பூர்ண உபவாஸம் முடியாவிட்டால் பழம், பால் சாப்பிடலாம்; பக்வான்னத்துக்கு [நன்றாக ஜலத்தில் வெந்த உணவு வகைகளுக்கு] உள்ள சேஷ தோஷம் தைலபாகத்துக்கு [எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்த பக்ஷணம், வறுவல் முதலானவற்றுக்கு] இல்லை; மடிக்குறைவானவர்களிடம் தீர்த்தம் வாங்கிச் சாப்பிடும்படி நிர்பந்தம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் மோரைத் தெளித்துக் கொண்டால் தோஷ பரிஹாரம் – என்றெல்லாம் பல exemption கொடுத்திருப்பது தாக்ஷிண்ய நோக்கில்தான். பலஹீனர்களிடமுள்ள கருணையாலேயே அவர்களுக்கு விரத உபவாஸங்கள் வேண்டாம், “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை” என்று வைத்திருக்கிறது. இதேமாதிரி ஆபத்துக் காலத்தில் அநேக ஆசாரக் கட்டுப்பாடுகளைக் தளர்த்திக் கொடுத்து ஆபத் தர்மம் என்பதாக ஏற்படுத்தியிருக்கிறது. அப்போதுங்கூட எங்கே அடியோடு முடியவில்லையோ அங்கேதான் ஆசாரத்தைத் தளர்த்தலாம். முடிந்த இடத்தில் பின்பற்றத்தான் வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
If complete fasting is not possible one can consume milk and fruits. Food items which have been fried in ghee or oil do not carry the same disadvantage as that of the foods which have been boiled in water. If one is forced to take water from persons who are not strict about ‘Madi’ rules, then the lapse can be condoned by sprinkling a little butter milk on the water. Such exemptions have been given out of consideration; it is out of kindness towards weak people that it has been stated that they need not fast on the days they are required to do so. Similarly in times of danger, ‘Aabath dharmam’ ensures that many rules of Aacharam are relaxed. But even under those circumstances, rules can be relaxed only if it is impossible to follow them. Otherwise the rules should be observed. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply