Many Jaya Jaya Sankara Hara Sankara to Smt. Sunitha Madhavan and Smt. Abarajitha Anbu for the share. She thinks the artist is Manian. Nevertheless we have another priceless picture to treasure on this auspicious day.
Enjoy the poem by Smt. Jayanthi Ramki as well. Rama Rama
அகண்டதோர் தீபமேற்றி
அகிலமெலாம் ஒளியூட்டி
அறியாமையிருள் அகற்றும்
அகிலகுருவே போற்றி!மருண்டோர் மனம்தேற்றி
மாதவமெனும் நெய்யூற்றி
மகிழ்ச்சியெனும் ஜோதியேற்றும்
மஹாகுருவே போற்றி!
அகிலமெலாம் ஒளியூட்டி
அறியாமையிருள் அகற்றும்
அகிலகுருவே போற்றி!மருண்டோர் மனம்தேற்றி
மாதவமெனும் நெய்யூற்றி
மகிழ்ச்சியெனும் ஜோதியேற்றும்
மஹாகுருவே போற்றி!
திரண்டோர் திறமேற்றி
திரியாக உள்ளம்மாற்றி
திகட்டாத ஞானமேற்றும்
திவ்யகுருவே போற்றி!
ஹரஹர சங்கர எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
ஜெயஜெய சங்கர என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!
-ஜெயந்தி ராம்கி
Categories: Photos
Beautiful
Wonderful gift on Deepavali day!