புருஷர்கள் எல்லாருக்கும் தேசம் பூராவும் பஞ்ச கச்சம்தான். பெங்காலி பாபு அதைச் சொருகாமல் அப்படியே விட்டாலும் இது ஒரு சின்ன ‘டிஃபரன்ஸ்’தான். ஆனால் ஸ்திரீகளைப் பார்த்தால் நம் ஊரிலேயே அய்யருக்கும் ஐயங்காருக்கும் கட்டு வித்யாஸம். கன்னட தேசத்தில் ஒரு மாதிரி. மஹாராஷ்டிரத்தில் வேறே ஒரு தினுஸு. இதிலெல்லாமே கச்சம் உண்டு. வடக்கேயோ ஸ்திரீகள் உடுத்துவதில் கச்சம் போடுவதில்லை. அங்கே குஜராத், யு.பி., காஷ்மீர், பெங்கால் ஒவ்வொன்றிலும் ஸ்திரீகளுக்கு வெவ்வேறு கட்டு இருக்கிறது. இங்கேயே மலையாளத்தில் கச்சமில்லாமல் ‘முண்டு’ என்று உடுத்துகிறார்கள். இதெல்லாம் அந்தந்த தேசாசாரமாக மதிக்கப்படுகின்றன. ஸமீப காலத்தில் உண்டாக்காமல் நெடுங்காலமாக ஒரு ‘ட்ரெடிஷனாக’ வந்து அங்கங்கேயுள்ள சாஸ்திரஜ்ஞர்களும் அநுஸரித்த எதற்குமே சாஸ்திர ஸம்மதமுண்டு. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Panchakachcham is prescribed for men throughout the country. When the Bengali Babu does not tuck it in, it is still a small difference. But when you see the attire of the women, in our own region there is a difference between the Iyers and the Iyengars. The Kannada and Maharashtrian types of wearing a saree are different. But all these have kachcham. In North India, the ladies do not wear sarees with Kachcham. But there are different types of saree for the Gujaratis, U.P.ites, Bengalis, and the Kashmiris. Even in our region, ladies of Kerala wear mundu instead of kachcham. These attires are respected as representative of the culture of that particular region. There is scriptural approval for anything that is not new but has been traditionally observed by the scripturally knowledgeable people. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam