Sri Periyava Mahimai Newsletter – Sep 14 2010


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Rather than just placing the invite as an academic exercise, how many of us really long and have the mind to invite Sri Periyava for our household functions? Are we mature enough to perceive and understand that Sri Periyava can come in any form as he desires too… Below is the incident that highlights the above as well Periyava’s Eswara Sakthi. Rama Rama

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (14-9-2010)

நான் கல்யாணத்துக்கு வந்தேனே!

யோக நிலையில் மேலானதுமான பிரம்மரிஷியாம் சுகமுனிவரின் தவநிலையை மேற்கொண்டு அதே சமயம் உலகோர் உய்ய தம்மை மிக எளிமையானதோர் மடாதிபதியாகக் காட்டிக் கொண்டு சாட்சாத் நடராஜ மூர்த்தியாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவா அருளாட்சி புரிந்தருளுவது நாம் செய்த பாக்யமே!

எளிமையென்றால் அதன் எல்லையிலேயே தன்னை அத்தனையளவு வருத்திக் கொள்வது ஒருபுறமிருக்க, தன்னுடைய சர்வ வல்லமையைக் கூட சற்றேனும் வெளித் தெரியாமல் காத்து மறைத்த தாழ்மைக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஒரு உதாரண புருஷராய் திகழ்கிறார். தன்னை நாடி வந்த அதி மேதாவிலாச பக்தர்களில் ஒருசிலருக்கு தன்னை சாட்சாத் பரமேஸ்வரர் என்று உணரச் செய்த மகான் அதே சமயம் பரமார்த்தியாகத் தரிசிக்க வரும் பக்தர்களையும் அவர்கள் பாமரத்தனமாக  வைக்கும் கோரிக்கைகளுக்கும் அருளாமல் விட்டதில்லை.

ஒரு சேலம் வாழ் பக்தர் நேரில் கண்ட சம்பவம் இது. அந்த பக்தர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை சென்னை மைலாப்பூரில் அருளியபோது தரிசித்து நின்ற ஒரு சமயம், ஒரு பெண்மணி ஸ்ரீ பெரியவாளிடம் இப்படி ஒரு வெகுளித்தனமான வேண்டுதலை இதற்கு முன் வைத்துவிட்டு அதை ஸ்ரீ பெரியவா நிறைவேற்றவில்லையே என குழந்தைத்தனமாகக் கேட்க வந்து நிற்கிறாள்.

அப்படி என்ன அந்த மாதுவின் கோரிக்கை?

நாம் எல்லோரும் நம் வீட்டுக் கல்யாணமென்றால் உறவு, நட்பு என்று அனைவரையும் அவசியமாக திருமணத்திற்கு வந்தே ஆகவேண்டுமென்று அழைப்பதுபோல, இந்த பக்தைக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளையே அழைக்க வேண்டுமென்று தோன்றியுள்ளது.

பெரியவா எங்காத்துக் கல்யாணத்துக்கு வரணும்தான் கேட்பது எப்பேற்பட்டது என்றெல்லாம் சிந்தை கொள்ளாமல் தன் பக்தியின் உணர்ச்சி வெளிப்பாடாக அந்த பக்தை ஸ்ரீ பெரியவா தன் வீட்டுக் கல்யாணத்திற்கு வரவேண்டுமென்ற ஆசையால் கேட்க ஆரம்பித்தாள். இப்படி தரிசனம் செய்ய வரும்போதெல்லாம் அந்த மாது விடாமல் கேட்டுக் கொண்டே இருந்திருக்க வேண்டும். சுற்றியுள்ள மடத்து சிப்பந்திகளோ, பக்தர்களோ அந்த மாதுவிடம் இப்படியெல்லாம் மகாஞானியிடம் கேட்பதாவது என்றும் அவரை முறைப்படுத்தியும் இருக்கக்கூடும். இருந்தாலும் பரமாத்மாவான பரந்தாமனுக்கு தன் கிழிந்த வேட்டியில் அல்பமான அவலைக் கொண்டு சென்ற குசேலனின் ஆசை இந்த அம்மாளுக்கும் ஸ்ரீ பெரியவாளிடத்தில் இருந்திருக்கலாம்!

திரும்பத் திரும்பக் கேட்டதில் பரமேஸ்வரர் மனம் உருகிவிட்டது. “நான் அவசியம் வரேன்என்பதாக அந்த மாதுவை சமாதானம் செய்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அருளி அனுப்பினார். பக்தைக்குப் பெரும் சந்தோஷம். கல்யாண நாளில் இதைத் தவிர வேறு சிந்தை கொள்ளாதவளாய் ஸ்ரீ பெரியவா வருகைக்குக் காத்து நிற்கிறாள்.

பூர்ண கும்ப மரியாதையோடு வைதீக முறையில் பெரும்குருவாம் ஸ்ரீ பெரியவாளை வரவேற்க சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்த பக்தை வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்களுடனான வாயிலில் காத்து நிற்கிறாள்.

நேரம் நகர்கிறது. மாமிக்கு ஆவல் பெருகுகிறது. எப்போ வருவாரோ என ஏக்கமும் படபடப்புமாகிறது. காத்திருந்த பக்தைக்கு ஏமாற்றம்! முகூர்த்தம் நெருங்கியாயிற்று. தான் உள்ளே சென்றாக வேண்டும். இப்போதும் வரவில்லையே! யார் யாரோ வருகிறார்கள். அவர்கள் மேல் மனம் செலுத்தாமல் வரவேற்கிறாள். மிகவும் ஏமாற்றத்தோடு முகூர்த்த சுபகாரியங்களை கவனிக்க உள்ளே போகிறாள்

பெரியவா கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லிவிட்டு ஏன் வரலேஎன்று இப்போது உரிமையுடன் கேட்டு நிற்கிறாள். இந்த சமயத்தில்தான் சேலம் பக்தருக்கும் இதைக் காணவும் இதைப்பற்றி அறிந்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் நேர்ந்துள்ளது.

இப்போதும் அந்த பக்தை விடாமல் ஸ்ரீ பெரியவா தன் வீட்டு கல்யாணத்திற்கு வராத குறையை மிகுந்த ஏக்கப்பட்டவளாய் கேட்டுக்  கொண்டேயிருக்க, அந்த பரம காருண்யரோ, “ஏன் நான்தான் வந்தேனேஎன்றபோது அந்த மாதுவிற்கும் சுற்றியிருந்த பக்தர்களுக்கும் பெரும்வியப்பு.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா சில சமயங்களில் மாபெரும் தத்துவ விளக்கங்களை எளிமையாக்கிக் கூற முற்படும்போது இப்படிக் குறும்புத்தனமாக எதையாவது சொல்லி ஆரம்பிப்பதுண்டு. அதுபோல ஸ்ரீ பெரியவா இப்போதும் விளையாட்டாக எதையோ கூறுகிறாரோ  என்ற சந்தேகம் எல்லோருக்கும் மனதுள் ஒடியது.

பெரியவா எங்கே வந்தீங்க? நான்தான் பூர்ணகும்பத்தோட வாசல்லேயே காத்திருந்தேனே?” என்று அந்த பெண்மணி வெகுளியாக இடை விடாமல் கேட்டாள்.

நீ வாசல்லே காத்துண்டிருந்தபோது ஒரு மாடு அங்கு வந்துதோ?” ஸ்ரீ பெரியவா தன் சந்திரவதனத்தில் புன்னகைக் கீற்றுடன் வினவினார்.

மாது சற்று யோசித்தவளாய்ஆமாம் ஒரு மாடு நாங்க நிற்கறச்சே வந்தது. யாரோ விரட்டினா…. அது நகர்ந்துபோய் கட்டியிருந்த வாழை மரத்தோட இலையை வாயிலே கவ்வி இழுத்தது. பெரியவா வரப்போகிற சமயத்திலே மாடு இப்படி இடைஞ்சலா வந்து நிக்கறதேன்னு இருந்தது. அதைப் பார்த்துட்டு அந்த மாட்டை வாழை மட்டையாலே தட்டி யாரோ விரட்டிவிட்டுட்டாஎன்று அந்த பக்தை விளக்கினாள்.

கேட்டுக்கொண்டிருந்த பரமேஸ்வரரின் முகம் பிரகாசமான சிரிப்போடு மலர்ந்தது. அதில் ஆயிரம் அர்த்தங்கள். சுற்றியிருந்த கல்மிஷக்காரார்களுக்கு பளிச்சிட்டது. ஆனால் பரதையாக நின்ற பக்தையின் புத்திக்கு எட்டவில்லை. ஸ்ரீ பெரியவா அதற்காக ஒருபடி கீழே இறங்கலானார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளெனும் அன்புத் தெய்வம் அப்போது அந்த மாது உணரும்விதமாக சற்றே திரும்பி தன் திருமுதுகை பக்தைக்கு காட்டும்விதமாக வஸ்திரத்தை கொஞ்சம் விலக்கித் தரிசிக்க வைத்தார். அந்த பொன்னார்மேனியில் செந்நிறமாக ஒரு வாழைமட்டையால் ஏற்பட்டதுபோல காட்சிதந்த வரிவரியான காயங்கள்!

பார்க்கக் கொடுத்து வைத்தவர்களுக்குப் பதறியது! அதே சமயம் இப்படி ஒருதிருவிளையாடல்  நிகழ்ச்சியைக் காணும் பெரும்பாக்யம் கிட்டியதில் மெய்சிலிர்த்தது! அந்த பாமர பக்தைக்கும் புரிந்திட்ட விதமாக இந்த அருட்காட்சி அமைந்ததால் அந்த மாதுவிற்கும் உணர்ச்சி மேலிட்ட அனுபவமானது. தான் கூப்பிட்டதற்காக இந்த மாபெரும் தெய்வம் மாடு ரூபத்தில் வந்து மட்டையால் அடி வாங்கியிருப்பதை பக்தை உணர்ந்து விட்டாள். அவள் கண்களில் நீர் நிறந்தது. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெரும்கருணை தெய்வம் சாட்சாத் தானே என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா இந்த பக்தைக்கு இப்பேற்பட்ட மாபெரும் அனுபவத்தை அருளியுள்ளார்.

பெரியவா நினைச்சேள்! மாம்பழம் வந்தது

அது புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் என்ற காலம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவா மந்தஹாசமாக தரிசனம் அருளிக் கொண்டிருந்தார். மகானுக்கு முன்பாக பலவிதமான பழங்கள் தட்டுத் தட்டாக வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் ஒரு பெண்குழந்தை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஸ்ரீ பெரியவா அந்த குழந்தையை அழைத்தார்.

உனக்கு என்ன பழம் வேணுமோ, அதை எடுத்துக்கோஎன்றார் தாயன்பன். அன்னாசி, ஆப்பிள், திராட்சை, கொய்யா என்று ஐப்பசி மாத சீசனுக்குக் கிடைக்கும் பழங்களாக தட்டில் இருக்க அந்த பெண் குழந்தையோ அதையெல்லாம் விட்டுவிட்டுநேக்கு மாம்பழம்தான் வேணும்என்று ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வத்தையே சோதிப்பதுபோல் கேட்டு நின்றது.

அது மாம்பழக் காலமல்ல. மாவடு கூட காய்க்க ஆரம்பிக்காத சமயம்.

ஸ்ரீ பெரியவா யோசிப்பதுபோலக் காட்டினார். ஸ்ரீ வேதபுரி எனும் கைங்கர்யம் செய்வரை அழைத்தார்.

உள்ளே போய் ஏதாவது மாம்பழ வத்தல் இருக்கான்னு கேளுஎன்று சொல்லிவிட்டு தன் கமலங்களை மூடி சற்றே ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா தியானிப்பது போல் இருந்தார்.

அந்த சமயம் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஆந்திராவிலிருந்து பக்தர் இருவர் ஸ்ரீ பெரியவா முன்பாக பழத்தட்டுடன் வந்து நின்றார். அந்தத் தட்டில் பல பழங்களின் நடுவே அந்த குழந்தை கேட்ட இரண்டு பெரிய மாம்பழங்கள்.

ஸ்ரீ பெரியவா குழந்தையை அழைத்துஎடுத்துக்கோஎன்றார். குழந்தை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு ஆனந்தித்தது. உள்ளே போய் திரும்பிய ஸ்ரீ வேதபுரிஉள்ளே ஒன்றுமில்லையேஎன்றபடி வந்தார். இங்கே குழந்தையின் கையில் இருந்த இரண்டு மாம்பழங்களைப் பார்த்ததும் பெரும் வியப்பு!

இல்லேன்னு சொன்னாயே எப்படி வந்தது?” என்று ஸ்ரீ பெரியவா எப்போதும்போல ஸ்ரீ வேதபுரி மாமாவை குழந்தையாக பாவித்து விளையாட்டாய்க் கேட்டார்.

 “பெரியவா நினைச்சேள்…. பழம் வந்ததுஉணர்ச்சிவசப்பட்டவராய் இதை அனுபவித்த ஸ்ரீ வேதபுரிமாமா கண்களில் சாட்சாத் ஈஸ்வரரைக் கண்ட ஆனந்த்த்தில் நீர் முட்டியது.

மேலும் இதில் அதிசயம் என்னவென்றால் அப்படி திடுதெப்பென்று அங்கு மாம்பழத் தட்டுடன் தோன்றிய ஆந்திராகாரர்கள் அப்புறம் கண்ணில் படவில்லையாம்.

ஸ்ரீ பெரியவாளெனும் ஈஸ்வர சன்னதியில் யார், எதை, எப்போது கேட்டாலும் அது தானாகவே அனுக்ரஹமாகிவிடுவது சத்தியமே . இப்பேற்பட்ட அனுக்ரஹதெய்வத்தை பற்றிக் கொண்டால் சகல ஐஸ்வர்யங்களும், சர்வ மங்களங்களும் தானே வந்து நம்மைச் சேரும்மென்பதும் உறுதியல்லவா!.

ஓரு துளி தெய்வாமிருதம்

எந்த அவயத்தையும்விட வாய்க்குத்தான் வேலை ஜாஸ்தி. சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதால் அந்த இரண்டையும்  பாதியாக  குறைத்துக் கொள்ள வேண்டும். வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி என்பதற்கு சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டுமென்பதுதான் தாத்பரியம். ஆனால், நாம் இரண்டையும் தேவைக்கு அதிகமாக செய்கிறோம். சாப்பாடு, நொறுக்கு தீனி, பானம் என ஓயாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறோம். சாத்வீக ஆகாரம் மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும்கூட இல்லாமல் அவ்வப்போது உபவாசமும் இருத்தல் வேண்டும். அதுபோல வெட்டியாக வீண் பேச்சைக் குறைத்து பகவத் விஷயமாகப் பேசி, பாடி பஜனை பண்ணலாம். அதையும் தவிர்த்து மௌனமாக இருக்கலாம். மௌனம் அதை அனுஷ்டிக்கிறவனுக்கும், சமூகத்துக்கும் கூட நல்லது செய்யும்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மீளா அடிமையாம் அற்புத நாயன்மார் 

                                                                 (தொடர்ச்சி)

என் குருவான பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவிடமிருந்து ஒவ்வொரு க்ஷணமும் ஒரு அரிய  விஷயத்தைப் பாடமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. காஞ்சியில் நடந்த அதிருத்ரத்தின் போது இது எனக்கு அனுபவமாயிற்று. அதிருத்ரத்தின் ஒரு நாள் மாமா யாகசாலையையும், சுவாமியையும் தரிசித்துவிட்டு சமையலறை, சாமான்கள் வைக்கும் அறை என எங்காவது அனாசாரமாக இருக்கலாகாதே என்ற கவலையோடு சுற்றி ஒரு பார்வை எப்போதும்போல் பார்த்துவிட்டு வந்தார். மாமாவின் உயரிய குறிக்கோள் மற்றும் அதைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் உறுதியால் ஏற்பட்ட தவ வலிமை, யாக சாலை வைதீகாள் முதல் நளபாகம் செய்பவர்கள் வரை மாமாவின் சிரத்தையிலேயே நடக்க வேண்டுமென்ற பயம் கலந்த ஈடுபாட்டை ஊட்டிவிடும். அதையும்மீறி மாமாவின் அதீத கட்டுப்பாட்டிற்குக் குந்தகமாக சில விஷயங்கள் மாமாவின் கண்ணில் பட்டுவிடும். அப்படி அன்று ஏதோ ஒரு தவறு மாமாவின் கண்ணில் பட்டுவிட்டதை, நாயேனை மாமா உரிமையுடன் கடிந்து கொண்டபோது உணர்ந்தேன். உடனே நமஸ்கரித்து நாயேனின் புத்திக்கு என்ன தவறென்று தெரியவில்லையே என்றேன்.

புதிதாக ஒரு சமையல்காரரை நாயேன் ஏற்பாடு செய்திருந்ததுதான் தவறு என்று மாமா சுட்டிக் காட்டினார். “ இந்த அதிருத்ரம் தனிப்பட்ட ஒருவர் பணத்தில் நடப்பதல்ல. ஊரார் பணம். அந்த நினைப்பு எப்போதும் இருக்க வேண்டும். அலட்சியம் கூடாது. ஒரு பைசாவென்றாலும் அந்த நினைப்போடுதான் செலவு செய்ய வேண்டும்……ஒரு சமையல்காரர் அதிகமாக வைத்து செலவை இழுத்துவிட்டு விட்டாயேஎன்றபோது அந்த உத்தமமான குணம் வெளிப்படலானது. நாயேன் ஏற்கனவே இருந்த சமையல்காரர் தீடீரென்று ஊருக்குச் சென்றுவிட்டதால் இப்படி செய்யும்படியாயிற்று என்றபோது மாமா பனிபோல் உருகிவிட்டார்.

மேலும் நாயேன் இருக்கும் ஊரிலிருந்து இந்த அதிருத்ர ஜயந்தியில் கலந்து கொண்டவர்கள் இன்றளவும் ஸ்ரீ பெரியவாளிடமும், பிரம்மஸ்ரீ மாமாவிடமும் பக்தி கொண்டு பெரியவா ஆசியாலும், மாமாவின் தபஸின் காரணமாகவும் சகல க்ஷேமங்களுடனும் வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம்!

—  கருணை தொடர்ந்து பெருகும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

________________________________________________________________________________
Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (14-09-2010)

“I did come to the marriage!”

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

Periyava not only lived a very simple life, but also did not show that He was Sarveshwaran and hid His almighty powers. To the men who came to Him boasting about themselves, He showed His Sarveshwara roopam and for those who came with simple wishes, He never failed to bless them whatever they needed.

This is an incident witnessed by a devotee of Salem. When the devotee had come for Periyava darshan at Chennai – Mylapore, a lady had come with a strange request to Periyava and was also upset that Periyava did not fulfill them.

What was that strange request by the lady?

Similar to how we invite all our relatives and friends to our marriages, that lady wanted Sri Periyava to attend the marriage.

“Periyava should come for the marriage at our house”, the lady asked Periyava with all the bhakthi in her, without thinking, with just one thought in her mind about Periyava attending the marriage. It looked like, she had already requested Periyava multiple times to attend the marriage, and even the Srimatam staff had advised her against asking. Her bhakthi was like Kuchelan, who bought beaten rice wrapped in a torn cloth to Krishna.

After repeatedly asking Periyava, the Sarveshwaran agreed to attend the marriage. The lady was very happy and she did not have any other thought other than Periyava attending the marriage.

On the day of the marriage, all arrangement had been made to invite Periyava. Purna Kumbham had been arranged and the place was decorated with plantain trees and mango leaves. She was eagerly waiting at the door for Periyava.

Time passed and Periyava had not yet come. Muhurtham had almost come and she had to go in and take care of all the other arrangements. She was very unhappy and was unable to concentrate on the other pending works.

“Why didn’t you come for the marriage?” the lady asked Periyava, when the Salem devotee was present.

Everyone around, including the lady, were surprised, when Periyava replied that He had indeed come to the marriage.

When Periyava explains something very complex, He will have a mischievous smile on His face. Everybody were thinking that Periyava had just something casually.

The lady did not stop there and continued, “When did you come, I was standing at the entrance all the time to welcome you”.

“Did a cow come there, when you were waiting at the gate?” Periyava asked with his mischievous smile still on His face.

After thinking for some time, the lady replied, “Yes. There was a cow standing and somebody tried to push it away, since it was time for Periyava to come. The cow then started to eat the banana leaves from the tree that was tied at the entrance. Since the cow was causing more trouble, someone had pushed it and made sure it left the place”.

Periyava’s face was glowing with His smile. The devotees around understood the meaning of His smile. But the lady was still confused. Periyava turned around and moved his vastram. There were lines in Periyava’s back as if someone had hit Him with bark of the banana tree trunk. Tears rolled down the lady’s eyes. Periyava had accepted her invitation and came down as a cow to the wedding. Just like how Lord Shiva carried sand to build the temple and got hit by the king, Periyava gave a similar blessing and experience to this lady.

“Periyava thought and the mangoes came”

It was the month of Purattasi or Iyppasi. As usual, Periyava was giving darshan to the devotees. There were different varieties of fruits kept in plates before Him. A baby girl was walking around among the devotees. Periyava called the girl and asked her to pick any fruit that she wants.

There were different fruits, all belonging to that particular season, like pineapple, apple, grapes, and guava. The little girl said she wanted only mango, as if she wanted to test Periyava. Since it was not mango season, Periyava asked Shri Vedapuri to check if there were any dry mango in the kitchen and started to meditate.

At the same time, two people from Andhra came forward for Periyava darshan with a plate full of fruits including two mangoes. Periyava asked the girl to take the mangoes. Shri Vedapuri came back from the kitchen to say he could not find anything.

Periyava smiled and pointing at the mangoes at the child’s hands said, “Then how come the girl has the mangoes”.

“Periyava thought and the mangoes came”, answered Shri Vedapuri with tears in his eyes on seeing Periyava as Sarveshwaran. It was also a miracle that the people who came with the mangoes were nowhere to be seen afterwards.

It is true that, one who prays at Periyava’s Sannidhi, gets blessed.

It is true that whoever surrenders to Periyava will be blessed with all goodness in this world.

A drop of God’s Nectar:

The mouth has the most activities in our body. Since it has to do two things, talk and eat, we need to reduce both by half. When they say, “Vayitrai katti, Vaayai Katti”, they meant that both eating and talking should be limited. But we always end up doing the reverse. We are all the time eating something, including food, snacks and drinks. We need to reduce the food quantity, eat pure and natural food and try to fast regularly. Similarly, we need to stop talking unnecessarily and talk about God, or sing his praise. We could also go another step and maintain silence. Silence is not only good the person, but also to the society.

Shri Shri Shri Mahaperiyaval’s “always devoted” wonderful Nayanmar

(Contd.)

Every second, I learned something good and worthy from my Guru Pradosham Mama. I felt this during the Adi Rudram festival at Kanchipuram. One day during the Adi Rudram, Pradosham Mama, after going to the yagasalai and darshan of the Lord, went to the kitchen and the store room to check if everything is in order. Pradosham Mama’s best intentions and penance gave him the power to make sure everything was proper at the event. Thanks to Pradosham Mama’s strictness, the Vaidheekas and the cook would also make sure everything is done in the proper way. In spite of this there will be something that will catch Pradosham Mama’s eye. On this day, I realized, something has happened by looking at Pradosham Mama’s reaction. I request Mama to explain, since I was unable to understand what had gone wrong.

Mama told me that, it was the new cook, I had arranged. He said that the event was celebrated with the money pooled from different people and not just one sponsor. He also said that we need to make sure we do not spend anything extra that is not really needed. You should not increase our spending by appointing an extra cook. But Pradosham Mama calmed down on hearing that, this cook was a replacement for the original cook, who was unable to help in this event.

To this day, all the devotees who had participated in the Adi Rudram celebrations have been blessed by Periyava and Pradosham Mama and have been living a happy and prosperous life.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)


 

 

 

 

 



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Jaya Jaya Sankara, Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha Prabho . Janakiraman. Nagapattinam

  2. Heart melting accounts. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

Leave a Reply

%d bloggers like this: