Periyava Golden Quotes-688


ஈடுபாடு, சிரத்தை இந்த இரண்டும் இரண்டு நேத்ரங்கள் மாதிரி. சிரத்தை என்றால் ரொம்பவும் அக்கறையாக, கவனமாகச் செய்வது என்று பொதுவில் அர்த்தம் செய்து கொள்கிறோம். கவனக்குறைவாக இருந்தால் ‘அசிரத்தையாயிருக்கிறான்’ என்கிறோம். சிரத்தை என்றால் நம்பிக்கை, Faith என்று முக்யமான அர்த்தம். புத்தி பூர்வமாக நிரூபிக்கக் கூடியவற்றிலும், பிரத்யக்ஷமாகப் பலனைத் தருவதிலும் ‘நம்பிக்கை’ என்ற ஒன்றுக்கு இடமில்லை. இவற்றின் கீழ்வராத அத்ருஷ்ட, ஆத்மார்த்த விஷயங்களில் பெரியோர்கள் – மெய்பொருளைக் கண்டுணர்ந்த முன்னோர்கள் – ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற ஆசார, அநுஷ்டானங்களில் நம்பிக்கை ரொம்பவும் அவசியம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Involvement and Faith (Eedupaadu and Shraddhai) are like the two eyes. We interpret the latter – Shraddhai – as something that refers to carefulness and caution in the task one is performing. If a person is careless, we call it ‘Asiraddhai’. The primary meaning of Shraddhai is Faith. There is no necessity for Faith in things that can be intellectually proven and those that give perceptible results. We need Faith in those matters that do not come under this category and are spiritual and imperceptible in nature, especially in the rules and regulations of Aacharam which have been given to us by our ancestors who actually experienced the ultimate Truth. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: