Periyava Golden Quotes-690

இது அவநம்பிக்கை யுகம் என்றே வர்ணிக்கிறார்கள். “தெரியாதவற்றை எப்படி நம்புவது?” என்று கேட்கிறார்கள். நமக்கு நேராகத் தெரியாத அதி ஸூக்ஷ்மமான விஞ்ஞான தத்வங்களையும் ரிஷிகள் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு அநேக ஆசாரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தோமல்லவா? இப்போது நாம் வைத்திருக்கும் லாபரட்டரி, கருவிகள் ஆகியன இல்லாமலே இப்படித் தெரிந்து கொண்டிருந்தவர்கள்தான், அதாவது மர்மமானதையெல்லாம் தெரிந்து கொள்ள அதீந்திரிய சக்தி பெற்றிருந்தவர்களேதான், நம் விஞ்ஞானத்திலே வராத ஆசாரங்களையும் சொல்லியிருக்கிறார்களென்பதால், இது நிஜமாயிருப்பதால் அதுவும் நிஜமாகத்தான் இருக்கும் என்று நம்பலாம். ஆசாரங்களில் ‘த்ருஷ்ட’த்தில் தெரிகிற உண்மையே ‘அத்ருஷ்ட’மும் உண்மையாய்த் தானிருக்க வேண்டுமென்பதற்கு ஸாக்ஷியாயிருக்கிறது. ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

This is described as an Age of Doubt. People ask us how they can trust what they have not seen. We have seen how our sages were aware of many highly subtle scientific philosophies which are not directly known to us and structured many Aacharams accordingly.  Since they possessed such unnatural powers to decipher such mysteries without the help of any laboratory equipment and the truths they thus arrived at were true, then we must believe that whatever they had uttered without any scientific provenance must also be true. The very fact that certain rules of the Aacharams are compatible with what is perceptible to us is a testimony to the fact that what Aacharams are imperceptible must also be true. –  Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply to Janakiraman. NagapattinamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading