Periyava Golden Quotes-670

பெண்கள் தினமும் ஸ்நானம் செய்து ஈரத் தலையோடு கஷ்டப்பட வேண்டாம் என்ற தாக்ஷிண்யத்தினால்தான் விசேஷ தினங்களைத் தவிர மற்ற நாட்களில் அவர்கள் தலையில் மஞ்சள் ஜலம் புரோக்ஷித்துக் கொண்டாலே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. கர்ப்பம் நன்றாக வளர்ந்தபின் ஒரு கர்ப்ப ஸ்த்ரீ எந்த விரதம் இருந்தாலும் பலிக்காது என்பதுகூட அவள் அந்த ஸ்திதியில் விரதோபவாஸங்களால் காயக்கிலேசம் பண்ணிக் கொள்ள வேண்டாமென்ற கருணையால்தான். குழந்தைப் பிராயத்திலும், வாலிபப் பிராயத்திலும் ஒருவனைப் புஷ்டியாக வளரவிட வேண்டுமென்றுதான் பிரம்மசாரிக்கு விரத உபவாஸங்கள் சொல்லாமல், ஸாத்விக உணவாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமென்று வைத்திருக்கிறது. வியாதியஸ்தருக்கும் அநேக விதிகளிலிருந்து விலக்குக் கொடுத்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்


It is out of consideration for women and with the intention that they should not suffer with wet hair daily after having a head bath that sastras say that except on special occasions, it is enough if the women sprinkle turmeric water on their heads. The declaration that no fasting or Vratam will be of benefit during the pregnancy of a woman is only out of compassion that she should not suffer physically during her pregnancy by such fasting and observances.  Few restrictions are imposed upon the diet of a brahmachari (bachelor student) and he is permitted to eat any amount of Saatvik (mild) food only because he should develop physical strength. Sick persons have also been exempted from many rules.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: