ஸ்நானத்தில் ஐந்து தினுஸு சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘ஸ்நானம்’ என்றவுடன் நாம் நினைக்கிறபடி ஜலத்தை மட்டும் கொண்டு குளிப்பது ‘வாருணம்’- வருண பகவான் ஸம்பந்தமுள்ளது. இதை ‘அவகாஹ’மாக, அதாவது நாம் ஜலத்திக்குள் இறங்கி, முழுகிப் பண்ணினால் தான் ‘முக்ய’ ஸ்நானம் பண்ணினதாக ஆகும். பாத்திரத்தில் வைத்துக்கொண்டு மொண்டு தலையில் விட்டுக் கொள்வது கூட இரண்டாம் பக்ஷம்தான். அதற்கப்புறந்தான் ‘கௌண’ மாக கழுத்துவரை, இடுப்புவரை என்பதெல்லாம். ஆக ஐந்து ஸ்நானங்களில் ஜலத்தால் செய்கிற வாருணம் ஒன்று. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Five types of bath have been described by the sastras. Among these, the act of cleansing ourselves with water, which immediately occurs to us, is ‘Vaarunam”-related to Varuna Bhagawan. We have to perform this snaanam by immersing ourselves in water – then only it is considered a ‘Mukya Snaanam’. Pouring water over ourselves with a vessel is in itself a compromise only. Then come afterwards the ‘Kowna’ exemptions like washing till the neck or waist. So, ‘Vaarunam’ is one of the five kinds of bath, which is performed with water. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply