மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்ற இடத்தில், பக்தர்களுக்கு அருள்புரிந்த மஹா பெரியவா, பண்டரிபுரம் நோக்கி கிளம்பினார்.
150 கி. மீ., சதாரா விலிருந்து பண்டரிபுரம்… எங்கும் நடந்தே செல்லும் அவருக்கு, வயது எண்பதைத் தாண்டியிருந்தது.
அதனால், பெரியவா உடல்நலம் குறித்து அன்பர்கள் கவலைப்பட்டனர். அவரோ அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் நடந்தார்.
வழியெங்கும் மக்கள் தரிசித்து மகிழ்ந்தனர். வழியில் ஒரு மலை தென்பட்டது. அதன் மீது ஒரு கோயில் இருந்தது. அடிவாரத்தில் நின்றார் பெரியவா.
மலைக் கோயிலை தரிசிக்க விரும்புகிறாரோ என்று நினைத்தனர் பக்தர்கள்.. எண்பது வயதில் நெடுந்தூரம் நடப்பதே பெரிது… இதில் மலையேறுவது சாத்தியமா என அனைவரும் கருதினர்..
அப்போது உச்சியில் இருந்து தாவி வந்தது ஒரு கருங்குரங்கு. மனிதர் போல் வளர்ந்திருந்த அது உயரமாகவும், வலிமையாகவும் இருந்தது.
அன்பர்கள் அதை விரட்ட முயற்சித்தனர். ஆனால், அது பெரியவா வை வைத்த கண் வாங்காமல் பார்த்தது…
“பசிக்கிறதோ என்னவோ? ஏதாவது பழம் கொடுங்கள்!” என உத்தரவிட்டார் பெரியவா. கைவசமிருந்த வாழைப்பழங்களை நீட்ட, வாங்கிய குரங்கு, தோலை உரித்து சாப்பிட்டது. பின் பெரியவாவை பார்த்த படி ஒரு கல்லில் அமர்ந்தது.
பெரியவா வும் அதை பரிவுடன் பார்த்த படி கீழே அமர்ந்தார். இந்த நயன பாஷை சிறிது நேரம் நீடித்தது. பின்னர் குரங்கு திருப்தி அடைந்தது போல் மலையேறத் தொடங்கியது.
“மலை உச்சியில் இருப்பது என்ன கோயில் தெரியுமா?” என்று கேட்டார் பெரியவா… யாருக்கும் தெரியவில்லை..
“மலையில் இருப்பது ஆஞ்சநேயர் கோயில். வயதான காலத்தில் நான் சிரமப்பட வேண்டாம் என எண்ணி , அந்த மாருதியே மலையிறங்கி வந்தாரோ என்னவோ? ” என்று சொல்லி கலகலவெனச் சிரித்து விட்டு பண்டரிபுரம் நோக்கி செல்லத் துவங்கினார் பெரியவா….
ராமாயண கொலுவைப்பார்த்து பிரமித்துப்பொனேன். அமைத்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
MAY BE A REPEAT
பெரியவா சரணம்

நடமாடும் தெய்வம்!