ஸ்நானம் ஐந்துவகை என்பது மட்டுமில்லை. அவற்றில் ‘முக்ய’ ஸ்நானமான நீராடலுக்கே ஐந்து அங்கங்கள் சொல்லியிருக்கிறது.
ஸங்கல்பஸ் ஸுக்தபடநம் மார்ஐநம் ச (அ)கமர்ஷணம் |
தேவதா தர்ப்பணம் சைவ ஸ்நானம் பஞ்சாங்க உச்யதே ||
முதலில் ‘ஸங்கல்பம்’ எந்தக் கர்மாவானாலும் பாபப் பிராயச் சித்தமாகவும் பரமேஸ்வரப் ப்ரீதிக்காகவும் இதைப் பண்ணுகிறேன் என்று ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். முன்னேயே சொன்னபடி வேத ஸுக்தங்களைச் சொல்வது ‘ஸுக்த படனம்’. ‘மார்ஜனம்’ என்பது ‘ஆபோ ஹி ஷ்டா’முதலிய மந்திரத்தால் முதலில் ஜலத்தைப் புரோக்ஷணம் கொள்வது. அப்புறம்தான் உள்ளே முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது மூன்று தடவை அகமர்ஷண ஸுக்தத்தை ஜலத்துக்குள்ளிருந்து ஜபிக்க வேண்டும். இதுதான் ஸ்லோகத்தில் கூறப்படும் ‘அகமர்ஷணம்’ அதற்குப் பொழுதில்லாமல் இக்கட்டு ஏற்பட்டால், காயத்ரியை முதலில் பாதம் பாதமாகவும், அப்புறம் முழுக்கச் சேர்த்தும், அதாவது, மொத்தம் மூன்று தடவை ஜபிக்க வேண்டும். ரொம்பவும் அவஸரம், தவிர்க்கவே முடியாது என்றால் பிரணவத்தை மூன்றுமுறை சொன்னாலும் போதும். இதையே தினப்படி ஆக்கிக் கொண்டுவிடக் கூடாது! இது சோம்பேறித்தனத்திலும், அடங்காமையிலுந்தான் சேர்க்கும். அவஸர ஸமயத்திலும், ஆபத்து காலத்திலும் “ஐயோ, பூர்ணமாக ஆசாரப்படி பண்ண முடியவில்லையே!” என்கிற நிஜமான தாபத்தோடு கௌணமாக ஆசாரத்தைக் குறைத்துக் கொண்டு பண்ணினால்தான், பகவான் அந்தத் தாபத்தையே மெச்சிப் பூர்ண பலன் தருவானாதலால், மற்றக் காலங்களில் இப்படிப் பண்ணினால் அதை மன்னிக்க மாட்டான். ஸ்நானம் முடித்தவுடன் ஜலத்திலிருந்து கொண்டே தேவ, ரிஷி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதுதான் ஐந்தாவது அங்கமான தர்ப்பணம். குளியல் என்று ஸாமான்யமாகத் தோன்றுகிற காரியத்துக்கு இத்தனை லக்ஷணங்களும் விதிகளும்! இப்படியே ஒவ்வொன்றுக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Not only there are five types of bath but the generally performed bath with water is itself divided into five parts. First Sankalpam – before any Karma or task prescribed by the Vedas is performed a sankalpam or vow has to be taken stating that this task is performed to expiate one’s sins and to make the Supreme Power happy. Chanting the Vedic suktas is called ‘Suktha Patanam’. ‘Maarjanam’ is sprinkling oneself with water, simultaneously uttering Vedic chants like ‘Aapohishtaa’. Only then one can immerse himself in water. When one is immersed in water, the Akamarshana Suktam has to be chanted from inside the water. If there is no time for this due to some unavoidable circumstance, the Gayathri Mantra has to be chanted initially part by part and then fully, that is, three times in total. If this also becomes impossible, then Pranavam (Om) has to be uttered three times. But these latter practices should not become a daily habit. If done so, it will be representative only of sloth and unruliness. Only when there is a danger or emergency and one deeply feels the inability to follow the Aacharam completely, will God bless a person even if the Aacharam is observed as ‘Kownam’ (in an abbreviated form). Otherwise, He will not forgive a person for cutting short the practices of Aacharam. After the snaanam is over, one should perform ‘Tharpanam’ to the heavenly beings, sages, and ancestors while continuing to stand in the water. This is the fifth part of the ritual of snaanam. Though having a bath seems to be a routine matter, so many rules and regulations have been prescribed for this process. Likewise, rules have been prescribed many other matters too. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Indeed…. batheing is not just what is done daily in simple way. I wonder any one of present life style do this daily. I used to this while I go to Pushkarams and only Bhagavath Nama Smaranam during batheing daily.