Experience with Mahaperiyava by Elanthai Sri Ramaswamy

இதுதான் நான் தமிழில் எழுதும் முதல் போஸ்ட்.

தமிழ் புலவருக்கு தமிழில் முகவுரை எழுதுவதுதான் சரி….இலந்தை ஸ்ரீ ராமஸ்வாமி அவர்களை எனக்கு ஓர் 4 வருடங்களாக பரிச்சயம். என் நண்பரின் தந்தை என்ற முறையிலும் தமிழ் புலவர் என்ற முறையிலும் இவர் மேல் மரியாதை – இவருடைய வார்த்தை ஜாலத்தில் நான் மயங்கியதுண்டு. சரஸ்வதி கடாக்ஷம் பரிபூர்ணம்! சமீபத்தில் இவர் வாராஹி அம்மன் மீது எழுதிய அந்தாதி இதற்கு ஒரு அத்தாட்சி.. கட்டளை கலித்துறை என்ற ஒரு கடினமான பாதையில் வாராஹியை ஸ்துதித்தது மட்டுமல்லாமல் அவளின் மூல மந்த்ரத்தை ஒளித்து வைத்து எழுதியது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு விஷயம். நான் மட்டுமல்லாது அன்று அதை கேட்ட அனைவரும் தங்களை மறந்தனர். அதை படித்தபின் எனக்கு வராஹி மந்திரத்தின்மேல் ஒரு தனி மோகம் என்றே சொல்லலாம். இந்து ஸமயத்தில் உள்ள பல தேவதைகளை பற்றி இவர் புத்தகங்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் ஸ்ரீ லலிதா தேவி சம்பந்தமான ஒரு நாட்டிய நாடகம் ஒன்றை எழுதியுள்ளார்.  பொதுவாகவே எழுத்தாளர்கள் உன்னிப்பாக எதையும் பார்க்கும் குணம் படைத்தவர்கள். இவர் அதிலும் ஒரு படி மேல். அலாஸ்கா பற்றி எழுதிய இவர் எழுதிய ஒரு புத்தகமே சாட்சி!

இவருக்கு முன்னால் நான் பேட்டி காண விழைந்தது இவருடைய மனைவியை. மாமிக்கு மஹாபெரியவாளிடம் பல வருடங்களாக பக்தி – நினைத்த மாத்திரத்தில் காஞ்சிபுரம் சென்று பெரியவாளை தரிசனம் செய்த ஒரு பாக்கியசாலி. துரதிஷ்டவசமாக 2 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அனுஷ புண்ய தினத்தன்று மஹா பெரியவாளின் பாதங்களை அடைந்தார். இன்று வரை மாமியை பேட்டி காணாதது எனக்கு ஒரு பெரிய மனக்குறை.

ஒவ்வொறு முறை இவரை சந்திக்கும் போது நான் கேட்கும் முதல் கேள்வி “மாமா, எப்போ interview தருவேள்?”. அவருடைய உடனடி பதில் “உங்களுக்கு எப்போ சௌகரியமோ அப்போது!”. கடைசியாக இந்த தீபாவளி திருநாளன்று அது நிறைவேறியது. அன்று நான் அவர் வீட்டிற்கு போக திட்டமே இல்லை…கடைசி நிமிஷத்தில் முடிவானது….எல்லாமே பெரியவாளின் சித்தம்….

அவனருளாளே அவன் தாள் வணங்கி!

On a fine auspicious Deepawali day, I had a great opportunity to interview Sri Ramaswamy, a noted Tamil scholar, poet. He is known to me for the past few years. Every time I meet him I will ask for an interview, he will immediately say ok but never did that. In fact, I wanted to interview his wife, who has been devoted to Mahaperiyava and had so many interactions for several years. I told Mami once that I will interview her but Mami passed away suddenly 2 years ago on an auspicious Anusham day. Till now, I regret missing a great opportunity.

I intend to write separately about his work on “Vaarahi andhadhi” – one of the most difficult (at least to me!) works with beautiful choices of words and so many secrets embedded in that!

Thanks to mama who covered some of her experiences along with his experiences with Mahaswami. I know their family for the past few years and I can say that the entire family is so blessed by Mahaperiyava.

Hara Hara Sankara Jaya Jaya Sankara!Categories: Devotee Experiences, Periyava TV

7 replies

  1. Thank yu Mahesh. Ilandhai is my close friend. His betti is excellent. Interesting. thanks Kaviyogi Vedham

  2. Do you have a link to Ilandhai sir’s kavidhais?

  3. அன்புக் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்களின் நேர்காணலில் காஞ்சிப் பெரியவரைப் பற்றித் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விதமும், சங்கரர் மும்மணிக் கோவை பற்றிய விளக்கமும் அருமை. மகான்களின் தரிசனம் புண்ணியம்தான். சிறுவயதில் சிருங்கேரி ஆசார்யாளை தரிசனம் செய்தது பற்றியும் கூறினார்கள். அதில் அவர்கள் கிரீடம் அணிந்துகொண்டு வருவார்கள் என்றும், அப்படிப் பார்த்த நினைவு இருக்கிறது என்றும் கூறினார். சிருங்கேரி ஆச்சார்யார்கள் எப்போதும் கிரீடம் அணிந்து கொள்வதில்லை. நவராத்திரி ஒன்பது தினங்கள் மாத்திரம், அதுவும் அன்று இரவு சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்குப் பிறகு நடக்கும் “நவராத்ரி தர்பார்” நிகழ்ச்சியின் பொழுது, ஸ்ரீ சாரதாம்பாள் சந்நிதிக்கு நேராக (வெளியூர்களில் யாத்திரை சமயமானால் பூஜா மண்டபத்திற்கு நேர் எதிரில் அமர்ந்தபடி ) வெளியில் ராஜவுடையும், உள்ளே காவி யுடையும், கையில் ஜெபமாலையும், நெற்றியில் கும்குமமும் தரித்து, ஜெபம் சொல்லிய படியே அமர்ந்திருப்பார்கள். அதுசமயம் ஸ்ரீ தேவி மகத்மிய பாராயணம் நடைபெறும். அது நிறைவு பெற்றவுடன் சதுர்வேத பாராயணம், பஞ்சாங்கப் படனம், சங்கீத உபசாரம், மேளவாத்தியம் முழங்க ஸ்ரீ ஆசார்யாள் நேராக அம்பாள் சந்நிதிக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு, ராஜ உடைகளைக் களைந்து விட்டு வெளியில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த வைபவம் சிருங்கேரி ஸ்ரீ சாராதா பீடத்தின் பன்னிரெண்டாவது ஆசார்யாளாக அலங்கரித்து, அருளாச்சி செய்த ஸ்ரீ வித்யாரண்யர் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. பூஜ்யஸ்ரீ வித்யாரண்யாரின் அதிஷ்டானம் ஸ்ரிருங்கேரியில் ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது. இந்த வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் வாய்பை ஏற்படுத்திய கவிமாமணி இலந்தையாரின் நேர்காணலைப் பதிவு செய்த அன்பருக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ……அன்பன், மீ.விசுவநாதன் 20.10.2017 07.25 am

  4. Great, knowing Ilandhaiyar to some extent.

  5. Thanks Sri.Mahesh.
    Very nice to hear my friend’s (Srinivasa Raghavan, also like my younger brother) father sharing his experience with Maha Periyava… Jaya Jaya Sankara Hara Hara Sankara…

  6. When is Mettur Periyava’s Aaradhana. Would be grateful if you could post the details

  7. Your Tamil is good.Continue writing.

Leave a Reply

%d bloggers like this: