Sri Periyava Mahimai Newsletter-May 28 2010

Jaya Jaya Sankara Hara Hara Sankara – This newsletter is all about Brahmasri Pradosha Mama and his out and out Bhakthi towards Maha Periyava. On many occasions it seems that Sri Periyava has talked through his great Bhaktha and let others know about it as well.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (28-5-2010)

வேதநாயகராம் சாட்சாத் பரமேஸ்வர்ரே தன் அபாரக் கருணையினால் சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் எளிய அருள் திரு உருவோடு நமக்கெல்லாம் அருளாசியினைப் பொழிகின்றார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் பக்தியில் திளைத்தவர்கள் ஏராளம். அதில் கண்ட ருசி, ஆனந்தம், ஈர்ப்பு இவைகளை அனுபவித்தவர்களுக்கே அதன் உன்னதம் புரியும். ஸ்ரீ மஹா பெரியவாளெனும் ஈஸ்வர ரூபம் பக்தர்களை இழுத்தது ஒருபுறமிருக்க அந்த மகா புண்ணியரே சில பக்தர்களிடம் பிரத்யேகமானதொரு வாஞ்சையைக் காட்டுவதுபோல அந்த பக்தர்களுக்கு அருளியுள்ள அனுபவங்கள் உண்டு.

அப்படிப்பட்ட பக்தர்களுக்குள் சற்றே விசேஷ அம்சங்களோடு திகழ்பவரான பிரம்மஸ்ரீ பிரதோஷ சிவநாயன்மாரின் திவ்ய சரிதத்தில் ஸ்ரீ பெரியவாளின் மேன்மையான அனுக்ரஹங்கள் அமைகின்றன.

பிரதோஷம் என்று வரும்? பரமேஸ்வரப் பெரியவாளின் தரிசனம் என்று கிட்டும் என பசுபதியாம் பெரியவாளைத் தேடும் கன்று போல இந்த பக்தர் ஏங்கிக் கொண்டிருக்கையில், கன்றைத் தேடி ஓடிவரும் தாய்ப்பசுவால் அந்த மகாஞானி இவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் அதிசயம் நடக்கும்.

ஒரு சமயம் இந்த அதீத பக்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. உடல் நலிவுற்று ஸ்ரீ பெரியவா அருளால் குணமானபின் சென்னையில் இந்திரா பவன் திரு. நாராயண ஐயர் வீட்டில் இவர் தங்கியிருந்தார். அந்த சமயம் ஒரு பிரதோஷ தினம் வந்தது.

அன்றோ பந்த் வேறு! திரு. நாரயண ஐயர் அன்று காஞ்சிக்குக் கிளம்பினார். இதை பிரதோஷ பக்தரிடம் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் இந்த உடல் நலிவுற்ற நிலையில் தானும் வருவதாகக் கூறிவிடுவாரென்று பயந்தவராய் இவர்மட்டும் கிளம்பிவிட்டார். இதைப் பிறகு தெரிந்துக் கொண்ட பிரதோஷ பக்தருக்கு ஆதங்கம்!

இங்கே பக்தர் ஏங்கித் தவிக்க அங்கே  காஞ்சியில் மகானின் தரிசனம் செய்தபோது நாராயண ஐயரிடம் அந்த காருண்யமூர்த்தியும் தான் ஏங்கித் தவிப்பதுபோல “எங்கே அவர் வரலையா?” என்று எடுத்த எடுப்பிலேயே தான் எதிர்பார்த்து நிற்பதை வெளிப்படுத்தினார்.

போனவருக்குக் கொஞ்சமும் இதை எதிர்பாராததால் ஸ்ரீ பெரியவாளின் ஆவல் திகைக்க வைத்தது.

அதோடு நில்லாமல் “நீ ஏன் வந்தே?” என்று ஸ்ரீ பெரியவா தன் ஆத்மார்த்த பக்தரை அவர் ஏன் அழைத்து வரவில்லை என்று கடிந்து கொள்வதுபோல் கேட்க, ஐயர் வெலவெலத்துப் போய் சென்னைக்கு போன் செய்து பிரதோஷ பக்தரை வரச் சொல்ல முனைந்துள்ளார்.

ஆனால் இங்கோ இந்த பக்தர் பிரதோஷ தரிசனம் காணாமல் இந்த உயிர் என்ன முக்கியம் என்ற அதீத உணர்வோடு பாலாஜி என்ற அன்பரிடம் கேட்க அவரும் பந்த் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு காரை ஏற்பாடு செய்து காஞ்சிக்கு பிரதோஷ பக்தரை அழைத்து வந்துவிட்டார்.

இத்தகவலை போன்மூலம் அறிந்த நாராயண ஐயருக்கு ஆச்சர்யமாகி விட்டது. மேலும் இதில் ஆபூர்வம் என்னவென்றால் பிரதோஷ பக்தர் இப்படிக் கிளம்பி வரும் தகவலை சொன்னவுடன் இங்கே சகலலோக இயக்கங்களையும் நடத்தும் பெருங்கருணை தெய்வம் 15 நிமிடத்திற்கு ஒரு முறை “வந்துட்டாரா? வந்துட்டாரா?” என்று பக்தரின் வரவை அத்தனை ஆவலோடு எதிர்நோக்கியதுதான்.

இரவு எட்டு மணியளவில் பிரதோஷ பக்தர் எனும் கன்று வந்தாயிற்று.

“வரமாட்டார்னு சொன்னயே இதோ வந்துட்டாரே?” என்று பிரதோஷ சிவனாரான ஸ்ரீ பெரியவா பிரதோஷ பக்தரைக் கண்ட ஆனந்தத்தில் நாராயண ஐயரைக் கேட்டுள்ளார்.

இப்பேற்பட்ட விசேஷமான பேரருள் வேறு யாருக்குக் கிட்டும்! இந்த சம்பவம் ஒன்று மட்டுமல்ல, இதேபோல பண்டர்பூரிலும் ஒரு பிரதோஷத்தின்போது நடந்துள்ளது.

“நல்லவேளை வந்துட்டீங்க….பெரியவா காலையிலிருந்தே வந்தாச்சா வந்தாச்சான்னு கேட்டுண்டே இருந்தார்” என்று பூர்வாசிரமத்தில் திருமேட்டூர் ராஜகோபால் என்பவர் கேட்டுள்ளார். அங்கு பக்தர் ஸ்நானத்திற்குப் போனபோதும் ஸ்ரீ பெரியவா தவிப்போடு பக்தர் ஏன் இன்னும் தரிசிக்க வரவில்லை என பரிதவிப்பதுபோல் காட்டியுள்ளார்.

ஸ்ரீ பெரியவா, உகார் கேம்பின்போதும் திரு குமரேசனிடம் இந்த பக்தரை “வந்தாச்சா வந்தாச்சா” என்று கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்படி ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கும், ராமபக்த அனுமனுக்குமான பரஸ்பர வாஞ்சையைப் போல, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் பிரம்மஸ்ரீ பிரதோஷ சிவநாயன்மாருக்கும் ஒரு உன்னதமான ஐக்கிய நிலையை நாம் காண முடிகிறது.

லௌகீக பந்தங்களிலிருந்து ஞானம் ‘தானே ஸ்புரிக்கும்’ என்று பிரதோஷ பக்தரை முதல் தரிசனத்தின்போதே ஸ்ரீ பெரியவா அனுக்ரஹித்து ஈர்த்தருளிக் கொண்டுவிட்டார். பிரதோஷ தரிசனம் என்ற ருசியை பக்தருக்கு ஊட்டி அந்த தரிசனங்களின் ஒவ்வொரு முறையிலும் வெவ்வேறு பரமேஸ்வர ரூபமாக பக்தருக்கு தான் சாட்சாத் பரமேஸ்வரர் என்பதை பூர்ணமாக உணர்த்தி அருளியுள்ளார்.

உனையன்றி வேறு தெய்வமறியேன் என்று நடமாடும் ஆனந்த நடராஜ மூர்த்தியாய் தனக்கு அடையாளம் காட்டி ஆட்கொண்ட பெருந்தெய்வம் ஸ்ரீ பெரியவாளை, பக்தர் சதாசர்வ காலமும் பக்தி செய்து தன் உடல், பொருள், உடமை அனைத்தையும் பெருமானுக்கே அர்ப்பணித்து, தன் மனம் வாக்கு எதிலும் சர்வகாலமும் ஸ்ரீ பெரியவா பக்தி ஒன்றையே அனுபவித்து ஆனந்திக்கும் பெரும்பேறு அடைந்தவராய் அரிய நிலை எய்தினார்.

ஒரு தாயினும் பரிவோடு “உன்னை யாரு வைச்சுக்கப்போறா?” என்று பக்தரைக் கேட்ட மகான் காஞ்சிபுரத்தில் இவருக்காக ஒரு இல்லம் ஈந்திட்டபோதுதான் அதன் ரகசியம் மெல்லப் புலப்படலானது. இந்த இல்லத்தில் ஒரு பகுதியை இவர் பேரிலே எழுதி வைச்சுடு என்று கூறியதோடு மற்றொரு பகுதியை “என்பேரிலே எழுதி வைச்சுடு” என்று அருள்வாக்கு பொழிந்ததன் உள்நோக்கம் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

இப்படி என் பேரிலே எழுதி வைச்சுடு  என்று தானே வலியக் கேட்ட இல்லத்தில் தன் திருக்கோயில் எழவேண்டுமென்று ஸ்ரீ பெரியவாளே போட்ட மாஸ்டர் பிளான் என்பது பிரதோஷ சிவநாயன்மாருக்கு ஸ்புரித்துவிட்டது.

இதுதான் தன்னுடைய இடம் என்று உரிமையை நிலை நிறுத்துவது போல ஸ்ரீ பெரியவா ஒரு முறையல்ல மூன்று முறை பக்தரின் இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளார். பிற்காலத்தில் தான் கருவறை காணும் இடத்திற்கே ஸ்ரீ பெரியவா வந்து அமர்ந்தருளியுள்ளார்.

ஓருமுறை பூர்வாஸ்ரம ஸ்ரீ கண்டன், ஸ்ரீ சேதுராம சாஸ்திரிகள், பிரம்மஸ்ரீ வேதபுரி மாமா மற்றும் தாமரபாக்கம் ஆகியோரை மங்கள திரவியங்களோடு இந்த இல்லத்திற்கு அனுப்பி இங்கே தீப பூஜையை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே ஆரம்பித்து வைப்பது போல அனுக்ரஹித்துள்ளார்.

எந்த சாமன்ய பக்தருக்கு இப்பேற்பட்ட அனுக்ரஹம் கிடைக்கும்?

சதாசர்வகாலமும் ஸ்ரீ பெரியவாளைக் கொண்டாடுவதே தன் பிறவியின் பெரும்பலன் என்ற நினைப்போடு தன் இல்லத்திலேயே  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபிரபு குடிகொண்டு அருளும் திருக்கோயில் ஒன்றினைக் காணும் பெரும்பாக்யம் பிரதோஷ சிவநாயன்மாருக்கு மட்டுமேத் தனித்துவ அனுக்ரஹமாக வந்தடைந்துள்ளது.

இது ஸ்ரீ பெரியவாளே தானே தனக்கு உண்டாக்கிக் கொண்டதுபோலத்தான் “இது என் இடம்” என்ற உரிமையோடு ஸ்ரீ பெரியவாளின் திருவாக்கும் வெளிப்பட்டுள்ளது. இக்கோயிலின் விசேஷம் இப்படியிருக்க 64ம் நாயன்மாரென்று உயர்வு பெற்று, ‘தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை’ என்று மந்திர உச்சாடணத்தால் தனக்குள்ளே ஸ்ரீ பெரியவாளையும் ஸ்ரீ பெரியவாளுள் தானுமாய் ஐக்கியம் கண்ட மேன்மையை பிரதோஷ சிவநாயன்மார் அடைந்தார்.

ஆக பிரம்மஸ்ரீ பிரதோஷ சிவநாயன்மாரின் மனதில் ஸ்புரிப்பது எதுவானாலும் அது மஹாபிரபுவாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மன ஓட்டமே என்பதாகிப் போனது. இதை ஒரு அதிருத்ர சமயத்திலும், வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும்  சுற்றி உள்ள பக்தர்கள் அனுபவித்த சம்பவங்கள் பல உண்டு. இங்கே பிரதோஷ நாயன்மார் யாரிடமோ சொன்ன கட்டளையை “நான் தான் சொன்னேன்” என்று  ஸ்ரீ பெரியவா சொல்லியுள்ளவை அனேகம்.

ஒரு வைணவ அன்பரை இவர் துவாதச நாமம் தரிக்கச் சொல்ல ஸ்ரீ பெரியவா எங்கோ ஆந்திரா மாநிலத்தில் தரிசிக்கச் சென்றபோது “ உன்னை நான் தானே துவாதச நாமம் போட்டுக் கொள்ளச் சொன்னேன்” என்றிருக்கிறார். பிரம்மஸ்ரீ வேதபுரி அவர்களின் சஷ்டிஆப்த பூர்த்திக்கு நாயன்மார் ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு செய்ததை “உன் சஷ்டி ஆப்த பூர்த்திக்கு நான்தானே மாண்டலின் ஏற்பாடு பண்ணினேன்” என்றாராம் பெரியவா. அதுபோல் அன்பர் ஒருவரை பிரதோஷ நாயன்மார் அதிருத்ரம் செய்ய அன்புக் கட்டளையிட அவரும் நடத்தி முடித்துத் தரிசிக்கப் போனபோது  “இவர் படித்த பழம்…..நான் தான் இவரை அதிருத்ரம் செய்யச் சொல்லி சிரமத்தைக் கொடுத்துட்டேன்” என்று உருக்கத்தோடு ஸ்ரீ பெரியவா அருளினாராம்.

இப்படித் தன்னையே தன் பக்தருக்குத் தந்து அவருள் இருந்து எல்லா இயக்கத்தையும் அருளுவதாலேயே, பிரம்மஸ்ரீ பிரதோஷ சிவநாயன்மாரின் இல்லக்கோயிலில் கொண்டாடப்படும் ஸ்ரீ பெரியவா வைபவங்கள் யாவும் ஒரு பிரத்யேகமான விசேஷத்தைப் பெற்றவைகளாக அமைந்துள்ளன.

ஒருமுறை ஒரு அன்பரிடம் பிரதோஷ நாயனார் “ இங்கே பெரியவா அதிருத்ரம் நடக்கிறதுக்கும் மற்ற இடத்தில் நடக்கிறதுக்கும் வித்யாசம் என்ன சொல்லு” என்று கேட்டுவிட்டு தக்க பதில் வராததால், தானே அதற்கு பதிலாக,

“இங்கே பெரியவாளே தானே தனக்கு ஏற்படுத்திக் கொண்டதுபோலதானே அத்தனையும் அமைஞ்சிருக்கு…..இது என் இடம்னு அவாளே சொல்லி, தீபபூஜையை அவாளே தொடங்கி வைத்து, இந்த பங்காரு தோட்டத்திலே உள்ளவா எல்லாம் இதிலே கலந்துக்கணும்னு தானே சொல்லியிருக்காளே. அதனாலே மத்த இடங்களிலே பக்தாளா ஆசைப்பட்டு பண்ற வைபவமா இருக்கிறது. இந்தத் திருக்கோயில்லே மட்டும் ஸ்ரீ பெரியவாளே தானே தன் பெருங்கருணயாலே இந்த இடத்துக்கு ஒரு மகத்துவத்தையும் கொடுத்து பூர்ணமாக ஏற்றுக் கொள்வதுபோல் அருளுவதுதான் இந்த திருக்கோயிலின் எல்லா வைபவங்களோட விசேஷம் என்று நாயன்மார் விளக்கினார். அது எத்தனை சத்தியவாக்கு என்பதை பலர் உணர்ந்துள்ளனர்.

“இவர் ஒரு குட்டி மடாதிபதி மாதிரி இருக்கார். இவரைச் சுற்றி நிறைய சிஷ்யர்கள்” என்று ஸ்ரீ பெரியவாளே பிரதோஷ சிவநாயன்மாரின் உயர்வினை சிலாகித்துள்ளார். அந்த சிஷ்ய பக்தர்களால் நாடெங்கும் சிறக்கும் ஸ்ரீ பெரியவா வைபவங்களுக்கு இக்கோயிலே அனுக்ரஹ பொக்கிஷம்!

அதுபோலவே, ஓரிக்கை பெருங்கோயிலுக்காக தன் கடும் விரதங்கள் மூலமாக அதன் உயர்விற்கு வித்திட்ட மகாபுருஷரான பிரம்மஸ்ரீ சிவநாயன்மார் இந்த உலகில் சூரிய, சந்திரர்கள் இருக்கும்வரை கைலாசபதியாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் வைபவ உற்சவங்கள் திருக்கோயிலில்  இடைவிடாமல் கொண்டாடப்பட்டு அதுவே பெருங்கோயிலின் சத்திய சாஸ்வத நிலைக்கும் ஊட்டமாக அமைய வேண்டும் என்று உறுதியாக எண்ணினார்.

அந்த பிரதோஷ சிவநாயன்மாருள் ஐக்கியமாகிய ஸ்ரீ பெரியவாளின் திருவாக்காகவே பக்தர்கள் இதை அனுசரிப்பார்கள் என்பது சத்தியமே!

இப்பேற்பட்ட ஈடுபாடு அனைவருக்கும் சகல சௌபாக்யத்தையும் சர்வமங்களங்களயும் அருளுவது திண்ணம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மீளா அடிமையாம் அற்புத நாயன்மார்                   (தொடர்ச்சி)

பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவின் வாக்பலத்தால், தபஸால் அதிருத்ரம் இனிதே நிறைவேறியது. பிரம்மஸ்ரீ மாமாவின் தபோ பலத்திற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு. ஒரு முறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஜயந்தி சமயம். நாயேன் அதற்குத் தேவையான பணம் இல்லையே என்று கவலைப்பட்டு நாயேனின் கிரஹத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் (பூஜை) முன்பு கண்ணீர் மல்க அழுதேன்.

ஜயந்திக்கு ஓரிரு நாட்களுக்கு முன் பிரம்ம ஸ்ரீ பட்டு சாஸ்திரிகளின் (பிரம்மஸ்ரீ பிரதோஷ மாமா ஆத்து சாஸ்திரிகள்) இரண்டாவது மகன் ஸ்ரீ பாஸ்கர் தான் ஜயந்திக்கு வந்ததாகச் சொல்லி ஸ்ரீ பிரதோஷம் மாமாவின் மாப்பிள்ளை கொடுக்கச் சொன்னதாக ஓர் கவர் கொடுத்தார். அது என்னவாயிருக்கும் என்ற எண்ணத்துடன் நாயேன் கவரைப் பிரித்துப் பார்த்தால் ரூ. 10,000 க்கும் அதிகமாக நாயேன் பெயருக்கு ஓர் DD இருந்தது. ஸ்ரீ மஹா பெரியவா ஜயந்திக்கு பணம் வந்துவிட்டதே  என்ற ஆனந்தத்துடன் நாயேன் அந்தக் கவரில் இருந்த ஓர் கடிதத்தை எடுத்துப் படித்தேன். பிரம்மஸ்ரீ மாமாவின் மாப்பிள்ளை இவ்வாறு எழுதியிருந்தார். “சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் சென்றிருந்தேன். ஸ்ரீ பிரதோஷம் மாமா ஸ்ரீ பெரியவாளை (மூலஸ்தானம்) ப்ரதக்ஷிணம் செய்துக் கொண்டிருந்தார். தீடீரென்று நடுவில் நிறுத்தி நாயேனின் ஊரைச் சொல்லி குழந்தை அங்கு ஜயந்தி பண்ணுகிறான். அவன் பணத்திற்காக என்ன கவலைப்படுகிறானோ? எனக்கூறி உடனடியாக ஸ்ரீ.. மாப்பிள்ளையை DD எடுத்து (ரூ.10,000 க்கும் மேல்) அனுப்பச் சொன்னார். நான் ஆபிஸிலிருந்து காலையிலேயே DD எடுத்து பாஸ்கரனிடம் அவசரமாக அனுப்பியுள்ளேன் பெற்றுக்கொள்ளவும் என எழுதியிருந்தார்.

நாயேன் தன்னுடைய ஊரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் முன்பு பணம் வேண்டும் என்று அழுத நேரமும், பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் ப்ரதக்ஷிணத்தின் நடுவில் உடனே பணம் அனுப்பு என்று சொன்ன நேரமும் ஒன்றாக இருந்தது. சுமார் 300 கி..மீ. தள்ளி செய்த ப்ரார்த்தனை ஸ்ரீ பெரியவா பிரம்மஸ்ரீ மாமாவின் மனதில் எப்படி ஸ்புரிக்கச் செய்தார் என்ற ரகசியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கும் பிரம்மஸ்ரீ மாமாவுக்கும் மட்டுமே புரியும்.

‘—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

__________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (28-05-2010)

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

There are many devotees, who have been blessed my Mahaperiyava. Only those who have realized the greatness of Mahaperiyava will be able to fully understand and comprehend this. Many devotees have been pulled by His kindness, but there are few blessed devotees to whom, He himself goes to bless them.

One of such devotee was Brahmashree Pradosha Siva Nayanmar. We see Periyava’s special Anugraha to Pradhosham Mama.

When will Pradhosham come? Brahmashree Mama used to wait for Pradosha Periyava darshan like a calf waiting for its mother cow and Periyava like a mother cow will be waiting for the calf’s arrival.

Once, Brahmashree Mama had a heart attack and with Periyava’s blessing was recovering at Indira Bhavan Shri Narayana Iyer’s home at Chennai. It was a Pradhosham day during that period.

There was a bandh being observed on that day. Shri Narayana Iyer was getting ready to go to Kanchipuram. He did not tell this travel plan to Pradhosham Mama, otherwise, Mama also will start for Kanchipuram even though he was still recovering. Pradosham Mama later regretted later, when he came to know about this.

At Chennai, Pradhosham Mama was regretting for not being able to visit Periyava. At Kanchipuram, Periyava expecting Pradosham Mama, asked Narayana Iyer, “Did he not come”?  Narayana Iyer was surprised to hear this from Periyava.

Periyava continued, “Why did you come?” Narayana Iyer’s face drained. He wanted to call Chennai and ask Pradosham Mama to come to Kanchipuram.

Pradosham Mama did not want to miss the darshan of Periyava and with the help of a friend Balaji started to Kanchipuram in a car ignoring the Bandh.

Narayana Iyer was surprised to hear this. Also he was more surprised to hear Periyava asking, every fifteen minutes, if Brahmashree Mama has arrived. Around 8 PM that day, Brahmashree Mama reached Kanchipuram. Periyava looked at Narayan Iyer and asked, “You said he will not come. See he has come now”.

Who else has this blessings of Periyava? There is one more similar incident during the Pradhosham at Pandharpur.

Shri Mettur Rajagopal told Brahmashree Mama, “It is good that you came, Periyava has been asking for you from morning”. When Mama had gone to bathe, Periyava had been frantically looking for Mama to come. A similar incident also happened during Ugar camp, where Periyava was constantly asking Shri Kumaresan if Brahmashree Mama had come.

This actually showed that the relationship between Periyava and Brahmashree Mama was similar to Lord Rama and Hanuman.

In his first darshan of Mahaperiyava, Brahmashree Mama realized that even though he is in the worldly or materialistic life, he will still be blessed with the knowledge. By showing him the Pradosha darshan, Periyava has let Brahmashree Mama realize that He is none other than Sarveshwaran.

Brahmashree Mama has given everything including his body, belongings to Periyava. He has kept uttering Periyava’s name all the time and devoted all his time for Sarveshwaran and enjoyed the bhakti throughout his life.

Periyava who had asked Mama, “Who is going to take care of you?” also registered a house in Kanchipuram for Mama. He registered one part of the house in Mama’s name and the other part under His name. Pradhosham Mama understood that Periyava wanted a temple in that place. Periyava visited the place three times and also sat at the place which was going to be the Karphagraham of the temple.

Once Periyava sent Poorvashrama Srikandan, Shri Sethurama Shastrigal, Brahmshree Vedapuri Mama and Thamarapakkam to the house along with Pooja articles to perform deepa Pooja, indirectly blessing the place.

Which devotee is lucky enough like Brahmashree Mama? For someone who wanted to spend his life with Periyava, He itself came to the devotee’s residence and blessed a temple there. Only Pradhosham Siva Nayanmar Brahmashree Mama had this blessing.

This temple was blessed by Periyava itself when He said, “This is my place”. By making Pradhosham Mama, the 64th Nayanmar, Periyava has proved “By giving yourself to Me, You have Me” and made Pradhosham Mama realize that he has become one with Periyava.

Whatever thoughts that come in Brahmashree Pradosha Mama’s mind, they were all Mahaperiyava’s. There are many instances, including one during a Maharudram, were other devotees have realized this. Many a times, whatever Pradhosham Mama had told, Periyava had said, “I told the same”.

Pradhosha Mama had asked one Vaishanvaite to wear Dwadasa Namam and when the devotee went to Andhra for darshan of Periyava, He too said the same. When Pradhosham Mama had arranged for a concert for Shashtiabpoorthy of Brahmashree Vedapuri, Periyava had said, “It was Me who arranged for the Mandolin in your Shashtiabpoorthy”. Similarly, when Pradhosham Mama had asked a devotee to perform Adirudram and when the devotee took the prasadam to Periyava, He said, “I had asked him to do Adirudram”.

Periyava had blessed Pradhosham Mama and hence all the Periyava celebrations that happens in the home are always special.

Once Pradhosham Mama had asked a devotee, “Do you know the difference between the Adirudram here and in all the other places that it is conducted”? Since he did not receive any response, he continued, “In this place, everything is as if Periyava is conducting, He had said that this is His place, performed the deepam (lamp) Pooja, and wanted everyone here to participate. In other places, it happens due to the wishes of the devotees and here it is Periyava himself conducts”. A lot of devotees have attended the Adirudram and realized this.

Periyava had once said, “He is like a Matathipathy himself. He has lots of sishyaas around him always”. It is his blessings that has helped these sishyaas to perform all the different Periyava celebrations around the world.

Similarly, Pradhosham Mama had undergone severe penance to build the Orikkai temple. He strongly believed that until the sun and moon exists, Periyava Jayanthi will be celebrated and this will help elevate the temple. All the devotees will take this a Periyava’s words said by Pradhosham Siva Nayanmar and bless them with all comfort and goodness.

Shri Shri Shri Mahaperiyaval’s “always devoted” wonderful Nayanmar (Contd.)

With the help of Brahmashree Mama’s penance, Adirudram was performed satisfactorily. There are multiple other examples of the penance strength of Pradhosham Mama. Once, I was crying at Mama’s house, in front of Mahaperiyava (Pooja Room), that I did not have money for Periyava Jayanthi.

One or two days before the Jayanthi, Shree Bhaskar, second son of Brahmashree Pattu Sastrigal came home and said that, Pradhosham Mama’s son-in-law had asked me to give this envelope to you. When I opened it I saw a Demand Draft for more than Rs. 10,000/-. There was also a letter from son in law along with it. It read, “Few days before, when I went to Kanchipuram, Pradhosham Mama was circumambulating Periyava (Moolasthanam at Brindavan). He stopped suddenly, and told my name and place and said that he might be worried that he does not have money and asked me to immediately send money. I have taken the DD in the morning and sending through Bhaskar. Please accept this.”

It was the same time, when I cried in front of Periyava, and when Brahmashree Mama asked to send the money to me. Only Periyava and Brahmashree Mama can understand how my prayers here at my house was heard my Pradhosham Mama 300 Km away.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)




Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. என்னையும் ஆட்கொண்டு அருள் புரியவேண்டும் சங்கரா ஸர்வேஸ்வரா ஸர்வஞா.

Leave a Reply

%d bloggers like this: