அத்வைத லக்ஷ்யத்திற்கு மாறாகப் போகிறவையாகவும், ஆனாலும் அநாதியாக இங்கே ப்ரகாசித்து வந்திருக்கும் வேத மரபு என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு தங்களுக்குப் பெருமையும், செல்வாக்கும் தேடிக் கொள்வதாகவுமே இருந்தன.

கடோபநிஷதம்: 3-14
__________________________________________________________________________________

Worshipping practices of those days

 

Did we not see that as far as the general public was concerned, religion means worshipping in temples?  How was it in those days? In those days, crude worship like Kaapaligam, Kaalamugam, Bairavam, etc., had become rejuvenated.  In Sakthi worship, obscene practices called Vaamachara, started to spring up.  In some of the Vaishnava rituals also, these kind of things had got included.

From my very mentioning it by giving it an exalted name, ‘obscene practice’, one can understand how, in this yuga, evil poses itself to be good.  It happened that even practices like offering sacrifices, offering liquor, Woman-Man enjoyment, etc., were given exalted philosophical labels and propagated as paths for betterment of the soul.

Right from the days when human race was born, two categories, people with refined qualities and those without might have been there.  People who lacked refinement might have worshipped by offering sacrifices, liquor, dancing etc. Why ‘might have’? They were, as we see the tribals in all countries.  Even today, this type of people are there.  Whoever it may be, when it is felt that there should be a (superior) power which is the basis for them and the world and think of worshipping that, a need arises to give a shape to it as per their liking and to make offerings of food and other things as per their wishes.  In this only, people lacking refinement, worship in a different way. The funny part is that just like there are some who lack refinement in human beings, there are Devathas also who lack refinement.  The Almighty Eswara, in his sport, makes these kind of unrefined humans to be pious to similar type of Devathas, as per their liking but scorned at by the refined.  At that level, this type of worship cannot be said to be wrong.  Still, when we talk about ‘Ugra Devatha’, ‘Kshoothra Devatha’, we refer as Devatha only and not as Asura Janma (demon).  Therefore, if the worship lacked refinement to whatever extent, if violence, entertainment, etc., can go to the extent of being termed as Asurathanam (crude/barbaric/demonic), then it is wrong.

What happened in the days I mentioned was, the types of worship which lacked refinement, in order to show them as refined, were described as paths towards emancipation of the soul and Sasthras were made accordingly.  People who were not civilized, not confining to their own selves, gave a garb of civility to them (practices) and tried to pull the civilized community also.

Certain practices, which are abhorrent, despicable and scornful to us, are found in some mystical systems and Yoga Sasthras.  It is also true that some people have practiced them and obtained a certain power or success. They might even get some benefits relating to the Self.  But this is a very dangerous, risky path like some acrobatics, if missed, turning fatal.  Just like the person is attacked by the very Devatha, when there is even a slight shortcoming in the crude worship, this type of yoga worship would be suicidal, if there is even a slight mistake in its observance.  It would be extremely difficult to refrain from the mind entertaining any dirty thoughts when the practices are capable of making the person fall into temptations of sensory pleasures very easily.  Such razor tip walk like practices are not at all necessary.

When mentioned as razor tip walking, it gives an impression of an honourable practice.  Upanishads have described even our Brahma-Vidya practice given in the Vedantas, as razor tip walking*.  Therefore, instead of describing it in an honourable way, even though one can reach his objective this way also, it can be described, as told by Sri Ramakrishna Paramahamsa, as someone entering a house not from the front door but from the backyard garden through the toilet.  Even though it was necessary for a few to follow this path and also could attain the benefits and move forward observing this practice, without breaking their limbs, or slipping and falling into excrement, it should not be revealed to others, which may be fatal to them if they tried.  However, in those days about which we are talking about, many people, who, feeling that if they kept themselves aloof and practiced this alone, it may not bring validity or status to them, started to propagate these dangerous systems to others also.

The strange thing is that, did we not see that even though Buddha never talked about a Swami, since general public could not but have deity worship and therefore, that religion had to, in a way, project Buddha himself as a deity and created idols larger than what was available even in Hinduism.  Even that is ok. When these very peaceful idols are seen, no one’s heart would fail to get enlarged and feel peace.  However, without stopping with all this, what happened on the other side was, without looking for maturity and merit, they enrolled people in large numbers, in the name of association of Buddhist monks (Bikhshu Sangh).  It might also be because, a religion gets ‘Prestige” only if there are a large number of Sannyasis.  What happened consequently was that those people who became monks in a moment of impulse, could not cope with the high rigor sanyasis have to follow, as they lacked the necessary intellectual determination.  Wrong temptations started arising.  To get an outlet to that, they started creating vulgar mystical systems, in the honorable name of religious practices.  Strangely, in the very religion which had declared that worshipping was not at all required, all forms that were possible, including the inappropriate ones started.  As all religions were on a declining path during that time, as though not to be left behind them, many appeared in Hinduism also, who introduced these kind of dangerous practices.

When we look only at Bhakthi form of worship, there were religions (Saivism, a division in Pasupatha, Vaishnavism, Bhaghawatha-Pancharathra tradition) which were in vogue then, which could not be faulted as crude and vulgar.  Two divisions came into being as Vedic Pasupatha and non-Vedic Pasupatha and only in Vedic Pasupatha, pleasant, agreeable type of worship was prescribed.  There is also an opinion that Kashmiri Saiva, a good path, highly acclaimed in philosophy, might have also been prevalent in its early form then.  However, all these did not reflect the complete and decisive truths of Vedas, as they were.  In some way, all these were objecting to the superior truth of the need for having purity of thought as a prerequisite to obtain Adwaitha knowledge and that in the end, the worshipper, the God who is worshipped and the worship would all become one.  Even Kashmiri Saivam, although came close to Adwaitha, could not get to the pure Adwaitha.  It remained different.

Although many type of Bhakthi traditions called themselves to be Vedic, they were, in reality, going against the Adwaitha objective, the ultimate Vedic end but were trying to earn name and fame calling themselves to be following the tradition of eternal Vedas, which was shining here.

*Katho Upanishad: 3-14

_______________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

4 replies

  1. Simply Superb !

    Keep it up !

  2. Great work!! Apt and awesome sketch!!

  3. Awesome!

  4. Very nice. Keep going.

Leave a Reply

%d bloggers like this: