Periyava Golden Quotes-661

எதையும் எல்லாருக்கும் பொதுவாய் வைப்பதற்கில்லை என்பதால் வர்ணாச்ரமப்படி தர்மாசாரங்களை வித்யாஸமாய் வைத்திருக்கிறது. எதையும் எல்லா ஸந்தர்பத்துக்கும் பொதுவாக வைப்பதற்கில்லை என்பதால் அதற்கு விலக்குத் தந்து ‘ஆபத் [து] தர்மம்’, ‘யாத்ரா தர்மம்’ என்றெல்லாமும் சாஸ்திரங்கள் ‘ரிலாக்ஸ்’ பண்ணியிருக்கின்றன. இதெல்லாம் கூடாது என்று நல்ல எண்ணத்தோடேயே மாற்றினாலும் அது நடைமுறையில் ஸரியாய் வருவதில்ல்லையென்பதற்கு திருஷ்டாந்தமாகத் தான் இந்த இரண்டு பேரையும் (புத்தரையும் காந்தியையும்) சொன்னேன். அவர்களைக் குற்றம் சொன்னதாக அர்த்தமில்லை. தனி வாழ்க்கையில் ரொம்ப சுத்தர்களாக இருந்து கொண்டு, நல்ல தியாகிகளாக ஸர்வ ஜன க்ஷேமத்தையே நினைப்பவர்களாக இருந்த இந்த இரண்டுபேர்கூட நம் வைதிக வழிக்கு வித்யாஸமாகச் செய்தபோது அவர்கள் நினைத்தபடி நல்லது நடக்கவில்லை, அவர்களாலேயே அந்தக் கொள்கைகளைத் தீவிரமாக நடத்திக் காட்ட முடியவில்லை என்று நான் எடுத்துக் காட்டினது, இவர்கள் பண்ணினது தப்பா ஸரியா என்று இவர்களை ‘இன்டிவிஜுவலாக’ [தனி மநுஷ்யர்களாக] வைத்து முடிவு செய்வதற்காக இல்லை; அப்படியானால் நான் செய்கிறவை ஸரியா, தப்பா என்றும் சர்ச்சை செய்ய வேண்டிவரும். அதனாலே இங்கே இன்டிவிஜுவலைப் பற்றிப் பேச்சில்லை. அந்த வாதம் வேண்டாம். ‘சாஸ்திரம்’ என்கிறதில் சொல்லியிருக்கிற அதிகார பேதமும், அதையொட்டி ஏற்படுகிற ஆசார அநுஷ்டான பேதமும் ஸரியா தப்பா என்று எடைபோட்டு, அதை மாற்றி வேறு விதமாய் பண்ணப் போனால் கடைசியில் இப்படிப் புதிசாகப் பண்ணினது பூர்ணமாக நடைமுறைக்கு ஸாத்யப்படாமல் போவதைத்தான் பார்க்கிறோம் என்று நிதர்சனமாகக் காட்டவே இந்த இரண்டு பேர் செய்யததை ஒரு எக்ஸாம்பிளாகக் காட்டினேன். நல்ல அறிவும், அன்பு மனஸும், ஸ்வய நல நோக்கமில்லாத குணமும் கொண்ட இரண்டு பேர் செய்ததே ஸரிப்பட்டு வரவில்லை என்பது சாஸ்திரத்தின் பெருமையை ‘அன்டர்லைன்’ பண்ணிக் காட்டுவதற்காகச் சொன்னதேயன்றி, அவர்களுக்குக் குறைவு சொல்வதற்காக அல்ல. வேறு யாரைச் சொல்லியிருந்தாலும் இவர்களைப் போல எல்லாருக்கும் தெரிந்தவர்களாக இருக்க முடியாது என்பதால் இந்த இரண்டு பேரைச் சொன்னேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

As per the Varnashrama dharma, distinctions have been made among the different castes and different scriptural, dharmic duties have been allotted to them since it has been decided not to generalize things for everyone. Similarly, taking into consideration different circumstances, relaxations have been made to the rules of conduct as ‘Abath Dharmam’ and ‘Yathra Dharmam’.  I quoted Buddha and Gandhi as examples to point out how even good intentioned efforts at changing the scriptural rules of conduct seldom succeed due to practical considerations. It was not my intention to point an accusing finger at them. In spite of leading a virtuous life and being motivated by a desire for universal good, their attempts to change the Vedic rules of conduct did not succeed and they could not implement their principles in their completeness. This is what I wanted to point out and I was not exercising any judgment on their individual conduct. If I do so, then my own acts will be subject to such scrutiny. There is no need here to argue about the individuals. This is not the place for it. I only quoted these two as examples to highlight how when the Vedic rules of conduct are weighed upon and altered then the new rules are never implemented completely. The fact that even these two individuals who were imbued with wisdom, kind heart, and selflessness could not do so only underlines the greatness of our scriptures. My intention was not to belittle them. I chose the two because no one else can be well known to many as these two.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: