Periyava Golden Quotes-672

சில ஸமயங்களில் ‘முக்ய’த்தையும் பண்ணிவிட்டு ‘கௌண’த்தையும் அதோடு பண்ணுவது விசேஷிக்கப்படுகிறது. உதாரணமாக ஸ்நானம் என்றால் ஜலத்துக்குள் முழுகி அழுக்குப் போகக் குளிப்பதுதான். ஆனால் உடம்பு ஸரியில்லாத போது அப்படிப் பண்ண வேண்டாமென்று ‘கௌண’மாகத் தலைக்கு விட்டுக் கொள்ளாமல் கழுத்துவரை குளித்தால் போதும், ‘டெம்பரேச்சர்’ இருந்தால் இடுப்புவரை குளித்தாலே போதும், அதுவும் முடியாவிட்டால் ஈரத்துணியால் துடைத்துக் கொண்டாலும் ஸரி, ரொம்பவும் தாபஜ்வரமானால் இது கூட வேண்டாம், தலையோடு கால் விபூதியைப் பூசிக்கொண்டாலே ஸ்நானம்தான் என்றெல்லாம் சாஸ்திரங்களில் flexible-ஆக [நெகிழ்ந்து கொடுத்து] விதி செய்திருக்கிறது. நன்றாகத் தலைக்கு ஸ்நானம் பண்ணின பிற்பாடும், அதாவது ‘ப்ராதன’ அல்லது ‘முக்ய’ விதியை அநுஸரித்த பின்னும் இப்படி (‘முழு நீறு பூசிய’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிற மாதிரி) தலையோடு கால் விபூதி பூசிக் கொண்டு ‘கௌண’ ஸ்நானமும் பண்ணலாம். ஆனால் நல்ல ஆரோக்ய ஸ்திதியிலிருக்கும் போது குளிக்காமல் விபூதி ஸ்நானம் மட்டும் பண்ணினால் போதுமென்று இருக்கப்படாது. –  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Sometimes it is considered good to observe both the ‘mukya’ and ‘kowna’ rules. For example, ‘Snaanam” or bath refers only to having a deep dip in the water, thus cleansing the body of dirt. But scriptures are flexible and give some exemptions when one is ill – a person can avoid pouring water over his head and have a bath till the neck; if he is running a temperature, it is enough if he has a bath till his waist; if even this is not possible, it is enough to wipe the body with a wet cloth; if the fever is severe it is enough to apply ‘vibhuthi’ or holy ash from head to foot.  Even if one has a proper ‘Snanam’ from head to foot according to the ‘mukya vidhi’, one can apply holy ash from head to foot as per the ‘kowna vidhi’ (as mentioned in the Periya Puranam). However one should not be content with a bath of holy ash when one is in good health. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. highly knowledgable

Leave a Reply

%d bloggers like this: