எந்தத் திக்கைப் பார்த்துப் பண்ணணும், எப்படி உட்காரணும் (பத்மாஸனத்திலே தியானம்; சப்பளாம் கொட்டிக்கொண்டு மற்ற காரியங்கள்; ஆசமனம் பண்ணும் போது, குந்திக்கொண்டு); கையை எப்படி வைத்துக் கொள்ளணும் (ஸங்கல்பத்தின் போது தொடையில் வலது உள்ளங்கையை இடது உள்ளங்கைக்கு மேலே; பிராணாயாமத்தில் மூக்கின் இன்ன பக்கத்தை இன்ன விரலால் பிடித்துக் கொள்ளணும் என்பது; ஆசமனத்தில் எந்த விரலை மடக்கி, எந்த விரலை நீட்டணும் என்கிறது) – இப்படி அநேகம். ஒவ்வொன்றுக்கும் அளவு (ஆசமனத்துக்கு உளுந்து முழுகுகிற அளவு ஜலம். தர்ப்பணத்துக்கு ஒரு மாட்டுக் கொம்பு பிடிக்கிற அளவு ஜலம் – ‘கோச்ருங்க ப்ரமாணம்’) என்று இருக்கிறது. கையில் இடுக்கிக் கொள்ள, கீழே போட்டுக் கொள்ள எத்தனை தர்ப்பை, தர்ப்பணத்துக்கு எத்தனை எள்ளு, ஹோமத்துக்கு ஆஜ்யமோ [நெய்யோ], ஹவிஸோ என்ன அளவு; எந்தெந்த வஸ்துவை எந்தெந்தப் பக்கம் பார்த்து வைக்கணும் என்று ரொம்ப ரொம்ப detailed -ஆக, minute -ஆக, elaborate -ஆக [அம்சம் அம்சமாக, நுணுக்கமாக, விஸ்தாரமாக] ஆசார விதிகளை சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பழகினால், இத்தனையும் ஸுலபத்தில் வந்து விடும். முடியுமா என்று மலைத்தால்தான் மலைத்துக் கொண்டே நிற்கும்படியாகும்! ஒரு காரை ஓட்டுவது என்றால் எத்தனை தினுஸு ஸ்விட்ச், ப்ரேக், கியரைப் பழக்கத்திலே ஸரளமாகக் கையாள முடிகிறது? அநுபவஸ்தர்களான ச்ரௌதிகள் ஒரு யஜ்ஞத்தைப் பண்ணும்போது எப்படி டக், டக்கென்று அத்தனை விதிகளின்படியும் அநாயாஸமாகப் பண்ணிக் கொண்டு போகிறார்களென்று பார்த்தால் தெரியும். ஈடுபாடு இருந்து விட்டால் எதுவும் முடியும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Scriptures are very clear about so many minute details – what direction one should face while performing each task, what posture one should take (padmasanam for dhyanam, sitting crosslegged for other tasks), how the hands should be held (during sankalpam the right palm should be over the left and there are instructions about which nostril should be closed with which finger during pranayamam and which finger should be bent and which should be held straight during achamanam) and likewise. Similarly it is also stated that during Aachamanam one should use that amount of water in which urad dal can be immersed and during tharpanam, the water should be able to fill a cow’s horns – Goshrunga Pramaanam. So many details have been given about what amount of Dharba grass should be held in the hand and how much should be laid below, the amount of gingelly seeds for tharpanam, how much of ghee or havis (the cooked offering to the homam fire) is required during homam and which object used in a ritual should be kept where. Such detailed instructions have been given by our sastras. If we start wondering how we may be able to remember and follow all these rules, then there is no end to it. After all, when we drive a car are not there many instructions about handling the switches, gear, and brakes? When an experienced priest performs a yagna he follows all the rules and regulations without any hesitation. If there is involvement everything can be achieved. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
இது அனைத்தையும் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் விவரமாக கூறமுடியுமா?
It is always better to directly learn from Sasthrigal/ganapatigal who are authoritative in these subject matters. Apart from that, following books would help you to learn more on the above subject:
Sathacharam by Srivatsa Somadeva Sarma
Sandhyavandanam by Srivatsa Somadeva Sarma
Both books are available at Sri Surabhi Printers in West Mambalam, near Railway Station.
https://www.justdial.com/Chennai/Sri-Surabhi-Printers-Near-Mambalam-station-West-Mambalam/044P4086500_BZDET
You can also read Samkshepa Dharmasasthram which explains so many acharams that one should follow. This book is available at our Kanchi Matam as far as I know. And this book is given free for devotees.
ரொம்ப முக்கியம்
ஆம் நாம் முன்னேற ரொம்ப முக்கியம்
சேஷாத்திரி
Virus-free.
http://www.avg.com
2017-09-07 12:20 GMT+05:30 Sage of Kanchi :
> Sai Srinivasan posted: ” எந்தத் திக்கைப் பார்த்துப் பண்ணணும், எப்படி
> உட்காரணும் (பத்மாஸனத்திலே தியானம்; சப்பளாம் கொட்டிக்கொண்டு மற்ற காரியங்கள்;
> ஆசமனம் பண்ணும் போது, குந்திக்கொண்டு); கையை எப்படி வைத்துக் கொள்ளணும்
> (ஸங்கல்பத்தின் போது தொடையில் வலது உள்ளங்கையை இடது உள்ளங்கைக்கு”
>