பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான்! “ப்ரம்மம்” என்றால் வேதம், வேத மந்திரம் என்பது ஒரு அர்த்தம். அதனால் அபிமந்திரிக்கப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு “ப்ராஹ்ம ஸ்நானம்” என்று பெயர் கொடுத்திருக்கிறது. எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல் அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈஸ்வர ஸ்மரணையோடு, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகத்தானே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன? அவற்றிலே சிறப்பாக வருணனையோ, வேறு ஒரு தேவதையையோ மந்திரபூர்வமாக ஒரு கும்பத்தில் ஆவாஹனம் பண்ணிப் பிறகு அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்வது ‘ப்ராஹ்மம்’ என்று பெயர் பெற்றிருக்கிறது. உடம்பு அசக்தமாய் எந்த விதத்திலும் வாருண ஸ்நானம் செய்ய முடியாதவர்களுக்கு இந்த மந்திர தீர்த்த ப்ரோக்ஷணமே அதனிடத்தில் ‘கௌண’ ஸ்நானமாகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
If you consider it, all forms of Snaanam or bath are ‘Braahmam’. The word ‘Braahmam’ also means the Vedas and the Vedic chants. So the Snaanam performed with water purified by the Vedic chants is called ‘Braahma Snaanam’. After all, Aacharam has been devised only to ensure that all the tasks we perform are done so with the proper mantras so that these tasks take on the nature of offerings to Eswara, performed with the thought of Eswara pervading one’s mind. When Varuna or any other Devatha or Holy force is enshrined specifically in a Kumbham (the vessel with the holy water) and then the water in sprinkled on one’s self, it acquires the name of ‘Braahmam’. This sprinkling of holy water becomes the ‘Kowna Snaanam’ to those persons who are too weak to have any kind of bath with water (Vaaruna Snaanam). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply