After a very long break, she has recollected several of her old memories and started writing. She has sent me those pages. I typed some for you to post today. I will send the rest to Smt Srividya to help as she did in the past! Sorry Srividya to push this to you 🙂 I know you don’t mind typing this for us….Those will be posted in the next few days! There were some places where I could not read her handwriting properly – so I typed as I read….
பெரியவாளுடன் இதற்கு முன் நான் எழுதியத்தினால் அதை படித்த நிறையபேர் மனம் ஆனந்தத்தில் மிதந்து குறித்து ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. அதனால் சில சின்ன அனுபவங்களை மீண்டும் எழுதியுள்ளேன்.
மடம் எங்கள் வீட்டில் இருந்தபோது பெரியவாள் பூஜை ஆரம்பிக்கும் முன் கஜ பூஜை செய்வது வழக்கம். அப்பொழுது மடத்திலுள்ள யானை வீட்டிலுள் வந்து முற்றம் வந்து நிற்கும். காலை, மாலை இரண்டு முறையும் கஜ பூஜை செய்வார். யானை உள்ளே வரும் பொழுது ஏன் பெரியவா தம்பி கல்யாணசுந்தரம் என்பவனை தன துதிக்கையால் தூக்கி கொண்டு வந்து பின் பூஜை முடிந்ததுடன் அவனை தன் துதிக்கையாலேயே எடுத்துக்கொண்டு வெளியே செல்லும். அவனும் அதனுடன் விளையாடிக்கொண்டு இருப்பான். இவ்வாறு செய்ய சொன்னதே பெரியவாதான். சில நேரத்தில் பெரியவாளுக்கு யானையை அவனுடன் விளையாட செய்வார்.
என் மூன்றாம் தம்பி சந்திரமௌலி 2 or 3 வயது இருக்கும். எப்பொழுது பார்த்தாலும் அழுது கொண்டே இருப்பான். சில்லறை பணம் வேண்டுமென்று எவ்வளவு சில்லறை கொடுத்தாலும் அடம் பிடித்து அழுது கொண்டே இருப்பான்.
ஒரு நாள் காலை அவன் அழுகை குரலை கேட்டு பெரியவா அனுப்பி குழந்தையை அழைத்துண்டு வா என்று சொல்லி அனுப்பினார். அம்மாவும் அவனை அழைத்துக்கொண்டு சென்றார். பெரியவா குழந்தை ஏன் அழுகிறான் என்றார். அம்மா எல்லாம் சொன்னார். உடனே பெரியவா அருகிலிருந்த ஒரு சிஷ்யரிடம் ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வர சொன்னார். அந்த தண்ணீரை பெரியவாளின் மாற சொம்பில் ஊற்ற சொன்னார். அம்மாவையும், குழந்தையையும் உட்கார சொன்னார். பிறகு பெரியவாளும் அவன் அருகில் அமர்ந்து நிறைய சில்லறை காசுகளை சொம்பில் போட்டு அவனை எடுக்க சொன்னார். அவனும் எடுத்து கொண்டான். இது மாதிரி மூன்று முறை செய்தார். அவனும் உடனே அழுகையை நிறுத்தி விட்டான். பெரியவா அவனை பார்த்து “பணம் போதுமா இன்னும் வேணுமா?” என்று தெலுங்கில் கேட்டார். பின் எல்லாம் நீயே எடுத்துக்கோ என்றார். அவனும் எல்லா காசையும் எடுத்துக்கொண்டான். பெரியவா அம்மாவை “இவனை அழைச்சிண்டு போ” என்று சொல்லி அனுப்பி விட்டார். அதற்கு பிறகு மௌலி அழுவதை சுத்தமாக நிறுத்தி விட்டான்.
எங்கள் அம்மா மடத்திலிருக்கும் சில பெரியவா சிஷ்யர்களுக்கு காபி கொடுப்பது வழக்கம். ஆனால் அந்த காலத்தில் யாரும் (மடத்திலிருப்பவர்கள்) காபி குடிக்கக்கூடாது என்று பெரியவா உத்தரவு. ஆனால் பழக்கப்படறவர்களால் எப்படி நிறுத்த முடியும்? அதுவும் வீட்டில் மிஷினில் கம கம என்று வாசனையான காபி பொடி, வீட்டிலேயே கறந்த பசும்பால்.
எங்கள் வீடு ரொம்ப பெரியது. பெரியவா கூடம், நான்கு பக்கமும் தாழ்வாரம், மித்தம். பெரியவா கூடத்தில் பூஜை செய்வார். பக்தர்கள் மூன்று தாழ்வாரத்திலும் உட்கார்ந்து பூஜையை பார்ப்பார்கள். பெரிய சமையல் அறை… வீட்டிற்கு இடது பக்கம் மாட்டு கொட்டகை….70-80 மாடுகள் இருக்கும். பெரியவா மடம் வீட்டிற்கு வருகிறார் என்று முன்னவே அறிவிப்பார்கள். உடனே நாங்கள் வீட்டை காலி செய்து பக்கத்திலுள்ள அறைக்கு சென்று விடுவோம். மாட்டுக்கொட்டகை பெரியதாக இருப்பதால் மடத்திலிப்பவர்களும் மடத்திலிருந்து வரும் பக்தர்களுக்கும் அன்னதானம் தினமும் நடக்கும். பின்பக்கம் பெரியவா கிணறு பெரியவாள் காட்டினார்.
பெரியவாள் எப்பொழுதும் மாட்டுக்கொட்டகை பக்கம் வரமாட்டார். ஒரு நாள் பெரியவா வீட்டின் பின்பக்கமாக சிஷ்யர்களுடன் மாட்டுக்கொட்டகை பக்கம் வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் அம்மா அவர் வருவதை கவனிக்காமல் செம்பு நிறைய காபி கலந்து கொண்டு மாட்டுக்கொட்டகைக்கு பின் உள்ள வாசல்படியிலிருந்தே விஸ்வநாதனை அழைத்து “இந்த குடியுங்கோ…சூடு ஆறிடப்போறது” என்று சொல்லி கீழே வைத்தார்கள்.
சிஷ்யர்கள் ” மாமி, பெரியவா வரா” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெரியவா அங்கு வந்து விட்டார். கோவமாக அம்மாவை பாத்து “ஆ காபினி நா தல்லோ போய்” (அந்த காபியை ஏன் தலைல கொட்டு) என்றார். அதற்குப்பிறகு அப்பா அம்மாவை காபி கொண்டு பொய் கொடுப்பதை நிறுத்தத் சொன்னார். பெரியவாளுக்கு கோவம் வரும்படி நடந்து கொள்ளாதே என்று கண்டித்தார்.
பெரியவா முதலில் கோவித்துக்கொள்வார். பின் உடனே ஏதாவது நகைச்சுவையாக சொல்லி சமாதானமாக பேசுவார்.
(to be continued…)
Categories: Devotee Experiences
Experience of Smt Rajeswari – Part 2
Mahesh and team,
I express our sincere thanks to the nicest things you’ll offer to the society. If ever we miss on a translation we wake up to ask you and thank you simultaneously for what we have been provided with.
Mahesh, whenever chance permits kindly have this translated please, Experience of Smt Rajeswari – Part 2
This text in Tamil looks long so interested .
Once again we express our gratitude to reach out to non- Tamil reading audience.
Have a good day and week ahead .
Mahan. Kan kanda deivam
Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaja Jaya Shankara!
Thanks for considering me for this noble periyava kaingkaryam. feeling blessed.
IT IS REQUESTED THAT NAME OF PLACE .YEAR FOR THIS EPISODE INDICATED IF POSSIBLEPLEASE. MAHAPERIYAVA SARANAM.PLEASE.
hahahha,super
Very nice . When you visualise feel very good and brings heartfelt smiles….atleast idaavadhu kidaichudhe…
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Paahi Paahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam