Sri Periyava Mahimai Newsletter – Oct. 11 2010

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What a stunning explanation by Sri Periyava on why we should remember and thank Narakasura!!! We always need to remember Mahan’s thoughts and actions are in a plane that is way beyond for mere mortals like us to comprehend. We also should thankfully remember Shri Ra Ganapathy Anna who has brought his incident right in front of our eyes through his words. Sri Pradosha Mama’s bhakthi and power is depicted in another incident.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (11-10-2010)

நன்றி செலுத்த வேண்டிய நரகாசுரன்!

ஒருபுறம் சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையான தவ வலிமையுடையான அம்சம், மறுபக்கம் தன் பரமகருணையால் உலகோருக்கெல்லாம்  அனுக்ரஹம் செய்யவே இந்தத் திரு அவதாரம் பூண்டிருப்பதால் உண்டாக்கிக் கொண்ட எளிமை என இரு துருவத் தோற்றங்களை ஒருமுகமாக அருளும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் மாபெரும் தெய்வத்தின் விசேஷம் தனித் தன்மையுடன் நிகழ்வதைக் காணமுடிகிறது.

மகானின் உபதேசங்களிலாகட்டும், சில குறிப்பிட்ட பாக்யசாலியான பக்தர்களிடம் அவர் சம்பாஷணை செய்த அருள்வாக்குகளிலாகட்டும் மற்ற எவரும் இதுவரை தெரிவிக்காத புது கோணத்துடன் விளக்கங்கள் அருளப்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட அனுபவங்களை பக்தர் திரு.ரா. கணபதி அவர்கள் பல்வேறு சமயங்களில் ருசித்துள்ளார். அதை அவர் விளக்கமாக எழுத அதைப் படிப்பவருக்கே அத்தனை ஆனந்தம் ஏற்படுவதை உணரும்போது அதை மகான் சன்னதியிலேயே அனுபவத்தவரின் நிலையை என்னென்பது?

தீபாவளி பற்றின பெரியவாளின் அருள்வாக்கு ஒன்றினை திரு. ரா. கணபதி அவர்கள் விவரிக்கிறார்.

பேசுவது பெரியவா தானா என்பதுபோல அன்று தூக்கிவாரிப்போட்டதாம் இவருக்கு!

எனக்கென்னவோ பகீரதனைவிட நரகாசுரனைத்தான் ரொம்ப பிடிச்சிருக்குஎன்று ஸ்ரீ பெரியவா தொடங்கியபோது அங்கு இவருடன் கூடியிருந்த அத்தனை பக்தர்களுக்கும் பேசத் தோன்றவில்லையாம். தொடர்ந்து  அங்கே மௌனம் வியாபிக்க ஸ்ரீ பெரியவாளே சிறிது நேரத்திற்கு பின்  தன் வதனத்தில் சிறு நகை அரும்ப,

ஏன்னு சொல்லுங்கோஎன்று புரியாத புதிரான விடையைக் கேட்டாராம். அப்போதும் ஒருவரும் வாய்திறக்க இயலவில்லை ஒரு பக்தர் பொறுமையின்றிபெரியவா தான் சொல்லணும்என்று விழுந்து நமஸ்கரித்தார்.

உடனே இலக்கிய சுவைப்பட ஸ்ரீ பெரியவா பேசலானார். ஆனாலும் நேரே விஷயத்திற்கு வராமல் தொடங்கினார்.

அதுக்குன்னு பகீரதனைப் பிடிக்காமலில்லை. “தபஸ்னு சொன்னாலே அவனோட தபஸ்தான் லோகம்பூராவும் பேசறபடி பண்ணினவனாச்சே! அவனுக்கு எத்தனை பித்ரு பக்தி? சிரத்தை? லோகத்துக்குத்தான் அவனாலே எத்தனை உபகாரம்? தேவலோகத்திலேர்ந்து கங்கையை இந்த பூலோகத்துலே பாய வச்சு இயற்கை வளத்துக்கு இயற்கை வளம், அதோடகூட ஆயிரம் மடங்கு புண்ணியத்துக்குப்  புண்ணியம் சேர்த்துக் கொடுத்தவனாச்சே! அதனாலே எல்லோரும் பண்றாப்பல ஸ்தோத்ரம் பண்ண வேண்டியதுதான் கூடவே நன்றியும் சொல்லணும்.

“ஆனாலும் அவனையே ஸ்தோத்ரம் பண்றது, அவனுக்கே நன்றி சொல்றதுன்னு வைச்சுட்டு நரகாசுரனை அவன் செஞ்ச கெட்டவைகளுக்காகத் தூஷணை பண்றது, நமக்கெல்லாம் தீபாவளியை வரமா வாங்கித் தந்ததற்காக கொஞ்சம் பாராட்டறதுன்னா அது நியாமாயில்லை. என்னைக்கேட்டா அவன் பண்ணின கெடுதலுக்கு அவனைத் தூஷணை பண்ணாம நிறுத்திட்டு, பகீரதனை பூஷிக்கிறதைவிட இவனைத்தான் ‘எப்படி இருந்த அசுரன் இப்படி மாறிட்டான்’ ன்னு “ரொம்பவே கொண்டாடணும். நன்றின்னு எடுத்துண்டா கூட அவனுக்குத்தான் பகீரதனைவிட கோடிக் கணக்கு அதிகமா சொல்லணும். அவனோட ஆயுள் காலத்தோட அவனைக் கெடுதலா பேசறது முடிஞ்சி போச்சு. அவன் செஞ்சது காலம் உள்ள அளவும் அவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியதாக அமைஞ்சுடுத்து.

“தபஸ், பித்ரு, பக்தி, சிரத்தை இதுக்கெல்லாம் பகீதரனை நன்னாவே கொண்டாடுவோம். ஆனாலும் comparative ஆ அந்த அசுரன் லோகம் பூரா சந்தோஷமா பண்டிகை கொண்டாடணும்னு வரம் வாங்கித் தர அளவிற்கு அடியோட ‘சேஞ்ச்’ ஆனதுக்காக அவனை ஜாஸ்தி கொண்டாணும். நன்றின்னு எடுத்துண்டா ரெண்டு பேரையும் ‘கம்பேர்’ பண்ணவே முடியாது. கங்கையை பாய வைச்சானேன்னு பகீதரனுக்கு நிச்சயமா நன்றி சொல்லணும். ஆனாலும் அது ஒண்ணுமில்லேங்கற அளவுக்கு நரகாசுரனுக்குத் தான் நாம் கோடி மடங்கு நெஞ்சார நன்றி சொல்லியாகணும்”.

எதற்கோ இப்படி ஒரு முன்னுரை விளக்கத்தை ஸ்ரீ பெரியவா கொடுக்க புதிருக்கு விடையை அறிய பக்தர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்து நின்றிருந்தனர்.

“உத்தேசித்துப் பண்ணினாலும், உத்தேசிக்காமலே பண்ணினாலும் செஞ்சவாளுக்கு நன்றி சொல்றதுதான் பண்பாடு. புத்தி பூர்வமா பார்த்தா உத்தேசிக்காம உபகாரம் பண்றவாளுக்கு நன்றி சொல்லணுமான்னு கேள்வி எழும். அந்த ரீதியில்தான் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது நரகாசுரனுக்கு மட்டும்தான். நன்றிக்கடன் சொல்றதை கடமைன்னும் அழுத்தமா சொல்றேன். கடன், கடமைங்கற ரெண்டு வார்த்தையும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தபட்டவைதான். இங்கலீஷ்லே கடமையை ‘duty’ ங்கறோம். கடன்பட்டிருப்பதை ‘due’ ன்னு சொல்றமில்லையா?.

“கடன்பட்டா திருப்பிக் கொடுத்தே ஆகணும். இல்லாவிட்டால் சட்டப்படியே குத்தம். தான தர்மம் பண்றது அப்படியில்லே. அது நம்ம இஷ்டத்தைப் பொறுத்ததுதான். பண்ணினா புண்ணியம், பண்ணாட்ட பாவம் ஆகாது. குத்தம்னு யாரும் கேஸ் போட முடியாது. கிட்டத்தட்ட அதே மாதிரிதான் நாம நன்றிங்கிற அம்சத்திலே இந்த ரெண்டு பேர்கிட்டேயும் சம்பந்தப்பட்டிருக்கோம். பகீரதனுக்கு நன்றி சொன்னா புண்ணியம். சொல்லாட்டா குத்தமில்லே. ஆனா நரகாசுரனுக்குச் சொல்லியே ஆகணும். அது கடமை. பகீரதனுக்கு சொல்றது Optional. ஆனால் நரகாசுரன் விஷயத்திலோ அது ‘Obligatory’… எப்படின்னு சொல்றேன்”.

உற்சாகத்துடன் புதிரை அவிழ்க்க ஸ்ரீ பெரியவா நிமிர்ந்து உட்காருகிறார்.

“பகீரதனாலேதானே நமக்குப் புண்ணிய நதி கிடைச்சிருக்கு. அது பெரிய உபகாரம் வாஸ்தவம்தான். ஆனா லோக ஜனங்களுக்கு கங்கை கிடைக்கணும்னு உத்தேசித்து அதை அவர் வருவிச்சதா தெரியலை.” பாதாள லோகத்திலே பஸ்பமாக் கிடந்த தன்னோட பித்ருக்களுக்குக் கங்கா ஜலத்தாலே சொர்க்கம் கிடைக்க இதை சாதிச்சுடணும்னு உத்தேசம் பண்ணி படாதபாடு பட்டான். கோகர்ணம் போய் பிரம்மாவைக் குறிச்சு பஞ்சாக்னி நடுவிலே கடுமையா தபஸ் பண்ணி, ஈஸ்வரனும் கங்கையை தன் ஜடாபாரத்திலே தாங்கி பூமியிலே ஓடவிட, அந்த கங்கையை பாதாளத்திலே கொண்டு விடறதுதான் பகீரதனோட நோக்கமானதாலே அதை பாரத புண்ணிய பூமியிலே 1600 மைல் பாயும்படி செஞ்சு சமுத்திரம் வழியா பாதாளத்திலே கொண்டு விட்டது.

பகீரதன் செஞ்சது incidental தான் intentional அல்ல. ஆனால் நரகாசுரனோ கிருஷ்ண பரமாத்மாவோட சுதர்சன சக்கரத்தாலே கழுத்தறுக்கப்பட்டு, அடுத்த க்ஷணமே பிராணன் போயிடலாம்ற ஸ்டேஜிலே கூட, தன்னோட க்ஷேமத்தையோ, பித்ருக்கள் மாதிரியான தன்னோட பந்துக்களுடைய க்ஷேமத்தையோ நினைக்காமா, லோக க்ஷேமத்துக்காக தன்னோட இந்த நாளிலே என்னென்னிக்கும் கங்கையோட ஸாந்நித்யம் எல்லா தீர்த்தத்துலேயும் பூர்ணமா ஏற்பட்டு ஜனங்களோட பாபத்தை அலம்பி விடணும்; ஜனங்கள் பாவத்தைத் ‘தொலைச்சு தலைமுழுகறது’ போல அன்னிக்குப் பண்ற ஸ்நானம் எந்த ஜலமா இருந்தாலும் அதிலே கங்கை ஆவிர்ப்பவிச்சு அது கங்காஸ்நானம் ஆகி தான் ஒழிஞ்ச நாள் ஆனந்தமான பண்டிகையாக் கொண்டாடப்படணும்னு வரம் கேட்டான். தனக்கு மோட்சம் வேணும்னு கேட்கவே இல்லை, ஒசத்தியா மறுஜன்மம் கேட்கலே.

லோகம் உள்ள அளவும் அவாளுக்கு எத்தனை பாபம், கர்மா இருந்தாலும், வருஷத்திலே அந்த நாளை புது வஸ்திரம், விருந்து, பட்சணம் வெறும் இந்திரிய ஆனந்தத்தோட நிக்காம கங்கா ஸ்நான புண்யம்கிற ஆனந்தமும் அனுபவிக்கணும்னு அந்த அசுரன் அந்த நேரத்திலேயும் நினைச்சதுதான் பெரிசு.

பகீரதன் கொண்டு வந்த கங்கையைத் தேடிண்டு போய்த்தான் மத்த பிரதேசங்களிலே இருக்கிற ஜனங்கள் ஸ்நானம் பண்ணனும். ஆனா நரகாசுரனோ லோபோகாரமாக இந்தப் பிரதேசம்னு இல்லாம லோகம் பூராவிலும் இருக்கிற அத்தனை ஜலமும் இந்த நாளிலே கங்கையே ஆகி எல்லா ஜனங்களும் கங்கா ஸ்நான புண்ணியத்தை அவா அவா இருக்கிற இடத்திலேயே  அடையணும்னு வரம் வாங்கினதுதான் உசத்தி.

அதனாலே வேற ஏதோ உத்தேசத்திலே கங்கையைப் பாய வைத்த பகீரதனை விட நமக்குள்ளே வரம் கேட்டு கங்கையை வீட்டுக்கு வீடு தேடிண்டு வரும்படி செஞ்ச நரகாசுரனுக்குத்தானே நாம ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம்….. அவனைத்தானே நாம் ஜாஸ்தி பூஷிச்சு தோத்திரம் பண்ணனும்” இப்படி ஒரு அரிய விளக்கம் சொல்லி முடித்த ஸ்ரீ பெரியவாளை அங்கிருந்த பக்தர்கள் மனம் உருக நமஸ்கரித்து எழுந்தனர்.

எதிலும் தர்மத்தை நோக்கி அதன்படி அருள்வாக்கு நல்கும் இப்பேற்பட்ட புண்ணிய புருஷரை நினைத்தாலே நம் பாபங்கள் விட்டு அழியுமல்லவா. இந்த மகானின் திருவருளால் எல்லோரும் சகல பாக்யங்களும், சர்வ மங்களங்களையும் பெறுவார்களாக!

ஓரு துளி தெய்வாமிருதம்


தற்காலத்திலுள்ள
பெரும்பாலான பெரியவர்கள் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தும் விஷயத்திலே கேள்விக்குரியவர்களாகத்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆகவேதான் இவர்களுடைய வார்த்தைக்கு இளம் தலைமுறையினரிடம்வால்யூஇருப்பதில்லை. அதனால் இதை உத்தேசித்தாவாது வயதான தலைமுறையினர் நன்னெறிகளில்நல்லொழுக்கங்கள் என்றவற்றில் கட்டுப்பட்டு வாழவேண்டும். அதை அடுத்த தலைமுறையினருக்கும் உரிய முறையில் பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மீளா அடிமையாம் அற்புத நாயன்மார் 

(தொடர்ச்சி)


(
விக்ருதி வருடம் ஐப்பசி மாதம் 5ம் நாள் வெள்ளிக்கிழமை பிரம்மஸ்ரீ பிரதோஷ நாயன்மாரின் ரேவதி நட்சத்திர ஜயந்தி உற்சவம் (22-10-2010) )

பிரம்மஸ்ரீ மாமாவின் தவவலிமை எப்பேற்பட்டதென்பதை நாயேன் உணர்ந்த சம்பவம் 1990 அதிருத்ரத்தின்போது நடந்தது. அதிருத்ரம் ஆரம்பித்து இரண்டு நாளாகியும் மழை வரவில்லையே, அதற்கான என் பக்தி போறவில்லையா என்று மாமா மனம் வெதும்பினார். அக்னிஹோத்ரிகள் ஹோமம் செய்தும் ஸ்ரீ மஹா பெரியவா மழை கொடுக்கவில்லையென்றால் அது என் பக்தி சிரத்தைக் குறைவினால்தான் என்று வேதனைப்பட்டபோது மாமாவின் இந்த மனப்பான்மை நாயேனை வியப்புக்குள்ளாக்கியது. நாயேன் என்னாலான சமாதானம் செய்தும் அதை அவர் ஏற்கவில்லை.

ஆனால் மகாபிரபுவான ஸ்ரீ பெரியவாளின் மாமனம் அதை ஏற்று கருணை மழை பொழியச் செய்தது. மே மாதம் இரண்டாம் தேதி லேசானதாக ஆரம்பித்து பெரு மழையாகக் கொட்டித் தீர்த்ததில் அந்தக் கோடையில் என்றும் காணாத குளிரில் காஞ்சிமாநகரம் நனையாலாயிற்று. மாமாவின் மனமும் சமாதானமாயிற்று. அந்த வருடம் எங்கும் மழையாகவும் புயலாகவும் கருணை மழை தொடர்ந்ததில் மாமாவின் தவத்திற்கு அங்கீகாரமாய் நிதர்சனமாகத் தெரிந்தது.

“அதிருத்ரம் என்றால் இது தான். இதைப்பற்றி புத்தகம் போடு” என்று பெரியவாளின் சான்றிதழ் கிட்டிய பாக்யம் மாமாவை அடைந்தது.

இந்த அதிருத்ரத்திற்காக நாயேன் 15 நாட்கள் விடுப்பு கேட்ட போது மேலதிகாரி மறுத்துவிட அவருடைய உயர் அதிகாரியை அணுகினேன். அப்போது ஆடிட்டர்கள் வருகையை கம்பெனி எதிப்பார்த்ததால் அவர்கள் வருவதற்கு முன் நாயேன் திரும்பி வந்தாக வேண்டுமென்ற கண்டிஷனோடுதான் விடுப்பு வழங்கப்பட்டது. நாயேனின் கவலையைப் போக்குவதுபோல அதிருத்ர வேலைகள் யாவும் முடிந்து நான் ஊருக்குத் திரும்பி கம்பெனிக்கு போகும்வரை ஆடிட்டர்களை வரமுடியாமல் மாமாவின் தவவலிமையும் ஸ்ரீ பெரியவாளின் கருணையும் காப்பாற்றி அருளின. வடக்கிலிருந்து ஆடிட்டர்கள் வர இயலாமல் புயலால் பாதித்து ரயில்கள் ரத்தானதே இக்கருணையினால்தான் என்பதை நாயேன் உணர முடிந்தது. மேலும் பிறகு வந்த ஆடிட்டர்கள் நாயேனை வேலைக்காக பாராட்டின அதிசயமும் அருளப்ப்பட்டது.

அதேபோல் நாயேனின் கம்பெனியில் வேலைப்பார்த்த பொறியாளர் நண்பருக்கு வேறுவிதமான அனுபவம் நேர்ந்தது. அதிருத்ரத்திற்கான கட்டுமான வேலைகளை செய்து பெரும் உதவியாக இருந்த இந்த நண்பர் விடுப்பில் வந்தபோது யாரோ அவர்மீது அவதூறாக புகார் சொன்னதில் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட மிகவும் சிரமப்படத் தொடங்கினார். உடனே இதைத் தாங்காமல் இவரை பிரம்மஸ்ரீ மாமா ஸ்ரீ பெரியவாளிடம் அழைத்துக் கொண்டு நிறுத்தி முறையிட்டார்.

உடனே ஸ்ரீ பெரியவா “சுபயோகம்” என்ற அருள்வாக்கை உதிர்த்தருளினார். அன்றுமுதல் அந்த நண்பருக்கு வாழ்வில் சுபயோகங்களாக அமைந்து, தனியாகத் தொழில் தொடங்கி முன்னேற்றமடைந்து வீடு, வாகனம் என்ற சகல நலங்களுடன் இன்றும் ஸ்ரீ பெரியவா பக்தி, பிரதோஷ நாயன்மாரிடம் பக்தி என சத்காரியங்களில் ஈடுபட்டவராக மகிழ்கிறார். இவையாவும் பிரம்மஸ்ரீ மாமாவின் தபஸ்  ஒன்றினால்தான் சாத்யமானது என்று தெளிவாகத் தெரிகிறது.

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
__________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (11-10-2010)

“Let us thank Narakasuran”

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

In the Upadesha given by Mahaans or in the discussions they had with few blessed devotees, they would have revealed some new angle to the things everyone already knew.

Shri Ra. Ganapathy has been blessed with many incidents like the above. If the happiness of the people who read these detailed versions are abound, imagine the happiness of Shri Ganapathy, who experienced these directly?

Shri Ra. Ganapathy talks about Periyava’s thoughts on Diwali. That day, he was surprised if it was Periyava’s who was talking.

“I somehow like Narakasuran more than Bhagirathan”. Periyava started to talk and everyone present there shocked. Then He smiled and continued, “Can anyone tell why?” No one answered. A devotee came forward and said, “Periyava only should explain” and prostrated before Him.

Periyava started to talk and did not come to the point immediately. “I do not mean I don’t like Bhagirathan. His penance is famous throughout the entire world. He is also an example for respecting his forefathers, dedication. He has also brought the river Ganga to this earth and made it fertile and good for farming. So we need to chant his name and also thank him”.

Periyava said, “But only praising and thanking Bhagirathan and talking bad about Narakasuran for most of the time and only praising him for giving us Diwali is not correct. We need to praise Narakasuran, because, he turned good after realizing his fault. We need to thank Narakasuran thousand more times than Bhagirathan. Talking ill about Narakasuran should be over with his time. Our duty is only to thank him now”.

Periyava continued, “We celebrate Bhagirathan for Penance, taking care of his parents, bhakthi and dedication. But we also need to thank Narakasuran for undergoing a massive change, giving the entire world, an opportunity to celebrate. We need to thank Bhagirathan for bringing the river Ganga to earth, but Narakasuran deserves a lot more thankfulness”

All the devotees were waiting for the final answer to the puzzle.

“Everyone is supposed to thank any help, intentional or unintentional. One might ask, why should any help that was done unintentionally be thanked. In that way, we are only thankful to Narakasuran. I need to stress that the thankfulness is everyone’s duty. Both “Kadan” (Loan/Credit) and “Kadamai” (Duty) are related to each other. In English, “Kadamai” is called Duty and “Kadan” will translate to Due. If you are in a debt, lawfully, you need to repay it, but helping is not the same. It depends on us. Nobody can accuse us for that. It is the same case with Narakasuran and Bhagirathan. It is good to thank Bhagirathan, but there will not be any problem if one does not. But it is a duty to thank Narakasuran. Thanking Bhagirathan is optional, but Narakasuran is Obligatory. I will tell you why”. Periyava continued to unravel the mystery.

“It is true that we received a holy river due to Bhagirathan. But he had not brought it to earth for the people. He had brought the river, so that all the ashes of his forefathers will be cleansed and they will attain Moksha. He performed a severe penance among fire praying to Brahma at Gokarna and Lord Shiva held Ganga in the Locke of His hair and Bhagirathan made it flow through for 1600 miles in Bharatha Varsha to the ocean.

Whatever Bhagirathan did was incidental and not intentional. But it is not the same case with Narakasuran. Even when his head was cut by Krishna’s Srichakra, and he was about to lose his life in the next second, he did not think about himself, his family, forefathers or friends. He wanted something for the benefit of all the people. He wanted all the water on that day to become Ganga to purify all the people who bathe. He also wanted everyone to be happy and celebrate the day. His intention of not stopping with the worldly pleasures like new dress, food and asking for purification of all has to be acknowledged and thanked.

“To get the benefit of Ganga that Bhagirathan had brought, one has to go to it, but Narakasuran had brought the benefit of Ganga to everyone, by transforming the water anyone bathes to be Ganga on that day. That is the noblest thought and is to be considered great. So we need to thank and praise Narakasuran for bringing Ganga to each and everyone’s house”.

Everyone there who were intently listening to Periyava, prostrated before Him.

Is it not enough just to think about Periyava, who follows the dharma and advices people to follow it.


A drop of God’s Nectar:

Many of the elderly people nowadays are not adhering to disciplined lifestyle an. This is the reason the next generation does not listen to them. At least for this reason, they have to follow a disciplined life style, instilled with good habits. They should then teach the next generation about that in a proper way.


Shri Shri Shri Mahaperiyaval’s “always devoted” wonderful Nayanmar

(Contd.)

I understood and realized the penance power of Pradosham Mama during the Adi Rudram event of 1990. Pradosham Mama was sad his bhakthi was not enough, since it had rained even after two days of the event. I was surprised to see that, Mama was blaming himself for the lack of rain after the homam conducted by the Agnihotris. He was not ready to accept the consolations that I had offered.

But due to the kindness of Periyava, on May 2nd, the rain started slowly and transformed into heavy rains in the following days. The sunny and hot days in Kanchipuram turned to be cooler and pleasant. Mama also felt relieved and happy. There was a good amount of rainfall the entire year, which stood as an example for Mama’s bhakthi.

Mama was blessed with the certificate that the event he had conducted was how an Adi Rudram event should be. It was supposed to be a book for other devotees to learn.

I was refused a leave for 15 days to attend this Adi Rudram by my manager. When I requested the leave to the higher management, I was granted leave on the condition that I should be back to office before the auditors were supposed to come. Like a blessing, due to the heavy rains, the auditors were delayed coming from North India and I was able to join the duty before they could come. In addition to that, I was also praised by the auditors for my good work.

Similarly, another interesting event happened with an engineer friend of mine, who also worked for my company. He had also been on leave to help us build for the event. During his leave, someone complained about him, leading to his suspension from the company. He started to suffer financially on losing the job. Brahmashree Mama immediately took him to Periyava to explain his situation.

Periyava blessed him with “Subhayogam”. From that day, he was blessed with all good things. He had started his own company and settled down with a house and vehicle. He is also involved in multiple good activities with the grace of Periyava and Pradosham Mama. These are all due to the grace and penance power of Pradosham Mama.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)

 



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Hara Hara Sankara Jaya Jaya Sankara. Janakiraman. Nagapattinam.

Leave a Reply

%d bloggers like this: