Can you say what Prasadam Periyavaa would have given?

Many Jaya Jaya Sankara to Smt. Prabha Aravind for the translation and Smt. Gowri Sukumar for the share. Rama Rama

!! பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்…ன்னு சொல்லுங்கோ!!

பெரியவாளே கதி! என்றிருக்கும் பல குடும்பங்களில் ஒன்றான ஒரு டெல்லி வாழ் குடும்பத்தில் மனைவிக்கு நெடுநாட்களாக ஏதோ உடலில் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடும். வெறும் ஹார்லிக்ஸை கரைத்துக் குடித்தபோது அதுவும் வாந்தியாக வெளியே வந்து அந்த அம்மா மயக்கம் அடைந்ததும், கணவர் பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தார்.

இரவு முழுதும் I C U வில் இருந்தாள். நிஜமாகவே ரொம்ப நல்ல டாக்டர் வந்து “ஒங்க மனைவிக்கு உடல்ல எந்த கோளாறும் இல்லே……இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்…ன்னு அனாவச்யமா பணம் பிடுங்குவா …….அதுனால, இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிண்டு பேசாம ஆத்துக்கு போங்கோ” என்று சொன்னார். இவரும் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு மனைவியை பார்க்கச் சென்றார்.

அவள் சொன்னாள்…”நான் நேத்திக்கு ஆத்ல மயக்கமா விழுந்ததும், எனக்கு என் முன்னால பெரியவா நின்னுண்டு இருந்தா மாதிரி இருந்துது……..ஒனக்கு எல்லாம் செரியாயிடும்…..நாளைலேர்ந்து காலமே பல் தேச்சதும், ஒரு வில்வத்ல கொஞ்சம் விபூதி வெச்சு மொதல்ல சாப்டு….நாப்பத்தஞ்சு நாள்ல எல்லாம் செரியாப்போய்டும்….ன்னு சொன்னார்”.

வீட்டுக்கு போன மறுநாளே விடிகாலை வில்வமும் விபூதியும் சாப்பிட ஆரம்பித்தாள். வாந்தி என்ற வார்த்தையையே மறந்து விட்டாள்.

சரியாக 43 ஆம் நாளில், ஏதோ ஞாபகமறதியால் வில்வம் சாப்பிடாமல், காப்பியைக் குடித்துவிட்டாள். அவ்வளவுதான்! சாயங்காலம் கணவர் ஆபீசிலிருந்து வந்ததும் வாந்தியும் ஆரம்பித்தது. ஆனால், இம்முறை அதில் ரத்தம் தெரிந்தது!

அரண்டு போய் டாக்டரிடம் காட்டி, T B யாக இருக்குமோ என்று கேட்டார். ஹாஸ்பிடல் போகும்போதே மனஸில் “ப்ரபோ! ரெண்டு நாள் பாக்கி இருக்கறச்சே…வில்வம் சாப்டாம, காப்பி குடிச்சுட்டா……..தெரியாம பண்ணிட்டா…மன்னிச்சிடுங்கோ! அனுக்ரகம் பண்ணுங்கோ” என்று மன்றாடினார்.

டாக்டரும் TB இல்லை வெறும் பலஹீனம்தான் என்று சொல்லிவிட்டார்.

அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்தபோது, ஆச்சர்யமாக அவர் மனைவி ரொம்ப ரொம்ப தெம்போடு அவரை வரவேற்றாள். அவள் சொன்னது……….”மத்யானம் பக்கத்தாத்து மாமி இங்க வந்தா…..நேத்திக்கு அவாத்து பிள்ளையோட கல்யாணம் மெட்ராஸ்ல நடந்தப்புறம் இளையாத்தன்குடி போய் பெரியவாளை தர்சனம் பண்ணப் போனாளாம்……அப்போ மாமி பெரியவாகிட்ட, “நான் டெல்லிலேர்ந்து வரேன்…..எங்காத்துக்கு பக்கத்ல இருக்கற என் ஸ்நேகிதிக்கு ஏதோ உடம்பு படுத்திண்டே இருக்கு ………பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும்” ன்னு சொன்னாளாம்.

அதுக்கு பெரியவா, “என்னது! ஒன்னோட friend ஆ! பெரிய உபகாரியா? அடிக்கடி வாந்தி எடுக்கறாளாக்கும்?……எல்லாம் செரியாயிடும்” ன்னு சொல்லிட்டு, ப்ரஸாதம் குடுத்தாராம். மாமி அதை பிரிக்காம எங்கிட்ட குடுத்தா…….அதுல பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்…ன்னு சொல்லுங்கோ!” என்றாள்.

பக்தர் கல்கண்டு, திராக்ஷை, குங்குமம், விபூதி என்று சொன்னார். கொண்டு வந்து காட்டினால்…….ஒரு சின்ன இலையில், ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்!

45 நாட்களுக்கு ரெண்டு நாள் இருக்கும் போது மறந்துபோய் காப்பி குடித்ததால், விட்டுப் போன ரெண்டு நாட்களுக்காக ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்!”

நீ கண்டது கனவல்ல…நிஜம்” என்று நிருபித்த அழகு மகான்களுக்கே முடியும்!

__________________________________________________________________________________

Can you say what Prasadam Periyavaa would have given?

The Delhi based family belonged to the families who have completely surrendered to Periyavaa. The wife was having some health issues. She used to vomit whatever she ate. When she drank just Horlicks, and that too came out as vomit, the wife fainted. The husband immediately admitted her in the hospital.

She was in ICU for the whole night. An incredibly good and honest doctor came and told the husband “Your wife doesn’t have any health issues. But the hospital will try to snatch money from you in form of unnecessary tests. So please discharge your wife and go home”. The husband also settled the bills and went to see his wife.

She said “Yesterday when I fainted, I felt like Periyavaa was standing in front of me. He said “You will be alright. From tomorrow morning, as soon as you brush your teeth, keep some Vibhoothi (Holy Ash) in a Vilvam leaf and eat it. In 45 days everything will be normal.”

They went home. From the next day early morning, she started having Vilvam and Vibhoothi. Eventually she forgot about the word vomit.

Exactly on 43rd day, due to some reason, she forgot to eat Vilvam and Vibhoothi and drank Coffee. That’s it. As soon as the husband came back from office in the evening, she started vomiting again. But this time, there was blood in the vomit. The husband was so scared and took her to a doctor and asked Doctor if it is T.B. When he was in the hospital he prayed to Periyavaa “Prabho… When 2 more days were remaining, she drank coffee without having the Vilvam first. Please forgive her and Please bless us.”

Thankfully, the doctor also said that it is not TB and just weakness as the cause and asked her to go home and take rest.

That day evening, when he went home, surprisingly, his wife was extremely healthy and welcomed him. She said “In the afternoon, our neighbor Maami came here. Yesterday, after their son’s marriage, they went to ILayathankudi to have a dharshan of Maha Periyavaa. At that time Maami told Periyvaa “I am coming from Delhi. My friend who stays next to my house is falling sick often. Periyavaa only should bless and help”.

Maha Periyavaa replied “What? Your friend? Is she a great benefactor? Is she vomiting frequently? Everything will be alright” and gave Prasadam. Maami didn’t open it and gave it to me today.  Can you say what Prasadam Periyavaa would have given.?

The husband said various options as dried grapes, Kumkumam, Vibhoothi etc. Wife showed him the Prasadam – It was 2 Vilvam leaves.

Those were the 2 Vilvam leaves which she missed to have, since she drank coffee when 2 days were remaining out of 45 days.

The beauty with which Periyavaa proved that “What you saw was not a dream – It was True” is possible only for Great Saints.Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. HARAHARASHANKARA JAYAJAYASHANKARA

  2. Nambinar kaeduvadhillai..Maha periava charanam.

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

  4. KARUNAMOORTHI KARUNAIKKADAL MAHAPERIVA TIRUVADIGALE CHARANAM.

Leave a Reply

%d bloggers like this: