Periyava Golden Quotes-669

இடியும் மழையுமாகக் குருதேசம் ஒரு ஸமயத்தில் பாழாய்ப் போயிருந்தது. அன்ன ஆஹாரம் கிடைக்காமல் எல்லாரும் கஷ்டப்பட்டார்கள். சாக்ராயண உஷஸ்தர் என்று ஒரு ரிஷி. அவரும் அவருடைய இளம் மனைவியும் அலைந்து திரிந்து கொண்டு போய் யானைப் பாகர்கள் வசிக்கிற ஒரு கிராமத்தை அடைந்தார்கள். யானைகளுக்கென்று பூர்வத்தில் தான்யம் சேமித்து வைத்திருப்பார்களல்லவா? யானையின் தீனியில் துளிப் பாகம் மநுஷ்யனுக்குப் போதுமே! அதனால் அங்கே கொஞ்சம் தான்ய நடமாட்டம் இருந்தது. எவனோ ஒரு யானைப் பாகன் ‘குல்மாஷம்’ என்கிற தான்யத்தை (கொள்ளு என்று நினைக்கிறேன்) தின்று கொண்டிருந்தான். பிராணனை ரக்ஷித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபத்-கால தர்மப்படி அவனிடம் உஷஸ்தர் அந்தக் கொள்ளில் கொஞ்சம் யாசித்துப் பெற்றார். யானைப் பாகன் அதை அவர் சாப்பிட்டவுடன் குடிப்பதற்காகத் தான் குடித்துக் கொண்டிருந்த ஜலத்திலிருந்தே கொஞ்சத்தைக் கொடுத்தான். “உச்சிஷ்டத்தை [ஒருவர் உண்டு மிகுந்ததை] வாங்கிக் கொள்ள மாட்டேன்” என்று ஆசார விதியைக் காட்டி உஷஸ்தர் ஜலம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். “கொள்ளு மாத்திரம் உச்சிஷ்டமில்லையா? அதை வாங்கிக் கொண்டீரே!” என்று யானைப் பாகன் கேட்டான். அதற்கு அவர், “அதை வாங்கிச் சாப்பிட்டிராவிட்டால் என் பிராணனே தேஹத்தில் தங்கியிருக்காது. பிராண ரக்ஷணை அவச்யம் என்ற பெரிய தர்மத்துக்காக, அதைவிடச் சிறிய உச்சிஷ்ட தர்மத்தை விட்டேன். இப்போது தீர்த்தமில்லாமல் என் பிராணன் போய்விடாது. சாப்பிட்ட வாய்க்குத் தீர்த்த பானம் இன்பமாகத்தானிருக்குமென்றாலும் இப்போது நான் உன்னிடம் ஜலம் வாங்கிக் குடித்தேனானால் அது எனக்கு இன்பம் தருகிற காமத்துக்காகத்தான் ஆகுமேயன்றி சாஸ்திரோக்தமான ப்ராண ரக்ஷணை என்ற தர்மத்துக்கு ஆகாது. ஆகையால் வேண்டாம்” என்றார். தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்று நாலு சொல்கிறோம். ஆசாரத்தில் அர்த்த-காமங்கள், இம்மை நலன்கள் யாவும் அடக்கமானாலும், இவற்றை விடவும் அது தர்மத்தையே முக்யமாகக் கொண்டு மோக்ஷத்தை லக்ஷ்யமாகக் கொடுக்கிறது என்பதையும் இது புரிய வைக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Once upon a time, Kurudesam was reeling under the ill effects of a severe thunderstorm.  Everybody was suffering due to the shortage of food. A rishi called Saagrayana Ushasthar and his young wife went wandering in serch of food and eventually reached a village where mahouts lived. Did not people used to store grains for the elephants in the olden days? So some little quantity of grains was available in this village. A very small portion of elephant’s food is enough for humans. One mahout was eating ‘Kulmaasham’ (I think it must have been horse gram). In order to save his life, according to the Abath dharma, the rishi requested and got a portion of the horse gram from the mahout. After he ate it, the mahout offered him the water he was drinking. The Brahmin refused, saying that he would not consume leftover food or water. The mahout questioned him as to how he ate the horse gram, if he is steeped in such a principle. The Brahmin replied, “if I had not consumed the horse gram, my life force would have left the body. So, in order to observe the dharma of preserving my life, I gave up the Uchchishta dharma (the dharma of not consuming left over food or drink partially consumed by the others). But now my life force will not leave me if I do not drink this water. Though the consumption of water after the food will give me some pleasure, if I accept this drink from you I will be only satisfying my desire and it will not in accordance with the dharma of praana rakshana (the virtue of protecting one’s life. So I will not accept this drink”. We talk of Dharma (Virtues), Artha (Wealth), Kaama (Desires), and Moksha (Liberation). Though   like Artha and Kaama are covered by Aacharam, this makes it clear that acharam sets liberation as our goal by according a prominent place to Dharma. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. This is the story narrated from Chandogya Upanishad.

  2. Sri Guru Charanam. Very nice incidents naratted in simple words. Very nice information. Thanks a lot. Sri Gurubyo Namaha.

Leave a Reply

%d bloggers like this: