என்னென்னமோ கொஞ்சங்கூட புரியாததாகவும் அநேக சாஸ்திர விதிகள் இருக்கிறதே என்று யோசிக்கக் கூடாது. இந்தப் புஸ்தகத்தை ஒரு புரட்டுப் புரட்டினால் எனக்கே கொஞ்சம் தலை சுற்றுகிற மாதிரிதான் இருக்கிறது!. இவ்வளவும் செய்கிறது ஸாத்யமா என்று இருக்கிறது. நான் மடாதிபதி. ஆசாரங்களை அநுஷ்டிக்க எனக்கு வசதி நிறைய உண்டு. நீங்களே [வசதி] செய்து கொடுக்கிறீர்கள். எனக்கே முடியுமா என்று இருந்தால், இந்தக் காலத்தில், டவுன் லைஃபில் மாட்டிக் கொண்டிருக்கிற உங்களைப் பற்றி என்ன சொல்வது? ஆனாலும் அவரவரும் முடிந்த மட்டும், utmost பிரயத்னம் பண்ணனும்; பாக்கியும் முடியவில்லையே என்று மனஸாரப் பச்சாத்தாபப் படணும்; ‘ரிடயர்’ ஆன விட்டாவது இன்னம் எவ்வளவு ஜாஸ்தி பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணனும் என்று த்ருட ஸங்கல்பம், சபதமே பண்ணிக் கொள்ள வேண்டும். அப்போது பரமேஸ்வரன் நாம் ஸின்ஸியராகக் கார்யத்தில் அநுஷ்டிக்கிற ஆசாரங்களை மட்டுமில்லாமல், மனஸில் ஸின்ஸியராக நினைக்கிறதையும், மொத்தத்தில் சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையையும் பார்த்து நம்மைக் கை தூக்கி விடுவான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
We should not wonder why so many of the rules prescribed by the scriptures are difficult to understand. Even my head whirls when I browse through this book on scriptural rules. Following all these rules seems to be an impossible task. I am the head of a Mutt and I have a lot of facilities to follow these Aacharams. You provide a lot of facilities to enable me to do so. When I myself feel a little overwhelmed about these rules and regulations, what can I say about those caught in the town life? But everyone should make an utmost effort to follow these rules and truly regret the inability to follow the rules in entirety. One should take a vow that he will strictly follow all the rules at least after retirement. Then Lord Parameswara will take note not only of the Aacharams we follow but also of our sincerity and faith in the Saastraas and lend us a helping hand. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply