Periyava Golden Quotes-695


Jaya Jaya Sankara Hara Hara Sankara – As Sri Periyava says below, how many of us start Sraddha Karma on ‘Aparaana Kaalam’ (after 1PM) on a completely empty stomach? Rama Rama

நன்றாகப் பல் தேய்க்கணும், ஏப்பம் வரும் வரை கொப்பளிக்கணும் என்று போட்டிருக்கிற சாஸ்திரத்திலேயே சிராத்தம் முதலான தினங்களில் குச்சி போட்டுப் பல் தேய்க்காமல் வாயைக் குழப்பிக் கொண்டு கொஞ்சம் கொப்பளிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆசாரமென்றாலே சௌசமென்று சொல்லிவிட்டு இதென்ன அசுசியாயிருக்கிறதே என்று நினைக்கக் கூடாது.  சிராத்தத்தில் ஸ்நானம், மற்ற மடி ஸமாசாரங்களை ஏகமாகச் சொல்லியுள்ள அதே சாஸ்திரத்தில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது என்பதாலேயே இதற்கு நமக்குத் தெரியாத காரணமிருக்க வேண்டுமென்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தெரியும்படியாகவும் ஒரு காரணம் இந்தப் புஸ்தகம் போட்டவர் சொல்லியிருக்கிறார். அதாவது நன்றாகப் பல் தேய்த்து, நாக்கை வழித்துக் கொண்டு, அப்புறம் கொப்பளித்தால் பித்த நீரெல்லாம் வெளியே வந்துவிடும்; மற்ற நாட்களில் அப்படி வர வேண்டியது தான்; ஆனால் இப்படிப் பித்தநீர் வந்தவுடன் பசி எடுத்து விடும்; மற்ற தினங்களில் அப்போது பாலோ, மோரோ, கஞ்சியோ பானம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் சிராத்த தினத்தில் ஒட்ட ஒட்டக் கிடக்க வேண்டும். அன்றைக்கு ரொம்பவும் லேட்டாக அதாவது மத்யான்னம் ஒரு மணிக்கு மேலே அபரான்ன காலத்தில் தான் சிராத்த கர்மா ஆரம்பித்து, அப்புறம் அதை முடித்து போஜனம் பண்ண வேண்டுமாதலால் அதுவரை பசி எடுக்காமலிருக்கவே பித்த ஜலமும் வெளியே போக வேண்டாமென்று பல் தேய்க்கிறதை இப்படி relax செய்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். அதாவது இதுவும் தாக்ஷிண்யத்தோடு ஆசாரம் பண்ணிக் கொடுத்திருப்பதில் சேரும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

In the same scriptures which talk about cleaning the teeth thoroughly, and state that a person should gargle his mouth till he belches, state that on the day of ancestral rites or sraadham a person should not brush his teeth but be content with just gargling. We should not wonder why the scriptures have advocated such an unclean thing while they talk about Aacharam elsewhere. This contradiction itself makes it clear that there must be some valid reason behind this instruction. But the person, who has written the book I am holding in my hand, has given a valid reason. If a person washes the mouth thoroughly after cleaning the teeth and tongue, all bile liquid will come out after this process. While on ordinary days, one can consume either milk or buttermilk immediately after this cleaning process. But on the day of the sraddham no liquid or food should be consumed till the ceremonies are over, which quite late in the day. The Sraddham karma should start on Aparaana Kalam which is after 1PM. Hence to ensure that one is not consumed by hunger during the ceremony, bile water is not brought out in the morning.  This is an instance the rules of Aacharam being relaxed to accommodate a genuine contingency. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Aparaanna kaalam is from 1.15PM to 3.30PM (read somewhere from periyava preachings)

  2. In the translation, it is stated that the Sraddham karma should start only after Aparaana Kalam which is after 1PM. In fact it should commence during Aparaana Kalam not after. Please clarify.

    Thanks.

    Jaya Jaya Sankara Hara Hara Sankara.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: