127. Gems from Deivathin Kural–Social Matters-Simple Living

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The ascetic who showed us how to lead an unpretentious life is asking us to lead a simple life. All we need is, show the heart and will to listen and implement some of Periyava’s upadesams. Feeling pretty heavy seeing this picture and his pleas to us….Rama Rama

எளிய வாழ்வு

‘வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது’ என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத்தான் என்கிறார்கள். எல்லோருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியதுதான். இதற்கே சர்க்கார் திட்டம் போட வேண்டும். இதற்கு அதிகமாகப் பொருளைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் ‘வாழ்க்கைத் தரம்’ என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்காக ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் கிடைக்காது. இதைப் பிரத்யக்ஷத்தில் பார்க்கிறோம். நாம் மேலைநாட்டுக் காரர்கள் மாதிரி, போக போக்கியங்களுக்குப் பறக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கூட நாம் புத்தி பெறவில்லை என்றால், அதுதான் துரதிருஷ்டம்.

‘ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட வேளையில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதாலோ, வீட்டை ஏர்-கண்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்! மன நிறைவு வெளி வஸ்துக்களால் ஒருநாளும் கிடைக்காது. வெளி வஸ்துக்களைச் சேர்க்க சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு புதுப்புது வஸ்துக்களைக் கண்டுபிடித்து வாங்கிக் கொண்டேதான் இருப்போம். நாம் இப்படி இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக ஏக முஸ்தீபுடன் இறங்கிய பின்தான் சகலருக்கும் எப்போது பார்த்தாலும், எதையாவது வாங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான். இப்போது கோடீசுவரனிலிருந்து எல்லோருக்கும் இந்தக் குறை இருப்பதால் எல்லோருமே தரித்திரர்களாகத்தான் ஆகியிருக்கிறோம். பணம் இல்லாவிட்டால்தான் தரித்திரம் என்பதில்லை. பணம் அதிகமாகிவிட்டதாலேயே, எல்லோரும் தரித்திரர்களாகியிருக்கிறோம்.

இந்த போக்கிய வஸ்துக்கள் அதிகமாக ஆக, ஆத்மிக நாட்டம், நல்ல சித்தம் எல்லாமே போய் விடுகின்றன. மேல்நாட்டில் எத்தனை சஞ்சலம், விபசாரம், கொலை, கொள்ளை என்று பார்க்கிறோம்! அதெல்லாம் இங்கேயும் வருவதற்குப் பூர்ண கும்பம் கொடுக்கிறோம். வேண்டாத வஸ்துக்களை அவசியத் தேவை என்று நினைத்துக் கொண்டு அவற்றுக்காக ஆத்மாபிவிருத்தியை அலட்சியம் செய்துவிட்டு, பணவேட்டையிலேயே இறங்கியிருப்பதுதான் நவீன வாழ்க்கை முறை. போதுமென்ற மனசோடு நிம்மதியாக வாழ்ந்த காலம் போய்விட்டது.

இப்போது யாருக்குமே நிறைவு இல்லை; பழைய நிம்மதி இல்லை. சமூக வாழ்விலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும்? எல்லோருக்கும் எல்லா ஆசையும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது; ஆசாபங்கத்தில் துவேஷம் பிறக்கிறது.

எனவே, வசதி உள்ளவர்கள் எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது; மற்ற ஜனசமூகத்துக்கும் நல்லது. பழைய காலத்தில் இப்படித்தான் இருந்தது. வேத சாஸ்திரத்தை ரக்ஷித்தவர்களுக்கு எத்தனை ராஜமானியம் வேண்டுமானாலும் தருவதற்கு ராஜாக்கள் சித்தமாயிருந்தார்கள். ஆனாலும், அவர்கள் பொருளில் ஆசை வைக்கவே கூடாது என்று சாஸ்திரம் விதித்தது. இதை இன்றைக்கும் சில வார்த்தைகளிலிருந்தே ஊகிக்கலாம். ‘வெண்கலப் பானை‘ ‘வைர ஓலை‘ போன்ற வார்த்தைகளைக் கேட்கிறீர்கள். பானை, மண்ணால் செய்தது. முற்காலத்தில் வசதி உள்ளவர்களும் பானைதான் வைத்து சமைத்தார்கள். அப்புறம் வெண்கலப் பாத்திரம் வந்தது. அதுவே வெண்கலப் பானைஆகிவிட்டது. ‘ஓலை‘ என்பது காதிலே வெறும் பனை ஓலையைச் சுருட்டிப் போட்டுக் கொள்வதைக் குறிக்கும். அம்பிகைக்கூட பனை ஓலைத்தோடுதான் போட்டிருந்தாள். (தாலீ தலா பத்த தாடங்க) என்று ‘சியாமளா தண்டகம்’ சொல்கிறது. பிறகு வைரத்தில் தோடு செய்தார்கள். இருந்தாலும் ‘வைர ஓலை’ என்று பழைய பெயரும் ஒட்டிக் கொண்டது. அந்தக் காலத்தில் வசதியுள்ளவர்கள் எட்டு அடுக்கு வீடு கட்டிக் கொண்டதில்லை. எல்லோருடைய வீடும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும். நம்முடைய சிற்பம் முதலிய சாஸ்திரங்களின் பெருமை தெரிவதற்காக ராஜாக்கள், மந்திரிகள், பெரிய மாளிகை கட்டிக் கொண்டிருந்தார்கள். வைசியர்களும் பெரிய வீடுகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பொது ஜனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்த பிராம்மணர்கள் சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்தவர்கள்தான். எல்லா விஷயத்திலும் அவர்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் சாஸ்திர விதி. அரண்மனைக்கும் மேலாகக் கோயில்தான் ஊருக்கே பெரிய வீடு; கோயில் ஸ்வாமிக்குத்தான் ரொம்பவும் உயர்ந்த நகை நட்டு, ஆபரணம் எல்லாம். உத்ஸவம்தான் ஊருக்கெல்லாம் கல்யாணம் மாதிரி. தனிமனிதர்களின் டின்னர், டீ பார்ட்டி, ஆடம்பரம் எதுவும் அப்போது கிடையாது. வசதியுடையவர்கள் எளிமையாக வாழ்ந்த வரையில் மற்றவர்களுக்கும் இவர்களிடம் துவேஷமில்லை. பிற்பாடு வேதரக்ஷணத்தையும், கிராமத்தையும் விட்டு அவர்கள் பட்டணத்துக்கு வந்து பண வேட்டையில் விழுந்ததும்தான் சமூகத்தின் சௌஜன்யமே சீர்குலைந்து விட்டது. பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப எல்லோரும் பிரயாசைப்பட வேண்டும்.

காந்தி இருந்த வரைக்கும், ‘எளிய வாழ்க்கை, எளிய வாழ்க்கை’ (Simple living) என்ற பேச்சாவது இருந்தது. இப்போது அந்த அபிப்பிராயமே போய்விட்டது. மறுபடி அந்த முறைக்கு மக்களைக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது திருப்ப வேண்டும். நிறைவு மனசில்தான் இருக்கிறது என்று உணர்ந்து, அவரவரும் கடமையைச் செய்து கொண்டு எளிமையாக இருக்க வேண்டும். அவரவரும் இப்படித் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து சுபிட்சமாக இருக்க சந்திர மௌளீசுவரர் அநுக்கிரகம் செய்வாராக!

_________________________________________________________________________________

Simple Living

‘Improving the Standard of Living’ is a phrase heard often these days. Plans made by the government are also oriented towards achieving this. It is very essential that everyone should have enough food, clothes to cover and protect himself from heat and cold as also a small place to live. The government plans should provide only these. Making efforts to acquire materialistic things over and above the basic needs will not improve the standard of living. In practice, the ‘standard’ of living is not in multiplying one’s wants. Leading a life of contentment can alone be considered as good ‘standard’ of living. Increasing one’s wants and making efforts to acquire them will not bring contentment to anyone. We are able to see this practically. Like the westerners, we too are greedy for the luxuries of life. Having reached the zenith of luxurious living, westerners have realized that there is no contentment in that pursuit. They have now come to us, seeking Yoga, Vedanta and Bhakti. It is unfortunate that their experiences have not made us any wiser.

Having a wardrobe full of clothes, eating out in hotels or having an air conditioned house does not indicate a high standard of living. Contentment is not obtained by hankering for material things. The more we purchase them, the more our wants multiply. We tend to aspire for newer things and purchase them too. When the rich people do this, the poor too develop the same desires. This leads to competition and jealousy. Our attempt to improve our standard of living has resulted in everybody buying some thing or the other, all the time. As long as these constant needs for things exist, we should consider ourselves only as paupers. All the people, including millionaires are in the grip of these wants, hence, all the people are paupers. Poverty is not just lack of money. It is increase in money (circulation) that has made everyone poor.

With access to these luxury items on the rise, we have fallen back on virtues like seeking spiritual progress and thinking good thoughts. We see the western countries grappling with internal strife, prostitution, murder, dacoity etc. We seem to be inviting all those problems here. The new way of life lays emphasis on unwanted things. Considering them to be the basic necessities, we have, at the cost of self improvement, decided to earn money by hook or crook. Those times, when one was contented with what one had, have gone by.

In today’s world, hardly anyone is happy and contented. The peace of mind experienced by people during the earlier days is not present  now. In the society, the concept of give and take is now replaced by competition and jealousy. If a person leads a luxurious life, others are tempted by it. Is it ever possible that all desires of all people will be fulfilled? Disappointment is inevitable. Unsatisfied desires lead to jealousy.

Therefore, a simple life led by the rich is good not just for them, but for all members of the society. This was the way of life in the earlier days. The kings were ready to shower any amount of riches on those who were the custodians of the Vedas (the Rishis and Brahmins). But the Vedas prohibited them (the Rishis and Brahmins) from accepting any material rewards. Some words (in Tamizh) which are still in vogue are a proof of this. We hear words like Venkala Panai (brass pot), Vaira Olai (diamond leaf) etc. A pot is made with clay. In the earlier days, even the rich cooked their food only in pots. Brass came much later. Still, a vessel came to be called a ‘brass pot’. The word ‘olai’ refers to the palm leaf which was rolled and used as an ear ornament. The words ‘thalee dalaa badha thatanga’ in the Syamala Dandakam (by Kalidasa) mentions that even Ambal wore the palm leaf as her ear ornament. Later came the diamond ear ornaments. But they were referred to as ‘Vaira Olai’. In the earlier days the rich did not venture to construct eight storeyed structures for themselves. Everyone lived in similar houses. To promote the rich traditions and art forms, kings and ministers had palatial houses constructed with intricate sculptures. Businessmen too had huge houses. But the Brahmins who set the example for others, led a simple, high quality life. The Sastras have ordained that Brahmins should lead simple lives in all respects. The temple was considered a large home for everyone, more important than the palace. Eswara in the temple had the best of jewels. The temple festivals were the common celebrations. Beyond these, there were no individual dinners, tea parties or other luxuries. As long as the rich led a simple life, the poor too did not exhibit any hatred towards them. It was later, when they discarded the Vedas and migrated from their villages to earn money, that the fabric of the society got ruined. (At least now) Every person should make efforts to get back to the old way of a simple life.

Till the time Gandhi was alive, there was at least a talk of simple life. Now, even the thought is not present. People should gradually be oriented towards that kind of a life. Recognizing that contentment pertains only to the mind, each individual should carry out his duties diligently and also live a simple life. May Chandramouleeswara bless everyone in reducing their wants and in leading a prosperous life with contentment in their hearts.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri maha prabho. SIRUGA KATTI PERUGA VAZGA What a fine piece of advice. Janakiraman Nagapattkinam

  2. I pray Maha Periva to bless this generation who are are in luxury life, to know more about SIMPLE LIVING and lead, as said by Maha Periva for everlasting peaceful life.

Leave a Reply

%d bloggers like this: